இலங்கைக்கு விருந்தாளிகளாக வரும் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணி

351

பங்களாதேஷின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி, இலங்கை தீவிற்கு ஒரு மாதகால சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் ஆடவுள்ளது.

இளையோர் ஆசியக் கிண்ணத்தின் சம்பியனாக நாமம் சூடிய இந்தியா

பங்களாதேஷில்…

சனிக்கிழமை (13) இலங்கைத் தீவினை வந்தடையும் விருந்தாளிகள் 2 டெஸ்ட் போட்டிகளிலும்,  5 ஒருநாள் போட்டிகளிலும் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட இலங்கை இளையோர் அணியுடன் மோதுகின்றனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் அனைத்தும், இம்மாதம் 16 ஆம்  திகதி கொழும்பு NCC மைதானத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பமாகின்றது.

இத்தொடரில் ஆடவுள்ள இரண்டு அணிகளும் பல புதுமுக வீரர்களை தம்மகத்தே கொண்டிருக்கின்ற இதேநேரம், இரண்டு இளையோர் அணிகளும் அண்மையில் முடிந்த இளையோர் ஆசியக் கிண்ணத்திலும் போட்டியொன்றில் மோதியிருந்தன. குறித்த போட்டியில் பங்களாதேஷின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியை இலங்கையின் 19 வயதின் கீழ் அணி 6 விக்கெட்டுக்களால் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புதிய மாற்றங்களும், சொந்த மண்ணும் இங்கிலாந்துக்கு பாதகமாகுமா?

அதேவேளை, பங்களாதேஷின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியினர் 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்த சுற்றுப் பயணத்திலேயே டெஸ்ட் போட்டிகளில் ஆடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் தொடரினை அடுத்து, இரண்டு அணிகளும் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இம் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகுவதுடன் நவம்பர் மாதம் 10ஆம் திகதியுடன் இரண்டு அணிகளுக்கும் இடையிலான தொடர் முழுமையாக நிறைவடைகின்றது.

தொடர் அட்டவணை

டெஸ்ட் தொடர்

  • ஒக்டோபர் 16-19 – முதல் இளையோர் டெஸ்ட் போட்டி – NCC மைதானம், கொழும்பு
  • ஒக்டோபர் 23–26 – இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டி – மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானம், கட்டுநாயக்க

ஒரு நாள் தொடர்

  • ஒக்டோபர் 30 – முதலாவது இளையோர் ஒரு நாள் போட்டி – தம்புள்ளை
  • நவம்பர் 1 – இரண்டாவது இளையோர் ஒரு நாள் போட்டி, தம்புள்ளை
  • நவம்பர் 3 – மூன்றாவது இளையோர் ஒரு நாள் போட்டி, தம்புள்ளை
  • நவம்பர் 6 – நான்காவது இளையோர் ஒரு நாள் போட்டி, கட்டுநாயக்க
  • நவம்பர் 9 – ஐந்தாவது இளையோர் ஒரு நாள் போட்டி, கட்டுநாயக்க

* இந்த தொடர் பற்றிய மேலதிக விபரங்கள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் இன்னும் பல சுவாரசியமான விடயங்களை அறிந்து கொள்ள ThePapare.com உடன் இணைந்திருங்கள்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க