இலங்கை அணியில் இணையவுள்ள அகில தனன்ஞய

1298

நாளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் சுழல் வீரரான அகில தனன்ஞய உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் தனது மனைவியின் பிரசவத்தை கருத்திற்கொண்டு அவர் இலங்கை அணியுடன் கடந்த செவ்வாய்க்கிழமை (11) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிக்காது போயிருந்தார்.

இலங்கை அணியில் இருந்து சந்திமால் நீக்கம், திக்வெல்ல இணைப்பு

இலங்கை டெஸ்ட் அணித் தலைவர்…

எனினும், அகில தனன்ஞயவின் மனைவியான நெத்தாலி தெக்ஷினி இன்று (14) ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ள நிலையில், புதிய மகனின் வருகையினால் அகில தனன்ஞய இன்னும் ஓரிரு நாட்களில் ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள இலங்கை அணியில் இணைவார் எனக் கருதப்படுகின்றது.

அந்தவகையில் நாளை (15) பங்களாதேஷ் அணியுடன் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ணத்தின் ஆரம்ப போட்டியில் அகில தனன்ஞய இலங்கை அணிக்காக விளையாடாது போனாலும், ஞாயிற்றுக்கிழமை (17) ஆப்கானிஸ்தான் அணியுடனான இலங்கையின் இரண்டாவது போட்டியில் பங்கெடுப்பார் எனக் கூறப்படுகின்றது.

ஆசியக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக, அகில தனன்ஞய அவரின் மனைவியின் பிரசவத்தினால் ஆசியக் கிண்ணத்தின் முதற் சுற்றுப் போட்டிகள் எதிலும் விளையாடாது போகலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவர் பதவியிலிருந்து விலகியதன் பின்னணி என்ன?: மனந்திறந்த டோனி

இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரையில்..

அகில அவரின் மனைவியின் பிரசவத்தினை அடுத்து இலங்கை அணிக்காக விளையாட முடியும் என்கிற செய்தி ஆசியக் கிண்ணத்தில் உபாதைகள் காரணமாக இரண்டு முக்கிய வீரர்களை (தினேஷ் சந்திமால், தனுஷ்க குணத்திலக்க) இழந்திருக்கும் இலங்கை அணிக்கும், இலங்கை இரசிகர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் ஒரு விடயமாகவே கருதப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அகில தனன்ஞய ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாகும் திகதியினை இன்று அல்லது நாளை உறுதி செய்யும் எனக் கூறப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு<<