இங்கிலாந்து அணிக்கு எதிராக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மீணடும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
Photos: Sri Lanka vs England | 2nd ODI
ThePapare.com | Viraj Kothalawala | 13/10/2018 | Editing and re-using images without permission of ThePapare.com will
மாலிங்க மற்றும் இலங்கை பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்த போதும், துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால், மழை இந்தப் போட்டியில் இலங்கை அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 31 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.
எனினும், நீண்ட நாட்களின் பின்னர் அணியில் இணைக்கப்பட்ட மாலிங்க அண்மைய போட்டிகளில் இலங்கை அணிக்காக மிகவும் பெரிய பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட லசித் மாலிங்க, “நான் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மகிழ்ச்சியை விடவும், அணி என்ற ரீதியில் போட்டியில் தோல்வியடைந்தமை அதிக மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது“ என்றார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தேசிய அணிக்காக விளையாடி, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு, ஏனைய பந்து வீச்சாளர்களும் பங்களிப்பு வழங்கினர். பலமான துடுப்பாட்ட வரிசையை கொண்ட இங்கிலாந்து அணியை 278 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தமை சிறப்பான விடயம்.
துரதிஷ்டவசமாக துடுப்பாட்டத்தில் விடப்பட்ட தவறுகளால் எம்மால் வெற்றிபெற முடியவில்லை. எனினும், அடுத்த போட்டியில் இவ்வாறான தவறுகளை திருத்திக்கொள்ள எதிர்பார்க்கிறோம்” என்றார்.
சாதனைகளுடன் தனது மீள்வருகையின் பெறுமதியை உணர்த்திய லசித் மாலிங்க
தம்புள்ளையில் சனிக்கிழமை (13) இடம்பெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின்
இதேவேளை, தொடர்ந்து தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறித்து மாலிங்க கூறுகையில்,
“எனக்கு சுமார் ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட காலப்பகுதி தேசிய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் உள்ளூர் மற்றும் கனடா T20 லீக் போன்ற தொடர்களில் சிறப்பாக பந்து வீசிய காரணத்தால் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளேன்.
தொடர்ந்து அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரியாது. ஆனால், எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அணிக்கு பங்களிப்பை வழங்குவேன்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்படுவேனா? இல்லையா? என்பது குறித்து எனக்கு தெரியாது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டம் இது. இனி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்பதே இலக்கு“ என்றார்.
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 31 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று, 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 17ம் திகதி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க