இம்மாதம் ஆரம்பிக்கும் வர்த்தக சங்க B பிரிவு கிரிக்கெட் தொடர்

219
2nd Fair & Lovely Men MCA B Division

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான (MCA) பிரிவு B கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி MCA மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான பிரதான அனுசரணையை தொடர்ந்தும் இரண்டாவது முறையாக யுனிலிவர் நிறுவனத்தின் ஆண்களுக்கான முக பராமரிப்பு நாமமான பெயார் எண்ட் லவ்லி மென் (Fair & Lovely Men) வழங்கவுள்ளது.

ஆரம்பமாகவுள்ள இந்த தொடரில் எட்டு அணிகள் போட்டியிடவுள்ளதுடன், வெற்றியீட்டும் அணிக்கு இம்முறை பெயார் எண்ட் லவ்லி மென் சவால் கிண்ணம் (Fair & Lovely Men Challenge Trophy) பரிசளிக்கப்படவுள்ளது.

திரிமான்னவின் துடுப்பாட்டத்தை வீணாக்கிய சதீரவின் அபார துடுப்பாட்டம்

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26ஆவது சிங்கர்…

இந்த போட்டித் தொடரில், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங், யுனிலிவர் ஸ்ரீலங்கா, சிடிபி, எச்.என்.பி, எக்ஸ்போ லங்கா, சிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் கொமர்சியல் கிரடிட்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் முதல் சுற்றில் 28 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும்.

பிளேஆஃப் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் குவாலிபையர் (தெரிவுப்) போட்டியில் மோதவுள்ளதுடன், போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். இதனையடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ள அணிகள் எலிமினேட்டர் (விலகல்) போட்டியில் மோதும் என்பதுடன், அதில் தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும்.

பின்னர், குவாலிபையர் போட்டியில் தோல்வியடைந்த அணி மற்றும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெற்ற அணிகள் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் மோதும். இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதுடன், தோல்வியடையும் அணி தொடரில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொள்ளும்.

Photos: 2nd Fair & Lovely Men Mercantile Cricket Tournament | Press Conference

ThePapare.com | Viraj Kothalawala | 20/09/2018 Editing…

இதன்படி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் இரண்டு அணிகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி எம்.சி. மைதானத்தி்ல் (MCA) மைதானத்தில் நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தும்படி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த போட்டித் தொடர் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்திய வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரொஷான் இடமல்கொட

எமது MCA பிரிவு B கிரிக்கெட் தொடருக்கான அனுரசரணையை யுனிலிவர் நிறுவனம் இரண்டாவது தடவையும் வழங்க முன்வந்ததையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த போட்டித் தொடரானது நாடுபூராகவும் உள்ள இளம் புதிய திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதில் பெரும் பங்கை வகிக்கின்றது. இவ்வாறான தொடரை தொடர்ந்ம் ஊக்குவிக்கும் யுனிலிவர் நிறுவனத்துக்கு எமது நன்றிகளை கூறிக்கொள்கிறோம்என்றார்.

இதேவேளை பெயார் எண்ட் லவ்லி மென் இம்முறை MCA பிரிவு B கிரிக்கெட் தொடருக்கு அனுசரணை வழங்குவது மாத்திரமின்றி, www.thepapare.com உடன் இணைந்து நாடுபூராகவும் உள்ள திறமையான வீரர்களை கண்டறிவதற்கான பெல் மென் கிரிக்கெட் அக்கடமி “ FAL Men Cricket Academy“ ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளது.  

மன்னிப்புக் கேட்டார் மெதிவ்ஸ்

ஆப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்வி முழு அணிக்கும்…

இலங்கையை உயரத்துக்கு கொண்டு சென்ற விடயங்களில் ஒன்று கிரிக்கெட். அதனை நாம் மேலும் பலமாக்க வேண்டும். இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களை தேடிப்பிடிக்கும் வகையில், நாம் பெல் மென் கிரிக்கெட் அக்கடமியை ஆரம்பிக்கவுள்ளோம். திறமையான வீரர்களை கண்டறிந்து, அக்கடமி மூலமாக அவர்களை திறமைகளை மேலும் அதிகரிக்க உதவிகளை வழங்கவுள்ளோம்என யுனிலிவரின் முக பராமரிப்பு சிரேஷ்ட வர்த்தக நாம முகாமையாளர் தமிந்த பெரேரா குறிப்பிட்டார்.

அத்துடன் கண்டறியப்படும் திறமையான வீரர்களுக்கு A, B, C என்ற மூன்று பிரிவுகளின் அடிப்படையில் கல்விசார் உதவிகளை வழங்கவும் யுனிலிவர் நிறுவனம் முன்வந்துள்ளது. இளம் வீரர்களின் திறமைகளை வளர்க்க சிறந்த வாய்ப்பை வழங்கவுள்ள யுனிலிவர் கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மிகப்பெரிய பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

அதேபோன்று, இந்தத் தொடரில் இடம்பெறும் போட்டிகளின் புகைப்படங்கள், போட்டி முடிவுகள் மற்றும் உடனடித் தகவல்கள் என அனைத்து விடயங்களையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான www.thepapare.com ஊடாக உங்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<