சிங்கர் நிறுவன அணிக்கு எதிராக எக்ஸ்போ லங்கா இலகு வெற்றி

207

பிரிவு B வர்த்தக நிறுவன அணிகள் இடையே நடைபெற்று வரும் ஒரு நாள் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (31) நிறைவடைந்த போட்டியொன்றில் எக்ஸ்போ லங்கா அணி, சிங்கர் நிறுவன அணியினை 6 விக்கெட்டுக்களால் தோற்கடித்துள்ளது.

முன்னதாக கொழும்பு கொல்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற எக்ஸ்போ லங்கா அணி சிங்கர் நிறுவன அணியினை முதலில் துடுப்பாட பணித்தது. இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய சிங்கர் நிறுவன அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 203 ஓட்டங்களை குவித்தது.

வர்த்தக டி-20 தொடரின் காலிறுதிக்கு எல்.பி பினான்ஸ், கொமர்ஷல் கிரடிட் அணிகள் தெரிவு

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களின்…

சிங்கர் நிறுவன அணியின் துடுப்பாட்டத்தில் டெவின் பத்மநாதன் 45 ஓட்டங்களையும், ரவீப் யசாஸ் 43 ஓட்டங்களையும் பெற்றனர். மறுமுனையில், எக்ஸ்போ லங்கா அணியின் பந்துவீச்சு சார்பாக சசித் லக்ஷன் 3 விக்கெட்டுக்களையும் ப்ரவின் ஸ்பிரிங் மற்றும் நெரஞ்சயன் வன்னியாரச்சி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 204 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய எக்ஸ்போ லங்கா அணி 45 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 205 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை அடைந்தது.

எக்ஸ்போ லங்கா அணியினை வெற்றிப்பாதையில் நடாத்திய அயன சிறிவர்த்தன அரைச்சதம் தாண்டி 54 ஓட்டங்களை குவித்திருந்ததுடன், நதீர நாவலும் (46) எக்ஸ்போ லங்கா அணியின் வெற்றிக்கு உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

சிங்கர் நிறுவனம் – 203 (43.2) டெவின் பத்மநாதன்  45, ரவீப் யசாஸ் 43, சஷித் லக்ஷன் 3/25

எக்ஸ்போ லங்கா நிறுவனம் – 205/4 (45) அயன சிறிவர்த்தன 54*, நதீர நாவல 46, விஷ்வ சத்துரங்க 39

முடிவு – எக்ஸ்போ லங்கா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<