FA கிண்ண 16 அணிகள் சுற்றின் போட்டி அட்டவணை வெளியானது

755

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இந்த பருவகாலத்திற்கான FA கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றின் போட்டி அட்டவணை இன்று (19) வெளியிடப்பட்டுள்ளது.

FA கிண்ணப் போட்டித் தொடரின் இறுதி 64 அணிகளுக்கான சுற்றிலிருந்து அடுத்தடுத்த சுற்றுகளுக்கான அணிகளின் நிரல்படுத்தல், குழுக்கல் முறை மூலமாக இடம்பெற்று வருகின்றது. இதன்படி 16 அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் நிரல்படுத்தல் இம்மாதம் 2 ஆம் திகதி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைமையகத்தில் நடைபெற்றது.

அல் அக்ஸா கல்லூரியை வீழ்த்தி பலத்தை நிரூபித்த ஸாஹிரா

ThePapare.com இன் அனுசரணையில் நடைபெறும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில்…

இதன் போது நிரல்படுத்தப்பட்ட 16  அணிகளில் டயலொக் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் கொழும்பு கால்பந்து கழகம், நியு யங்ஸ் கால்பந்து கழகம், ஜாவா லேன் விளையாட்டு கழகம், சௌண்டர்ஸ் விளையாட்டு கழகம், இலங்கை விமானப் படை, ரினௌன் விளையாட்டு கழகம், நீர்கொழும்பு யூத் விளையாட்டு கழகம் மற்றும் இலங்கை இராணுவப் படை உள்ளிட்ட எட்டு அணிகள் இடம்பிடித்துள்ளன.

அதுமாத்திரமின்றி டயலொக் சம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் நான்கு அணிகள் நேருக்கு நேர் மோதும் வண்ணம் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.  A குழுவில் இடம்பெற்றுள்ள ஜாவா லேன் அணி, B குழுவில் இடம்பெற்றுள்ள கொழும்பு கால்பந்து கழகத்துடன் மோதவுள்ளதுடன், A குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை விமானப் படை அணி, ரினௌன் விளையாட்டு கழகத்துடன் மோதவுள்ளது.

எட்டு போட்டிகள் அடங்கிய 16 அணிகளுக்கான சுற்று எதிர்வரும் 26 ஆம் திகதி களனி கால்பந்தாட்ட வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், சுகததாஸ மைதானத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளது. போட்டிகள் களனி கால்பந்தாட்ட வளாகம், நகர கால்பந்தாட்ட கழகம், அனுராதபுரம் சிறைச்சாலை மைதானம் மற்றும் சுகததாஸ மைதானம் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.

போட்டி அட்டவணை

  • 10.2018 – பி.ப. 3.30 – நியு யங் விளையாட்டு கழகம் (A) vs ரெட் சன் விளையாட்டு கழகம் (B) – களனி கால்பந்தாட்ட வளாகம்
  • 10.2018 – பி.ப. 3.30 – இலங்கை இராணுவப் படை விளையாட்டு கழகம் (A) vs நியூவ் ஸ்டார் விளையாட்டு கழகம் (B) – நகர கால்பந்தாட்ட கழகம்
  • 10.2018 – பி.ப. 3.30 – சிறைச்சாலை விளையாட்டு கழகம் (A) vs புனித நிக்கோலஸ் (B) – அனுராதபுரம் சிறைச்சாலை மைதானம்

இம்முறை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகும் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடர்

இலங்கையின் மிகப் பெரிய கால்பந்து தொடரான டயலொக் சம்பியன்ஸ்…

  • 10.2018 – பி.ப. 3.30 – சிவில் பாதுகாப்பு விளையாட்டு கழகம் (A) vs உருத்திரபுரம் விளையாட்டு கழகம் – அனுராதபுரம் சிறைச்சாலை மைதானம்
  • 11.2018 – பி.ப. 4.00 – இலங்கை பொலிஸ் (A) vs நீர்கொழும்பு யூத் விளையாட்டு கழகம் – சுகததாஸ மைதானம்
  • 11.2018 – பி.ப. 6.00 – இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் (A) vs ரினௌன் விளையாட்டு கழகம் (B) – சுகததாஸ மைதானம்
  • 11.2018 – பி.ப. 4.00 – சௌண்டர்ஸ் விளையாட்டு கழகம் (A) vs எவரடி விளையாட்டு கழகம் – சுகததாஸ மைதானம்
  • 11.2018 – பி.ப. 6.00 – ஜாவா லேன் விளையாட்டு கழகம் (A) vs கொழும்பு விளையாட்டு கழகம் (B) – சுகததாஸ மைதானம்

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க