இமாலய ஓட்டங்களுடன் ஆரம்பமான வர்த்தக நிறுவனங்களின் பிரீமியர் லீக்

434

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26 ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள் தொடர் இன்று (15) ஆரம்பமானது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் ஆரம்ப நாளில் மூன்று போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளின் விபரம் வருமாறு,

மாஸ் சிலுயேட்டா எதிர் கொமர்சியல் கிரெடிட்

மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கொமர்சியல் கிரெடிட் அணி தனது சகலதுறை ஆட்டத்தின் மூலம் மாஸ் சிலுயேட்டாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சிலுயேட்டா அணியின் எந்த துடுப்பாட்ட வீரரும் பெரிய ஓட்டங்களை நோக்கி செல்லாத நிலையில் அந்த அணி 131 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இரோஷ் சமரசூரிய பெற்ற 29 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டமாகும். கொமர்சியல் கிரெடிட் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசினர்.

கடந்த கால ஆசியக் கிண்ணத் தொடர்களின் சிறந்த பதிவுகள் – ஒரு மீள்பார்வை

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 14 ஆவது அத்தியாயம், இன்று சனிக்கிழமை…

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொமர்சியல் கிரெடிட் அணியின் சதுன் வீரக்கொடி ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெற்றதன் மூலம் அந்த அணி 15.5 ஓவர்களிலேயே 134 ஓட்டங்களை எட்டி வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

மாஸ் சிலுயேட்டா – 131 (31.1) – இரோஷ் சமரசூரிய 29, நிமந்த சுபசிங்க 28, அசித்த பெர்னாண்டோ 3/26, மலிந்த புஷ்பகுமார 2/23, சுராஜ் ரந்திவ் 2/12, வனிந்து ஹசரங்க 2/18

கொமர்சியல் கிரெடிட் – 134/2 (15.5) – சந்துன் வீரக்கொடி 80*, முனவீர 31, நுவன் பிரதீப் 1/14

முடிவு கொமர்சியல் கிரெடிட் 8 விக்கெட்டுகளால் வெற்றி


ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் எதிர் கான்ரிச் பினான்ஸ்

வர்த்தக நிறுவனங்கள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களில் ஒன்றாக ஜோன் கீல்ஸ் அணி 402 ஓட்டங்களை பெற, அந்த சவாலான வெற்றி இலக்கை எட்ட முடியாமல் கான்ரிச் பினான்ஸ் 186 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

மக்கொனை சர்ரே வில்லேஜ் அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கான்ரிச் பினான்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

எனினும் துடுப்பெடுத்தாட வந்த ஜோன் கீல்ஸ் அணி அதிரடியாக பந்துகளை பௌண்டரிக்கு விளாசி ஆரம்பம் முதல் வேகமாக ஓட்டங்களை குவித்தது. குறிப்பாக இடது கை துடுப்பாட்ட வீரர் லஹிரு மிலந்த அதிரடி சதம் ஒன்றை விளாசினார்.

தமது கடைசி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வீரர்கள்

கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் ஜாம்பவான் யார்? என்பதை அடையாளம்…

அதேபோன்று பானுக்க ராஜபக்ஷ (71) மற்றும் இஷான் ஜயரத்ன (62) வேகமாக அரைச்சதங்களை பெற்றனர். இதன் மூலம் ஜோன் கீல்ஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 402 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கான்ரிச் பினான்ஸ் அணி 50 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

போட்டியின் சுருக்கம்

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 402/7 (50) – லஹிரு மிலந்த 114, பானுக்க ராஜபக்ஷ 71, இஷான் ஜயரத்ன 62, மனோஜ்  சரத்சந்திர 46,  மதுக்க லியனபதிரனகே 38*, சஹான் விஜேரத்ன 2/46

கான்ரிச் பினான்ஸ் – 216/6 (50) – பதும் நிஸ்ஸங்க 62, சஹான் விஜேரத்ன 49, விஷ்வ தீமந்த 40*, ஒசந்த பெர்னாண்டோ 36, பானுக்க ராஜபக்ஷ 2/27, மதுக்க லியனபதிரனகே 2/14

முடிவு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 186 ஓட்டங்களால் வெற்றி

எல்.பி. பினான்ஸ் எதிர் சம்பத் வங்கி

எல்.பி. பினான்ஸ் அணியின் ஆரம்ப வரிசை துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி ஆட்டங்கள் மூலம் சம்பத் வங்கி அணிக்கு எதிரான வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பிரீமியல் லீக் தொடரின் முதல் போட்டியில் அந்த அணி 155 ஓட்டங்களால் இலகு வெற்றி ஈட்டியது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட எல்.பி. பினான்ஸ்  அணி சார்பில் ஆரம்ப வரிசை வீரர்களான சதீர சமரவிக்ரம, அஞ்செலோ பெரேரா அதிரடி சதம் விளாசியதோடு இசுர உதான ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களை குவித்தார்.

டி.எஸ். சேனாநாயக்க கல்லூரிக்கு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

சிங்கர் 19 வயதுக்குட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு…

இதன் மூலம் எல்.பி. பினான்ஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 375 ஓட்டங்களை குவித்தது. எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்பத் வங்கி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களையே பெற்றது.

போட்டியின் சுருக்கம்

எல்.பி. பினான்ஸ் – 375/3 (50) – சதீர சமரவிக்ரம 121, எஞ்செலோ பெரேரா 105*, இசுரு உதான 82*, சரித் அசலங்க 50, ரங்கன ஹேரத் 1/42

சம்பத் வங்கி – 220/9 (50) – ஹசந்த பெர்னாண்டோ 65, ரொமேஷ் புத்திக்க 41, தரிந்து கௌஷால் 39, கௌஷால் சில்வா 24, சதுரங்க குமார 3/24, சரித் சுதாரக 3/25, சரித் அசலங்க 2/30

முடிவு எல்.பி. பினான்ஸ் 155 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க