தேசிய மட்ட ஸ்னூகர் போட்டிகளில் அண்மைக்காலமாக இளம் வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற முவர்ஸ் கழகத்தைச் (Moors Club) சேர்ந்த எம்.எப்.எம் பாஹிம், இம்முறை நடைபெற்ற 66 ஆவது தேசிய ஸ்னூகர் சம்பியன்ஷிப் போட்டிகளில் முன்னணி வீரர்களையெல்லாம் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
முவர்ஸ் விளையாட்டு சங்க உள்ளக அரங்கில் கடந்த வாரம் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், ஓட்டர்ஸ் விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த ரயன் சோமரத்னவை 6-1 என்ற செட் கணக்கில் தோல்வியடையச் செய்த மொஹமட் பாஹிம், முதல் தடவையாக ஸ்னூகர் சம்பியன் பட்டம் வென்றார்.
இராணுவ மெய்வல்லுனரில் பிரகாசித்த மலையக மற்றும் கிழக்கு வீரர்கள்
55ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ மெய்வல்லுனர்…
இப்போட்டியின் முதல் சுற்றை 66-35 என சோமரத்ன கைப்பற்றினார். தொடரந்து நடைபெற்ற 2 சுற்றுக்களிலும் சோமரத்னவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த பாஹிம், 61-49 என 2ஆவது சுற்றையும், 64-30 என 3ஆவது சுற்றையும் கைபற்றி 2-1 என சுற்றுக்கள் அடிப்படையில் முன்னிலை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4ஆவது சுற்றில் இரு வீரர்களும் பலத்த போட்டியைக் கொடுத்திருந்தாலும் 67-60 என்ற புள்ளிகள் கணக்கில் பாஹிம் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற 5ஆவது மற்றும் 6ஆவது சுற்றுக்களில் தனது ஆதிக்கத்தை செலுத்திய பாஹிம் 72-12, 75-26 என்ற புள்ளிகள் கணக்கில் இலகு வெற்றியைப் பதிவுசெய்தார்.
இறுதியாக 11 சுற்றுக்களைக் கொண்ட இறுதிப் போட்டியில் 7 சுற்றுக்களை தனதாக்கிய இளம் வீரர் பாஹிம், முதல் தடவையாக தேசிய ஸ்னூகர் சம்பியன் மகுடத்தை வெற்றிகொண்டார்.
முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 5-3 என்ற சுற்றுக்கள் அடிப்படையில் முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஆஷிக் ஹுசைனை பாஹிம் வீழ்த்தியிருந்;தார்.
இதேவேளை, கடந்த 19 வருடங்களாக தேசிய ஸ்னூகர் சம்பியன் பட்டத்தை வென்ற சுசந்த பொதேஜுவை அரையிறுதிப் போட்டியில் ஓட்டர்ஸ் கழக வீரர் ரயன் சோமரத்ன வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். எனினும், 3ஆவது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் சுசந்த பெதேஜு வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, இம்முறை தேசிய ஸ்னூக்கர் பட்டத்தை வெற்றி கொண்ட பாஹிம், இம்மாதம் 19ஆம் திகதி மியன்மாரில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச ஸ்னூகர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.
தனது 14ஆவது வயதில் ஸ்னூக்கர் விளையாட்டை ஆரம்பித்த மொஹமட் பாஹிம், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய ஸ்னூகர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் முதல் தடவையாக பங்குபற்றி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணியிலிருந்து விலக்கப்பட்ட லஹிரு குமார
இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான…
இந்த வெற்றியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது பாஹிம் கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் எனது இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த முவர்ஸ் கழகத்தின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சபீக் ரஜாப்டீன் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கும், எனது குடும்பத்தார், நண்பர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் இது வரையான எனது வெற்றிப் பயணத்துக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.
இந்த நிலையில், மிகவும் கஷ்டத்துக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியில் other sportஸ்னூகர் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்ற 27 வயதான பாஹிம், கொழும்பு – மீதொட்டமுல்ல பகுதியில் வாழ்ந்து வருகின்றார். அதேபோன்று முச்சக்கர வண்டி சாரதியான அவர், 2 குழந்தைகளின் தந்தையும் ஆவார்.
இறுதியாக, இந்த வெற்றியானது உண்மையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தொடர்ச்சியாக எனது திறமைகளை வளர்த்து ஒரு சிறந்த ஸ்னூகர் வீரராக வரவேண்டும் என்பதுதான் எனது இலட்சியம். ஆனால் இதற்குத் தேவையான பணம் உள்ளிட்ட தேவைகளை யாராவது தனவந்தர்கள், சமூக நலன் விரும்பிகள் முன்வந்து செய்துகொடுத்தால் நிச்சயம் எனது எதிர்காலம் இன்னும் சிறப்பாக அமையும் எனவும் பாஹிம் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய ஸ்னூகர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்றவரும், அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்ற தேசிய மற்றும் சர்வதேச ஸ்னூகர் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றவருமான மொஹமட் பாசிலின் மூத்த சகோதரர் ஆவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க