தற்பொழுது பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்றுவரும் சாப் சுசுகி கிண்ண கால்பந்து சுற்றுப் போட்டியின் அரையிறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்பை இலங்கை கால்பந்து அணி நாணய சுழற்சியின்மூலம் இழந்துள்ளது.
இந்த சுற்றுப் போட்டியில் B குழுவில் அங்கம் வகிக்கும் இலங்கை அணி ஏற்கனவே, குழு மட்டத்திற்கான தமது இரண்டு போட்டிகளையும் நிறைவு செய்தது. அதில், முதல் போட்டியில் இந்திய அணியிடம் 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்ந்த இலங்கை வீரர்கள், மாலைத்தீவுகள் அணியுடனான அடுத்த போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல்கள் எதுவும் இன்றி போட்டியை சமநிலையில் நிறைவு செய்தது.
அசத்தல் ஆட்டத்தால் மாலைத்தீவுகளை சமன் செய்த இலங்கை
முன்னணி வீரர்களைக் கொண்ட மாலைத்தீவுகள் அணியை சிறந்த முறையில்..
இதன்படி, இலங்கை அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு சமநிலையுடன் ஒரு புள்ளியைப் பெற்றிருந்தது. அதேவேளை, இந்தியா ஒரு போட்டியில் விளையாடி அதில் வெற்றியைப் பதிவு செய்து 3 புள்ளிகளுடன் இருந்தது. அதேபோன்று, மாலைத்தீவுகள் அணி தாம் விளையாடிய ஒரு போட்டியை சமநிலையில் முடித்து ஒரு புள்ளியுடன் இருந்தது.
இவ்வாறான ஒரு நிலையில், இன்று (9) இந்தியா மற்றும் மாலைத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான குழு நிலைக்கான கடைசி மோதல் இடம்பெற்றது. இந்தப் போட்டி மாலைத்தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பைத் தீர்மானிப்பதற்கான முக்கியமான போட்டியாக அமைந்தது.
இதில், இலங்கை அரையிறுதிக்கான வாய்ப்பைப் பெறுவதற்கு இந்திய அணி குறைந்தது 3 கோல்கள் வித்தியாசத்தில் மாலைத்தீவுகள் அணியை வெற்றி பெற வேண்டிய தேவை இருந்தது. மறுபுறம், தமக்கான அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய மாலைத்தீவுகள் அணி இந்திய அணியுடன் ஒரு கோல் வித்தியாசத்திலான தோல்வி அல்லது சமநிலையான முடிவு அல்லது வெற்றி ஒன்றைப் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.
SAFF முதல் மோதலில் பலம் மிக்க இந்தியாவிடம் வீழ்ந்தது இலங்கை
பங்களாதேஷின் பங்கபந்து தேசிய அரங்கில் இடம்பெற்ற சாப் (SAAFF) சுசுகி…
இந்நிலையில் இடம்பெற்ற போட்டியில் மாலைத்தீவுகள் அணி இலங்கை அணியைப் போன்றே 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்தது. இதன்படி, இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் அணிகள் தலா இரு வெற்றி, ஒரு சமநிலையான முடிவுகள் மற்றும் தலா இரண்டு என்ற கோல்கள் வித்தியாசத்திலும் இருந்தன.
எனவே, அரையிறுதிக்கான அணியைத் தீர்மானிப்பதற்கு இடம்பெற்ற நாணய சுழற்சியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இதனால் மாலைத்தீவுகள் அணி அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள, அதிஷ்டம் கைகொடுக்காத இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<