இம்ருல் கைசின் சதத்தால் ஜிம்பாப்வேயை வீழ்த்திய பங்களாதேஷ்

232
Bangladesh vs Zimbabwe 1st ODI

இம்ருல் கைஸின் சதத்தின் உதவியோடு ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 28 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணி 1-0 என முன்னிலை பெற்றதோடு ஜிம்பாப்வே தொடர்ச்சியாக 11ஆவது ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

திசரவுடன் இறுதிவரை துடுப்பெடுத்தாடியிருந்தால் போட்டியின் முடிவை மாற்றியிருக்கலாம் – தசுன் சானக

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான..

பங்களாதேஷின், மிர்புரின் பகலிரவு போட்டியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 139 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது ஆரம்ப வீரர் இம்ருல் கைஸ் பின் வரிசை வீரரான மொஹமட் சைபுத்தீனுடன் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்கு 127 ஓட்டங்களை பகிர்ந்கொண்டு அணிக்கு வலுவான ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க உதவினார். இந்த இணைப்பாட்டம் பங்களாதேஷ் அணி 7 ஆவது விக்கெட்டுக்கு பெற்ற மிகச் சிறந்த இணைப்பாட்டமாகவும் இருந்தது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய இம்ருல் கைஸ் ஒருநாள் போட்டிகளில் 3ஆவது சதத்தை பெற்றார். 140 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 13 பௌண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 144 ஓட்டங்களை பெற்றார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது சிறந்த ஓட்டங்களாகவும் இருந்தது.

அதேபோன்று, தனது 4ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் களமிறங்கிய சைபுத்தீன் 69 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் பங்களாதேஷ் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்களை பெற்றது. ஜிம்பாப்வே அணி சார்பில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாவிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

ரோகித் ஷர்மா மற்றும் கோஹ்லியின் அதிரடியால் இந்திய அணிக்கு அபார வெற்றி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு..

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 100 ஓட்டங்களை பெறுவதற்குள்ளேயே 5 விக்கெட்டுகளை இழந்தது. மத்திய வரிசையில் வந்த சீன் வில்லியம்ஸ் பெற்ற 50 ஓட்டங்களுமே அதிகமாகும்.

ஜிம்பாப்வே அணியின் பின்வரிசை வீரர்களின் உதவியோடு அந்த அணி 200 ஓட்டங்களை தாண்டியபோதும் அதனால் வெற்றி இலக்கை நெருங்க முடியவில்லை.

இதன்படி ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களையே பெற்றது.

ஜிம்பாப்வே அணி கடைசியாக மார்ச் மாதம் அயர்லாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதன் பின்னர் அந்த அணி தொடர்ச்சியாக 11 போட்டிகளில் தோல்வியையே சந்தித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் – 271/8 (50) – இம்ருல் கைஸ் 144, மொஹமட் சைபுத்தீன் 50, கைல் ஜார்விஸ் 4/37, டென்டாய் சதரா 3/55

ஜிம்பாப்வே – 234/9 (50) – சீன் வில்லியம்ஸ் 50*, கைல் ஜார்விஸ் 37, மஹிதி ஹஸன் 3/46, நஸ்முல் இஸ்லாம் 2/38

முடிவு – பங்களாதேஷ் 28 ஓட்டங்களால் வெற்றி   

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<