எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெல்வது மிகக் கடினம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ந்தும் இரண்டாவது..
இதேநேரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பை மாற்றி தேர்தலை நடத்த முடியாவிட்டால், இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை நியமித்து, அதில் சிதத் வெத்திமுனி, மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட வீரர்களை இணைத்துக்கொண்டு அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுங்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கட்டுநாயக்க – வலான பகுதியில் நேற்றுமுன்தினம் (24) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
”இலங்கை அணி, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளிடம் தோல்வியைத் தழுவ நேரிடும் என நான் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே எதிர்வுகூறியிருந்தேன். அது தற்போது நிகழ்ந்துள்ளது. இவ்வாறு சென்று கொண்டிருந்தால் இலங்கை அணிக்கு எதிர்காலத்தில் எந்த அணியுடனும் தோல்வியைத் தழுவ நேரிடும் என்பதை ஊகித்துக் கொள்ள முடியும். இதுதான் இலங்கை கிரிக்கெட்டின் இன்றைய நிலை.
ஆனால் எமது கிரிக்கெட்டின் ஆணிவேர் உறுதியாகவே உள்ளது. வீரர்களை எம்மால் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவே, முதலில் இலங்கை கிரிக்கெட்டின் யாப்பினை மாற்றுங்கள். அதன்பிறகு தேர்தலை நடத்துங்கள். அதுவரையும் இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை நியமிக்க வேண்டும். அப்படி அமைக்க முடியாவிட்டால் சிதத் வெத்திமுனி, மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட வீரர்களை இணைத்துக்கொண்டு கிரிக்கெட்டை முன்னேற்றுங்கள். இதுதொடர்பில் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், ஆசிய கிண்ணத்தில் இருந்து இலங்கை முதல் சுற்றுடன் வெளியேறியமைக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸுக்கு மாத்திரம் குறை சொல்வது தவறாகும். தேர்வுக் குழுவும், கிரிக்கெட் நிர்வாகமும் இந்த தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
ஆசிய கிண்ணப் போட்டிகளுக்கு முன் எமது வீரர்கள் உள்ளூர் டி-20 போட்டிகளில் விளையாடி இருந்தனர். ஆனால், ஆசிய கிண்ணத்தில் 50 ஓவர்கள் போட்டியிலேயே விளையாடியிருந்தோம். இதுதானா இலங்கை கிரிக்கெட்டின் திட்டம்? எனவும் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கேள்வி எழுப்பினார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<