இலங்கையை வீழ்த்திய புத்தம்புது எதிரணி

1790

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுடனான தீர்க்கமான போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததன் மூலம் மற்றொரு புது அணியிடம் இலங்கை தோல்வியை எதிர்கொண்டுள்ளது.

அதிர்ச்சி தோல்வியுடன் ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் இலங்கை

அபுதாபி நகரில் நேற்று (17) நடைபெற்று முடிந்திருக்கும்…

ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலேயே இலங்கை அணி அந்த அணியிடம் முதல் முறை தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இலங்கை அணி இதுவரை 17 எதிரணிகளை சந்தித்திருப்பதோடு அதில் ஒரு தடவையேனும் தோல்வி அடைந்த 11ஆவது எதிரணியாக ஆப்கானிஸ்தான் புதிய பதிவாக மாறுகின்றது.

சாதனைகளை நெருங்கிய திசரவின் ஐந்து

ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகளுடன் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய திசர பெரேரா ஒருநாள் போட்டிகளில் தனது நான்காவது சிறந்த பந்துவீச்சை வெளிக்காட்டினார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆறு ஆண்டுகளின் பின்னரே திசர பெரேரா 5 விக்கெட்டுகள் அல்லது அதற்கு மேல் வீழ்த்தினார். கடைசியாக, 2012 ஆம் ஆண்டு ஜூனில்  பல்லேகலயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை அவர் சாய்த்தார்.

இந்த 5 விக்கெட்டுகள் மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக முறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர்கள் வரிசையில் சமிந்த வாஸ், சனத் ஜயசூரியவுடன் திசர பெரேரா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த மூவரும் நான்கு தடவைகள் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

சூடு பிடித்துள்ள மொயின் அலியின் ஒசாமா விவகாரம்

அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் தன்னை ஒசாமா..

எனினும், இதன் முதலிடத்தில் இருக்கும் முத்தையா முரளிதரன் 10 தடவைகள் இந்த மைல்கல்லை எட்டி இருப்பதோடு இதன் இரண்டாவது இடத்தில் 7 முறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மாலிங்க உள்ளார்.   

மெண்டிஸின் டக் அவுட் சாதனை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் குசல் மெண்டிஸ் மீண்டும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்து அடுத்தடுத்து இரண்டாவது முறையாகவும் டக் அவுட் ஆனார்.

அதாவது, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக முறை பூஜ்யத்திற்கு ஆட்டமிழந்த வீரராக குசல் மெண்டிஸ், அயர்லாந்து  வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சேசுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் இந்தக் காலப்பகுதியில் தலா 7 தடவைகள் டக் அவுட் ஆகியுள்ளனர்.

அதாவது, குசல் மெண்டிஸ் கடைசியாக ஆடிய 22 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 6 தடவைகள் ஓட்டமின்றி ஆட்டமிழந்திருப்பதோடு, இந்தக் காலப்பகுதியில் அவர் ஒரு அரைச்சதத்தைக் கூட பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<