இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கைது

514

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரிய நிதி மோசடி விவகாரம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் பிரதானி விமல் நந்திக திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.  

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் நேற்று (22) மாலை பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கிரஹெம் லெப்ரோய் இரண்டு பதவிகளை வகிப்பது குறித்து ஐசிசி அறிக்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக செயற்பட்டு வரும் கிரஹெம் லெப்ரோய்

இங்கிலாந்து அணியுடன் தற்போது இடம்பெற்றுவரும் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் ஒளிபரப்பு உரிமத்துக்கான 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை தனிப்பட்ட கணக்குக்கு மாற்ற மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கைதுசெய்வதற்காக இதற்கு முன் பல தடவைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தனர். எனினும், அவர் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் ஒளிபரப்பு உரிமம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய 3 கோடியே 80 இலட்சம் ரூபா நிதியினை அமெரிக்காவில் உள்ள தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றியிருப்பதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஒரே ஒரு வெற்றி அடுத்தடுத்த போட்டிகளின் முடிவை மாற்றிவிடும் – டிக்வெல்ல நம்பிக்கை

இலங்கை அணி தற்போதுள்ள நிலையில், ஒரு வெற்றியை பெற்றுக்கொள்ளுமானால், அடுத்தடுத்த போட்டிகளில் நிச்சயமாக தொடர்

இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி விமல் நந்திக திஸாநாயக்க, இன்று (23) கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இங்கிலாந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான ஒளிபரப்பு உரிமைகள் தொடர்பான பணத்தை போலி மின்னஞ்சல்களை அனுப்பி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பிரிவின் பிரதானி விமல் நந்திக்க திஸாநாயக்க, வெளிநாடொன்றிலுள்ள தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கு ஒன்றிற்கு மாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த மாதம் தடுத்து நிறுத்தியது.

இதனையடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசனைக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவினால் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டினை பரிசீலனை செய்த பொலிஸ் மா அதிபர், விசாரணையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் அவரை கைதுசெய்ய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க