கிரஹெம் லெப்ரோய் இரண்டு பதவிகளை வகிப்பது குறித்து ஐசிசி அறிக்கை

605
Labrooy

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக செயற்பட்டு வரும் கிரஹெம் லெப்ரோய், சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) போட்டி மத்தியஸ்தர் என இரண்டு பதவிகளை வகித்து வருவது குறித்து கடந்த காலங்களில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

வரலாற்றின் ஊக்குவிப்புடன் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் மோதும் இலங்கை

ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் மற்றும்…

கிரஹெம் லெப்ரோய், இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் மற்றும் ஐசிசியின் போட்டி மத்தியஸ்தர் என இரண்டு பதவிகளை வகிப்பதற்கு ஐசிசி எவ்வாறு அனுமதி வழங்கியது என்ற கேள்வியும் எழுந்திருந்தது. இதற்கு முதலில் பதிலளித்திருந்த கிரஹெம் லெப்ரோய், கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக செயற்படுவதற்கு ஐசிசி ஒப்புதல் அளித்த பின்னரே, அந்த பதவியில் செயற்பட்டு வருவதாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், கிரஹெம் லெப்ரோய் இரண்டு பதவிகளிலும் நீடிப்பது குறித்து ஐசிசி தங்களுடைய உத்தியோக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் ஐசிசியின் நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்களுக்கான பிரதம முகாமையாளர் எட்ரியன் கிரிப்த் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவராக செயற்படுவதற்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, கிரஹெம் லெப்ரோய் எம்முடன் ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் பின்னர், நாம் அவருக்கு போட்டி மத்தியஸ்தர் பதவியுடன் கிரிக்கெட் சபை பதவியை வகிப்பதற்கு ஒப்புதல் அளித்தோம்என குறிப்பிடப்பட்டுள்ளது.

இளையோர் ஆசியக் கிண்ணத்தின் சம்பியனாக நாமம் சூடிய இந்தியா

பங்களாதேஷில் இடம்பெற்று முடிந்திருக்கும் 19 வயதின்..

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

கிரஹெம் லெப்ரோய், தேர்வுக்குழு தலைவராக இருக்கும் அணி விளையாடும் தொடர்கள் மற்றும் போட்டிகளில், அவர் போட்டி மத்தியஸ்தராக செயற்படக்கூடாது என்பதை நாம் கவனத்தில் கொண்டிருந்தோம்.

இதனால் இலங்கை ஆடவர் அணி மற்றும் இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணிகள் விளையாடும் தொடர்களில் கிரஹெம் லெப்ரோய் போட்டி மத்தியஸ்தராக செயற்படுவதை நாம் தவிர்த்துள்ளோம். எனவே, மகளிர் கிரிக்கெட் தொடர்களில் மாத்திரமே போட்டி மத்தியஸ்தராக கிரஹெம் லெப்ரோய் செயற்படுவார்என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக செயற்பட்டு வரும் கிரஹெம் லெப்ரோய், ஆடவர் அணியை மாத்திரம் தெரிவுசெய்து வருவதுடன், மகளிர் அணியை ரசான்ஜலி டி எல்விஸ் தலைமையிலான மகளிர் தேர்வுக்குழு தெரிவுசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<