யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் கொழும்பு புனித ஜோசப்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையில் மூன்றாவது வருடமாக இடம்பெற்ற அதிபர் வெற்றிக்கிண்ண (RECTOR’S TROPHY) போட்டியில் இம்முறை இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் புனித ஜோசப் கல்லூரி வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணித்தலைவர் பியேட்றிக் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம்
பத்திரிசியார் கல்லூரியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வெறுமனே 17 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழப்புச் செய்யப்பட்டனர். 3 ஆவது விக்கெட்டுக்காக பொய்ரர் காஸ்ரோவுடன் இணைந்து 40 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்தவேளை, 21 ஓட்டங்களுடன் அஷேன் டானியலின் பந்தில் அன்ரனி டெஸ்வின் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பேர்ணாட்ஸன் பெறுமதியான 35 ஓட்டங்களை பெற்றிருந்தவேளையில் லக்ஷான் கமகேயின் பந்தில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த வீரர்கள் லக்ஷான் கமகே, அஷேன் டானியல் ஆகியோரின் வேகத்திற்கு முகங்கொடுக்க முடியாது விரைவாக விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த புனித பத்திரிசியார் கல்லூரி அணி 161 ஓட்டங்களை தமது முதலாவது இன்னிங்ஸிற்காக பெற்றுக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் பொய்ரர் காஸ்ரோ ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களினைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் லக்ஷான் கமகே 5 விக்கெட்டுக்களையும், அஷேன் டானியல் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பின்னர் தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ஜோசப் கல்லூரியின் முதல் விக்கெட் விரைவாக சாய்க்கப்பட்டாலும், தொடர்ந்து வந்த வீரர்கள் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த 313 என்ற வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டது. புனித ஜோசப் கல்லூரி சார்பில் அதிரடியாக ஆடிய ஜசித் ருபசிங்க 16 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 84 பந்துகளில் 105 ஓட்டங்களையும், டிலேஷ் பெரேரா 46 ஓட்டங்களையும், ஷெவன் ரஷுல் 42 ஓட்டங்களினையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.
பந்துவீச்சில் பொய்ரர் காஸ்ரோ 4 விக்கெட்டுக்களையும் , எட்வேர்ட் டிலக்சன், டக்ளஸ் டனீசியஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
152 ஓட்டங்கள் பின்னிலையில் பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கு துடுப்பாட்ட வீரர்கள் நிலையான இணைப்பாட்டத்தினைக் கட்டியெழுப்பத் தவற 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. புனித பத்திரிசியார் கல்லூரி சார்பில் ரொஷாந்தன் 30 ஓட்டங்களையும், பியேட்றிக், பேர்ணாட்சன் முறையே 26 மற்றும் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
போனஸ் புள்ளியால் அரையிறுதி வாய்ப்பை பெற்ற கிரிந்திவல மத்திய கல்லூரி
இரண்டாவது இன்னிங்ஸிலும் பந்துவீச்சில் அசத்திய அஷேன் டானியல் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் புனித பத்திரிசியார் கல்லூரி அணியினை வெற்றி பெற்ற பிரிவு 1 இன் நடப்பு சம்பியன்களான புனித ஜோசப் கல்லூரி அணியினர் 2018/19 பருவகாலத்தையும் வெற்றியுடன் ஆரம்பித்திருக்கின்றனர்.
போட்டியின் சுருக்கம்
புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் (முதலாவது இன்னிங்ஸ்) – 161 (46.4) – பொய்ட்டர் கஸ்ரோ 65*, அந்தோனிப்பிள்ளை பேர்ணாட்சன் 36, லக்ஷான் கமகே 5/51, அஷேன் டானியல் 4/58
புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 313 (69.2) –ஜசித் ரூபசிங்க 105, டிலேஷ் பெரேரா 46, ஷூவன் ரசூல் 42, பொய்ட்டர் கஸ்ரோ 4/64
புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 127 (45.1) – ஐவன் ரொஷாந்தன் 30, டெரிக் பியெட்றிக் 26, அந்தோனிப்பிள்ளை பேர்ணாட்சன் 24, அஷேன் டானியல் 6/53, மிரங்க விக்ரமகே 3/28
விருதுகள்
சிறந்த துடுப்பாட்டவீரர் – ஐசித் ருபசிங்க
சிறந்த பந்துவீச்சாளர் – அஷேன் டானியல்
சிறந்த களத்தடுப்பாளர் – டெரிக் பியேட்றிக்
எதிரணியின் சிறந்த வீரர் – பொயிட்டர் காஸ்ரோ
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க