இந்திய பெண்கள் அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம்

305

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கை பெண்கள் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர்களில் ஆடவுள்ளது. இந்த தொடர் வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியாக மீண்டும் சமரி அட்டபத்து

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் அடுத்த வாரம் காலியில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட

இந்திய பெண்கள் அணி இலங்கை மண்ணில் இரு தரப்பு தொடரில் ஆடுவது இது முதல் முறையாகும். புதிய பயிற்சியாளர் ஹர்ஷ டி சில்வாவின் கீழ் போட்டியை நடத்தும் இலங்கை அணி தனது சொந்த மண்ணின் சாதக சூழலை பயன்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளது. ஹர்ஷ டி சில்வா இரண்டாவது முறையாகவே தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார்.   

இந்த தொடர் குறித்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஹர்ஷ டி சில்வா, கடந்த மூன்றுவார காலத்தில் பெண்கள் அணி மேற்கொண்ட முயற்சி மற்றும் முன்னேற்றம் பற்றி தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார். ஆடுகளத்தில் எமது திறமை பற்றிய நம்பிக்கையுடனேயே இந்த தொடரில் பங்கேற்பதாகவும் அவர் கூறினார்.   

‘கடந்த காலங்களில் நாம் போட்டிகளில் சிறப்பாக தயார்பெற்று திட்டங்களை வெளிப்படுத்தி எப்போதும் வெற்றி கண்டிருக்கிறோம். நாம் இதனையே செய்ய எதிர்பார்த்திருக்கிறோம்’ என்று இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து குறிப்பிட்டார்.

செப்டம்பர் மாதத்தில் இலங்கை வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

உலகில் நான்காவது தர நிலையில் இருக்கும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை

பெண்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றவராக சாதனை படைத்திருக்கும் இந்திய அணித்தலைவி மிதாலி ராஜ், அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பொவாரின் வழிகாட்டலின் கீழ் இந்த இருதரப்பு தொடரில் அணியின் திறமையை வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளார். பல மாதங்களாக இடைக்கால பயிற்சியாளராக பணியாற்றிய பொவார், 2018 நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ICC உலகக் கிண்ண போட்டி வரை தலைமை பயிற்சியாளராக கடமையாற்ற கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.

போட்டி அட்டவணை

செப்டெம்பர் 11 – முதலாவது ஒருநாள் போட்டி (காலி சர்வதேச அரங்கு)

செப்டெம்பர் 13 – இரண்டாவது ஒருநாள் போட்டி (MCG – கட்டுநாயக்க)

செப்டெம்பர் 16 – மூன்றாவது ஒருநாள் போட்டி (MCG – கட்டுநாயக்க)

செப்டெம்பர் 19 – முதலாவது டி-20 போட்டி (MCG – கட்டுநாயக்க)

செப்டெம்பர் 21 – இரண்டாவது டி-20 போட்டிய ( CCC- கொழும்பு)

செப்டெம்பர் 22 – மூன்றாவது டி-20 போட்டி ( CCC- கொழும்பு)

செப்டெம்பர் 24 – நான்காவது டி-20 போட்டி ( CCC- கொழும்பு)

செப்டெம்பர் 25 – ஐந்தாவது டி-20 (MCG – கட்டுநாயக்க)

ஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையடுத்து சற்று எழுச்சியும்,

இந்திய பெண்கள் ஒருநாள் குழாம்:

மிதாலி ராஜ் (தலைவி), ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிரி மன்தனா, பூனம் ராவுத், தீப்தி ஷர்மா, தயாலன் ஹேமலதா, ஜெமீமா ரொட்ரிகஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, டானியா பாதியா, எக்தா பிஷ்த், பூனம் யாதவ், ராஜேஷ்வரி கயக்வாட், ஜுலன் கோஸ்வாமி, மன்சி ஜோஷி, ஷிகா பாண்டே

இந்திய பெண்கள் டி-20 குழாம்:

ஹர்மன்பிரீத் காவுர் (தலைவி), ஸ்மிரிதி மன்தனா, மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜமீமா ரொட்ரிகஸ், தயாலன் ஹேமலதா, தீப்தி ஷர்மா, அனூஜா பாடில், டானியா பாதியா, பூனம் யாதவ், எக்தா பிஷ்த், ராதா யாதவ், ஷிகா பாண்டே, மன்சி ஜேஷி

இலங்கை பெண்கள் ஒருநாள் குழாம்:   

சமரி அத்தபத்து (தலைவி), பிரசாதனி வீரக்கொடி, அனுஷ்கா சஞ்ஜீவனி, நிபுனி ஹன்சிக்கா, ஹாசினி பெரேரா, டிலானி மனோதரா, ஷஷிகலா சிறிவர்தன, நிலக்ஷி டி சில்வா, இமல்கா மெண்டிஸ், சிறிபாலி வீரக்கொடி, சுகன்திகா குமாரி, இனோகா ரனவீர, உதேஷிகா பிரபோதனி, அமா காஞ்சனா, கவிஷா டில்ஹாரி   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க