மாற்றங்கள் ஏதுமின்றி நியூசிலாந்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

286

நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையில் நாளை (31) ஆரம்பமாகவுள்ள T20 தொடரில் விளையாடவுள்ள 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் வீரர்கள் குழாம் நேற்று (30) அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடரை வைட் வொஷ் செய்தது பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய …

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அண்மையில் அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்று முடிந்த T20 தொடரை 3-0 என வைட்வொஷ் செய்திருந்தது. இந்த T20 தொடரில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியின் வீரர்கள் அனைவருமே தற்போது நியூசிலாந்து அணிக்கெதிராக அறிவிக்கப்பட்டுள்ள T20 தொடரிலும் மாற்றங்கள் ஏதுமின்றி உள்வாங்கப்பட்டுள்ளனர். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் உறுதி செய்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் ஆகியோரின் ஆலோசனைகளின் பெயரிலேயே நியூசிலாந்து அணிக்கெதிரான பாகிஸ்தான் குழாத்தில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாமல் போயிருந்தது என கூறப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று T20 போட்டிகளிலும் அபாரமான வெற்றியினை பதிவு செய்த பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ் ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.  இவர்களில் பாபர் அசாம் 81.5 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 163 ஓட்டங்களை மொத்தமாக பெற்றிருந்ததோடு, மொஹமட் ஹபீஸ் 55.3 என்கிற சராசரியுடன் 111 ஓட்டங்களை பெற்றார்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான லசித் …

இதேநேரம், பந்துவீச்சில் ஜொலித்த சதாப் கான், இமாத் வஸீம், சஹீன் சாஹ் அப்ரிடி ஆகியோரும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான T20 தொடரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு தங்களால் முடிந்த பங்களிப்பினை வழங்கியிருந்தனர். இப்படியாக திறமையினை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வீரர்களுக்கு நியூசிலாந்து அணியுடனான T20 தொடர் தொடர்ச்சியான முறையில் பிரகாசிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளது.

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் முதல் போட்டி அபுதாபி நகரில் (நாளை) நடைபெறவுள்ளதோடு அடுத்த இரண்டு போட்டிகளும் துபாய் நகரில் நவம்பர் 2 மற்றும் நவம்பர் 4 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

நியூசிலாந்து அணிக்கு எதிரான பாகிஸ்தான் T20 குழாம்

பக்கார் சமான், மொஹமட் ஹபீஸ், சஹிப்சடா பர்ஹான், பாபர் அசாம், சொஹைப் மலிக், அசிப் அலி, ஹொசைன் தலாட், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), சதாப் கான், சஹீன் சாஹ் அப்ரிடி, உஸ்மான் கான் ஷென்வாரி, ஹசன் அலி, இமாத் வஸீம், வகாஸ் மக்ஸூத், பாஹிம் அஷ்ரப்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…