யுனிலிவரின் முக பராமரிப்பு நாமமான பெயார் எண்ட் லவ்லி மென் (Fair and Lovely Men) அனுசரணையில் நடைபெற்று வரும், வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பிரிவு B (Tier – B) கிரிக்கெட் தொடரில் இன்று (28) நடைபெற்ற எக்ஸ்போ லங்கா அணிக்கு எதிரான போட்டியில், ஹட்டன் நெஷனல் வங்கி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மொரட்டுவ டி சொய்சா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹட்டன் நெஷனல் வங்கி அணி, முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
அவிந்து தீக்ஷனவின் சுழலினால் சம்பியன் பட்டம் வென்ற மாஸ் சிலுவேட்டா
இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய எக்ஸ்போ லங்கா அணி விஷ்வ சதுரங்கவின் பேராட்டமான துடுப்பாட்டத்துக்கு மத்தியில் 36.2 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. விஷ்வ சதுரங்க அதிகபட்சமாக 48 ஓட்டங்களை பெற, மொஹமட் இக்ரம் 26 ஓட்டங்களுக்கு 2 வி்க்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஹட்டன் நெஷனல் வங்கி அணி 26 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஹட்டன் நெஷனல் வங்கி சார்பில் அஷேன் பெர்னாண்டோ அரைச்சதம் கடந்து 57 ஓட்டங்களையும், மாதவ வர்ணபுர ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். எக்ஸ்போ லங்கா அணிசார்பில் ஹஷான் ஹேவநாயக்க 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
எக்ஸ்போ லங்கா – 123 (36.2) – விஷ்வ சதுரங்க 48, மொஹமட் இக்ரம் 26/2
ஹட்டன் நெஷனல் வங்கி – 124/4 (26) – அஷேன் பெர்னாண்டோ 57, ஹஷான் ஹேவநாயக்க 37/2
முடிவு – ஹட்டன் நெஷனல் வங்கி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<