லாலிகா கால்பந்து சுற்றின் நான்காவது வாரத்திற்கான போட்டிகள் முடிவுற்றுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில் ரியல் சொசிடட் கழகத்திற்கு எதிரான போட்டியில் வெற்றியை பதிவு செய்த பார்சிலோனா அணி இரு புள்ளிகள் வித்தியாசத்தில் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது.
ரியல்சொசிடட் எதிர் பார்சிலோனா
புணர் நிர்மானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரியல் சொசிடட் அணியின் அரங்கமான அனோஏடாவில் நடைபெற்ற இப்போட்டியில் இரண்டாம் பாதியில் பெறப்பட்ட இரு கோல்கள் மூலம் நடப்புச் சம்பியன் பார்சிலோனா அணி போராடி வெற்றியீட்டியது.
லிவர்பூல், செல்சி அணிகளுக்கு தொடர்ந்து ஐந்தாவது வெற்றி
இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது..
இப்போட்டியில் ரியல் சொசிடட் அணி வீரர்கள் போட்டியின் 12 ஆம் நிமிடத்தில் பெற்ற முதலாவது வாய்ப்பின் போதே அவ்வணியின் பின்கள வீரரான அரிடிஸ் இலுஸ்டென்டோ மூலம் முதல் கோலை பெற்றது.
பார்சிலோனா அணியின் மத்திய களத்தின் மந்தமான போக்கின் காரணமாக முதல் பாதியிலே வெற்றிகரமான வாய்ப்புக்கள் எவற்றையும் பெற முடியவில்லை. போட்டியின் 35 ஆம் நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கோணர் வாய்ப்பின் மூலம் பின்கள வீரரான பீகேய் போட்டியை சமப்படுத்த முயன்ற போதும் எதிரணியின் பின்கள வீரர்களின் சவாலிற்கு மத்தியில் அம்முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியவில்லை.
40ஆம் நிமிடத்தில் பெனால்டிக்கான வாய்ப்பொன்றை பெறுவதற்கு பார்சிலோனா அணி வீரர்கள் முயற்சித்த போதும் நடுவர் வழங்க மறுக்கவே முதல் பாதி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் ரியல் சொசிடட் அணிக்கு சார்பாக நிறைவுற்றது.
முதல் பாதி: ரியல் சொசிடட் 1 – 0 பார்சிலோனா
இரண்டாம் பாதியில் மாற்று வீரராக ப்லீப் கோடீன்யோ களமிறக்கப்பட்டார். முதல் பாதியில் சோபிக்க தவறிய பார்சிலோனா அணியின் மத்திய களம் இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்தியதன் மூலம் அவ்வணி தொடராக சிறந்த பல வாய்ப்புக்களை பெற்றது.
அதே போல் பார்சிலோனாவிற்கு சிறந்த முறையில் பதிலடி கொடுத்த ரியல் சொசிடட் அணி வீரர்களால் எதிரணியின் பின்கள வீரர்களின் எந்தவொரு சவாலுமின்றி 60 நிமிடத்திற்கு பின்னர் கிடைக்கப் பெற்ற இரு வாய்ப்புக்களையும் கோலாக்கும் முயற்சியில் பார்சிலோனா அணியின் கோல் காப்பாளரின் திறமைக்கு முன்னால் வெற்றி பெற முடியவில்லை.
லிவர்பூல், செல்சி அணிகளுக்கு தொடர்ந்து ஐந்தாவது வெற்றி
இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது…
எனினும், போட்டியின் 63 மற்றும் 66ஆம் நிமிடங்களில் பெறப்பட்ட கோணர் வாய்ப்புக்களின் போது லுயிஸ் சுவாரேஸ் மற்றும் ஓஸ்மானே டேம்பளே ஆகியோர் மூலம் பெறப்பட்ட இரு கோல்களினால் பார்சிலோனா அணி வெற்றியை பதிவு செய்தது.
போட்டியின் இறுதித் தருவாயில் ரியல் சொசிடட் அணி பல வாய்ப்புக்களை பெற்ற போதும் அனுபவமிக்க பின்கள வீரர்களை தாண்டி அவர்களால் போட்டியை சமப்படுத்த முடியவில்லை. இறுதி நேர முடிவில் பார்சிலோனா அணி மேலதிகமாக பெற்ற ஓரு கோலின் மூலம் போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்தது.
முழு நேரம்: ரியல் சொசிடட் 1 – 2 பார்சிலோனா
அத்லடிக் பில்பாகு எதிர் ரியல் மட்ரிட்
அத்லடிக் பில்பகு மற்றும் ரியல் மட்ரிட் அணிகளிற்கிடையில் சன் மமீஸ் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியானது 1-1 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலையில் நிறைவுற்றது.
இப்பருவகாலத்திற்கான லாலிகா போட்டிகளில் கடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்த ரியல் மட்ரிட் அணி இப்போட்டியை சமநிலையில் நிறைவு செய்ததன் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
போட்டியின் முதல் கோலை ஈகர் முனீயானீன் போட்டியின் 32 ஆம் நிமிடத்தில் பெற்று முதல் பாதியில் அத்லடிக் அணிக்கு முன்னிலை கொடுத்தார். எனினும் இரண்டாம் பாதியில் மாற்று வீரராக களமிறங்கிய இஸ்கோ மூலம் போட்டியானது 63 ஆம் நிமிடத்தில் சமப்படுத்தப்பட்டது.
இரு அணிகளும் சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் மூலம் சிறந்த பல வாய்ப்புக்களை பெற்ற போதும் இரு அணியின் கோல் காப்பாளர்களும் அவற்றை சிறந்த முறையில் தடுத்தாடியதன் விளைவாக எந்தவொரு அணியினராலும் வெற்றியை தன்வசம் உறுதி செய்ய முடியவில்லை.
முழு நேரம்: அத்லடிக் பில்பாகு 1 – 1 ரியல் மட்ரிட்
மேலும் சில போட்டி முடிவுகள்
- ராயோ வெலக்கானா 1 – 0 ஹீஏஸ்கா
- விலரல் 1 – 0 லெகனஸ்
- இஸ்பான்யோல் 1 – 0 லெவன்டே
- அலவெஸ் 1 – 0 வெலாடோலிட்
- வெலன்ஸியா 0 – 0 ரியல் பெடிஸ்
- அட்லடிகோ மட்ரிட் 1 – 0 ஏயபர்