அவுஸ்ட்ரலேசியா உள்ளக கிரிக்கெட் கிண்ணத்தில் தொடர் முழுவதும் தோல்வியுறாத அணியாக அவுஸ்திரேலியா வெற்றியை சுவீகரித்தது.
இலங்கை உள்ளக கிரிக்கெட் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட இந்த தொடரில் இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் அணிகள் பங்கேற்றிருந்தன. போட்டிகள் செப்டெம்பர் 20 தொடக்கம் 24 வரை ஓஸ்டேசியா உள்ளக மைதானம் மற்றும் லெஷர் வளாகத்தில் நடைபெற்றன.
இந்தியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அணியினர்
ரெட் புல் அனுசரணையில் 7ஆவது தடவையாக இடம்பெறும் உலகின் சிறந்த பல்கலைக்கழக கிரிக்கெட் அணிக…
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை 21 வயதுக்கு உட்பட்ட ஆடவர், மகளிர் அணிகள் மற்றும் மகளிர் திறந்த அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் இடம்பெற்றன.
சிரேஷ்ட ஆடவர்களின் தொடர் லீக் அடிப்படையில் நடைபெற்றதோடு ஒரு அணி ஏனைய அணியுடன் தலா இரு போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தின. இதில் போட்டியை நடத்தும் இலங்கை அணி இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற்று 20 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தது. சிங்கப்பூர் 9 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
இறுதிப் போட்டியில் ஆடிய அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களை பிடித்தன. இதன்போது இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டியதோடு அவுஸ்திரேலியா தொடர் முழுவதும் தோல்வியுறாத அணியாக நீடித்தது.
21 வயதுக்கு உட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் போட்டிகள், அதேபோன்று மகளிர் திறந்த போட்டி ஆகிய மூன்று இருதரப்பு போட்டிகளிலும் கூட அவுஸ்திரேலியா வெற்றிகளை குவித்தது.
மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் டில்ஷான்
இலங்கை அணி தற்போது சந்தித்துள்ள பின்னடைவை பார்க்கும் போது மீண்டும் சர்வதேசப் போட்டிகளில்…
இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 121 என்ற இமாலய ஓட்டங்களை பெற்றதோடு பதிலெடுத்தாடிய இந்தியா தடுமாற்றம் கண்டு மைனஸ் 42 ஓட்டங்களையே பெற்றது. அந்த அணி வீழ்ச்சியில் இருந்து கடைசி வரை மீளவே இல்லை. இன்னிங்ஸ் முடிவின்போது இந்திய அணி மைனஸ் 32 ஆகவே இருந்தது.
சிறப்பாக ஆடிய டிமோதி பிளோரோஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவர் துடுப்பாட்டத்தில் 14 ஓட்டங்களை பெற்றதோடு பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவுஸ்திரேலியா மொத்தம் 52 புள்ளிகளை பெற்று தொடரை வென்றது.
உள்ளக கிரிக்கெட் போட்டியின் முன்னோடியாக அவுஸ்திரேலியா உள்ளது. அந்த அணி உள்ளகக் கிரிக்கெட்டின் அனைத்து உலகக் கிண்ணங்களையும் வென்று அசைக்க முடியாத அணியாக உள்ளது. தனது உயர் தரத்தை நிரூபித்த அந்த அணி இலங்கை சுற்றுப்பயணத்தில் தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியுறாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<