சிங்கர் 19 வயதுக்குட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இன்று (01) நடைபெற்று முடிந்த மரபுரீதியான போட்டி வெளிச்சமின்மை காரணமாக சமனிலையுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
லக்ஷித ரசன்ஜனவின் சகலதுறை ஆட்டத்தால் நாலந்த கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி
இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ….
வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நேற்று (30) ஆரம்பித்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி அந்த அணி 54.3 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி, 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அணி சார்பில், ஹசித கமகே மற்றும் சொஹான் அனுருத்த ஆகியோர் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதிலும், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஹசித கமகே 41 ஓட்டங்களையும், சொஹான் அனுருத்த 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன், அவிந்து செஹர 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் லிக்ஷான் சசங்க 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சசிந்தர சமித் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த குருகுல கல்லூரி ப்ரவின் நிமேஷ் மற்றும் கெமிர நயந்த்துரு ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 340 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.
குருகுல அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ப்ரவின் நிமேஷ் 110 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய கெமிர நயந்த்துரு 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களுடன் நுவான் சானுக அரைச்சதம் கடந்து 52 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் தானுக நிர்மால் 69 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ள இந்திய அணி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இம்மாதம் 4ஆம்….
பின்னர் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி ஒரு விக்கெட்டினை இழந்து 50 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக நடுவர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் போது புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணிசார்பில் களத்தில் இருந்த சமோத் பெர்னாண்டோ 24 ஓட்டங்களையும், சொஹான் அனுருத்த 21 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர்.
எவ்வாறாயினும் போட்டியின் முதல் இன்னிங்ஸை களனி குருகுல கல்லூரி வெற்றிபெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி –
முதல் இன்னிங்ஸ் – 163/10 (54.3) ஹசித கமகே 41, சொஹான் அனுருத்த 38, லிக்ஷான் சசங்க 12/3
இரண்டாவது இன்னிங்ஸ் – 50/1 (13) சமோத் பெர்னாண்டோ 24*, சொஹான் அனுருத்த 21*
களனி குருகுல கல்லூரி –
முதல் இன்னிங்ஸ் – 340/5d (73.4) ப்ரவின் நிமேஷ் 110, கெமிர நயந்த்துரு 108*, நுவான் சானுக 52, தானுக நிர்மால் 69/2
போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<