டில்ஷானின் மாஸ் யுனிசெலா அணிக்கு இலகு வெற்றி

2171

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள் தொடரில் சம்பத் வங்கி அணிக்கு எதிரான போட்டியில் மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிசெலா அணி டக்வர்த் லுவிஸ் முறையில் 120 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது.

இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியாக கொழும்பு, MCA மைதானத்தில் இன்று (01) நடைபெற்ற ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற திலகரத்ன டில்ஷான் தலைமையிலான யுனிசெலா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  

எல்.பி. பினான்ஸ் அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்த தனன்ஞய டி சில்வா

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26 ஆவது சிங்கர்….

இதன்படி, களமிறங்கிய யுனிசெலா அணியில் ஆரம்ப வரிசை வீரர்கள் நிதானமாக ஓட்டங்களை அதிகரித்தனர். ஆரம்ப வீரரான திலகரத்ன சம்பத் 47 ஓட்டங்களை பெற்றதோடு முன் வரிசையில் வந்த மஹேல உடவத்த சிறப்பாக துடுப்பெடுத்தாடி 72 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷான் 43 ஓட்டங்களை குவித்தார். இலங்கை அணிக்கு மீண்டும் களமிறங்கும் விருப்பத்தை வெளியிட்டிருக்கும் 41 வயதுடைய டில்ஷான் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் தனது துடுப்பாட்ட திறமையை வெளிக்காட்ட தவறி வருகிறார். அவர் இந்தத் தொடரில் ஒரு அரைச் சதத்தைக் கூட இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், மாஸ் ஹோல்டிங்ஸ்யுனிசெலா அணி தனது 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களை குவித்தது. சம்பத் வங்கி சார்பில் சுழற்பந்து வீச்சாளர்களான ஹசித்த நிர்மால் மற்றும் சச்சித்ர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீரவும் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தபோதும் எதிரணிக்கு 73 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய சம்பத் வங்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆரம்ப வரிசையில் எந்த வீரரும் 29 ஓட்டங்களை தாண்டவில்லை. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கௌஷால் சில்வா 28 ஓட்டங்களை பெற்றிருந்தபோது காயம் காரணமாக அரங்கு திரும்பினார்.

மொஹமட் இக்ரமின் அசத்தல் பந்து வீச்சால் ஹட்டன் நெஷனல் வங்கி இலகு வெற்றி

யுனிலிவரின் முக பராமரிப்பு நாமமான பெயார் எண்ட் லவ்லி…..

இதன்படி சம்பத் வங்கி 28 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறிக்கிட்டது. போட்டியை தொடர முடியாத நிலையில் டக்வர்த் லுவிஸ் முறையில் முடிவு நிர்ணயிக்கப்பட்டது. இதன்மூலம் போட்டியில் வலுவான நிலையில் இருந்த யுனிசெலா அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

சம்பத் வங்கி சார்பில் அதிகபட்சமாக பிரிமோஷ் பெரேரா 29 ஓட்டங்களை பெற்றார். இதன்போது யுனிசேலா அணிக்காக மீண்டும் ஒருமுறை தனது சகலதுறை ஆட்டத்தை வெளிக்காட்டிய 20 வயதுடைய கமிந்து மெண்டிஸ் 2 விக்கெட்டுகளை விழ்த்தினார். அவர் துடுப்பாட்டத்தில் 29 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

மாஸ் ஹோல்டிங்ஸ்யுனிசெலா – 294/9 (50) – மஹேல உடவத்த 72, டீ.எம். சம்பத் 47, டீ.எம். டில்ஷான் 43, ஷெஹான் மதுஷங்க 33, கமிந்து மெண்டிஸ் 29, குசல் ஜனித் 20, ஹசித்த நிர்மால் 2/34, சச்சித்ர பெரேரா 2/44, துஷ்மந்த சமீர 2/73

சம்பத் வங்கி – 133/7 (28) – பிரிமோஷ் பெரேரா 29, கௌஷால் சில்வா 28* (காயம்), கமிந்து மெண்டிஸ் 2/27, நிபுன் ரன்சிக்க 2/30

முடிவு மாஸ் ஹோல்டிங்ஸ் யுனிசெலா 12 ஓட்டங்களால் வெற்றி (டக்வர்த் லுவிஸ் முறையில்)