அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணிக் குழாத்தில், முன்னணி சகலதுறை வீரரான மொஹமட் ஹபீஸ் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இணைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்தத் தொடருக்கான 17 பேர்கொண்ட அணிக் குழாத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவி்த்திருந்தது.
பாகிஸ்தான் டெஸ்ட் குழாத்திலிருந்து மொஹமட் ஆமீர் நீக்கம்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக …
எனினும், பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் முதற்தர போட்டிகளில் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சை வெளிப்படுத்திய மொஹமட் ஹபீஸிற்கு திடீரென தேசிய அணிக்குள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹபீஸ் ஆசியக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாத்தில் இணைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த போது, துரதிஷ்டவசமாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை.
இதனால், பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் முதற்தர போட்டியொன்றில் சுய் நோர்தன் கேஸ் பைப்லைன்ஸ் லிமிடட் அணிக்காக விளையாடிய ஹபீஸ், பேஸ்வர் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததுடன், அந்த போட்டியில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இவரின் சிறப்பாட்டம் காரணமாக அணி இன்னிங்ஸ் மற்றும் 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. அதுமாத்திரமின்றி தொடரின் மூன்று போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் ஹபீஸ் வீழ்த்தியிருந்தார்.
ஹபீஸின் இந்த சிறந்த வெளிப்படுத்தல்கள் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு, அவரை அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்வாங்கியுள்ளது. இதுதொடர்பில் கிரிக்கெட் சபையின் ஊடக பேச்சாளர் குறிப்பிடுகையில்,
“மொஹமட் ஹபீஸை அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இணைப்பதற்கு கிரிக்கெட் தேர்வுக்குழு மற்றும் அணி முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது. இதன்படி தேசிய அணியுடன் இணைவதற்கு ஹபீஸ் டுபாய் பயணிக்கவுள்ளார்” என்றார்.
முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ள இந்திய அணி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இம்மாதம் 4…
மொஹமட் ஹபீஸ், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இறுதியாக விளையாடியிருந்தார். இதில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய இவர், ஆறு இன்னிங்ஸ்களில் 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்ததுடன், அதில் இரண்டு இன்னிங்ஸ்களில் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்திருந்தார். இதனால், குறித்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட இவர், தொடர்ந்து தேசிய அணியிலிருந்தும் நிராகரிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் டெஸ்ட் குழாம்
சர்ப்ராஸ் அஹமட் (தலைவர்), பர்க்கர் ஷமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், அசாட் சபீக், ஹரிஷ் சொஹைல், உஸ்மான் சல்ஹாவுதீன், யசிர் ஷா, சதாப் கான், பிலால் அசிப், மொஹமட் அப்பாஸ், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், பஹீம் அஷ்ரப், மிர் அம்சா, மொஹமட் ரிஸ்வான், மொஹமட் ஹபீஸ்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…