பார்சிலோனா, ரியல் மட்ரிட் அணிகளுக்கு சமநிலை முடிவுகள்

234

நடைபெற்று வரும் லாலிகா சுற்றுப் போட்டிகளில் இவ்வாரத்திற்கான போட்டிகளை ரியல் மட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவு செய்தன.

அத்லடிக் பில்பாகு அணியை எதிர்கொண்ட பார்சிலோனா அணி 1-1 என்ற கோல் என்ற நிலையிலும், அட்லடிகோ மட்ரிட் அணியை எதிர் கொண்ட ரியல் மட்ரிட் அணி கோல்கள் எதுவும் இல்லாத நிலையிலும் போட்டியை சமநிலையில் நிறைவு செய்தன.

UEFA சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த பார்சிலோனா மற்றும் லீவர்பூல்

2018/19 ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான…

பார்சிலோனா எதிர் அத்லடிக் பில்பாகு

லாலிகா சுற்றுப் போட்டியின் கடந்த வாரப் போட்டியில் லெகனஸ் அணியை எதிர் கொண்டு 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியுற்ற பார்சிலோனா அணி, இவ்வாரம் அத்லடிக் பில்பாகு அணியுடனான போட்டியை இறுதி நிமிடத்தில் சமநிலைப்படுத்தியது.

முதல் பதினொரு வீரர்கள் பட்டியலில் லியோனல் மெஸ்ஸி இடம் பெறாத போதும் ,   பார்சிலோனா அணியின் சிறந்த மத்திய கள வீரர்களின் மூலம் முதல் பாதியின் ஆரம்பத்திலிருந்தே பார்சிலோனா அணி தொடராக பல வாய்ப்புக்களை பெற்றது.  

எனினும் அவ்வணியின் வாய்ப்புக்கள் வீணடிக்கப்பட்ட நிலையில், அத்லடிக் பில்பாகு அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. அதன் பலனாக போட்டியின் 41ஆம் நிமிடத்தில் பின்கள வீரர் ஓஸ்கார் டீ மார்கஸ் மூலம் முதல் கோல் பெறப்பட்டது.

முதல் பாதி : பார்சிலோனா 0 – 1 அத்லடிக் பில்பாகு

தனது சொந்த அரங்கில் முதல் பாதியை தோல்வியுடன் நிறைவு செய்த பார்சிலோனா அணி, இரண்டாம் பாதியில் பல மாற்றங்களுடன் களமிறங்கியது.

சிட்டி, லிவர்பூல், செல்சி ஆதிக்கம்: மன்செஸ்டர் யுனைடெட் தடுமாற்றம்

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின்…

தொடராக எதிரணிக்கு சவால் விடுத்த பார்சிலோனா அணியினரால் போட்டியின் இறுதிக் கட்டமான 89ஆம் நிமிடத்தில் போட்டி சமநிலைப்படுத்தப்பட்டது. மாற்று வீரராக களமிறங்கிய முன்கள வீரர் முனீர் அல் ஹத்தாதீ மூலமே பார்சிலோனா அணிக்கான முதல் கோல் பெறப்பட்டது.

முழு நேரம் : பார்சிலோனா 1 – 1 அத்லடிக் பில்பாகு


ரியல் மட்ரிட் எதிர் அட்லடிகோ மட்ரிட்

ரியல் மட்ரிட் மற்றும் அட்லடிகோ மட்ரிட் ஆகிய இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற மட்ரிட் டர்பியானது இரு அணிகளும் எவ்வித கோலும் பெறாத நிலையில் சமநிலையில் நிறைவுற்றது. ரியல் மட்ரிட் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியானது லாலிகா சுற்றுப் போட்டிகளின் 7வது போட்டியாகும்.

போட்டியை ஆரம்பித்த அட்லடி அணிக்கு, போட்டியின் ஆரம்ப நிமிடங்கள் சற்று ஏமாற்றமாகவே அமைந்தன. அதேவேளை, அதிக நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்தாடிய ரியல் மட்ரிட் அணியினராலும் முதல் பாதியின் ஆரம்பத்தில் எந்த வித வாய்ப்பையும் பெற முடியவில்லை.

மலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி

இலங்கை மற்றும் மலேசிய தேசிய…

முதல் பாதியின் இறுதிக் கட்டத்தில் இரு அணியினதும் முன்கள வீரர்கள் தமக்கு கிடைக்கப் பெற்ற வாய்ப்புக்களின் மூலம் எவ்வித கோலும் பெறாத நிலையில் முதல் பாதியானது சமநிலையில் நிறைவுற்றது.

முதல் பாதி : ரியல் மட்ரிட் 0 – 0 அட்லடிகோ மட்ரிட்

இரண்டாம் பாதியின் துவக்கத்திலே மாற்று வீரருடன் களமிறங்கிய ரியல் மட்ரிட் அணி, குறித்த பாதியில் முழுமையாக தனது ஆதிக்கத்தை செலுத்தியது. பல வாய்ப்புக்கள் ரியல் மட்ரிட் அணியினருக்கு கிடைக்கப் பெற்ற போதும் அவற்றை நிறைவு செய்வதிலே அவ்வணியினர் தோல்வியுற்றனர்.  

அட்லடிகோ மட்ரிட் அணியானது இரண்டாம் பாதியில் முழுமையாக எதிரணியன் ஆட்டத்தை தடுத்தாடும்  பணியிலே விளையாடியது. இரண்டாம் பாதியின் நிறைவிலும் இரு அணிகளும் எவ்வித கோலும் பெறாத நிலையில் போட்டியானது சமநிலையில் நிறைவுற்றது.

முழு நேரம் : ரியல் மட்ரிட் 0 – 0 அட்லடிகோ மட்ரிட்

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<