இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லியின் விக்கெட்டினை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளதை ஊடகங்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த வருடம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு பின்னர், எதிர்வரும் 19ஆம் திகதி ஆசியக் கிண்ண குழுநிலை போட்டியில் சுமார் ஒருவருட காலத்துக்கு பின்னர் மோதவுள்ளன.
ஆசிய கிண்ணத்தில் கோஹ்லிக்கு ஓய்வு; இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மா
இந்த மாத நடுப்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில்..
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணியை 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. குறித்த போட்டியில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், விராட் கோஹ்லியின் விக்கெட்டினை மொஹமட் அமீர் கைப்பற்றியிருந்தார்.
இந்த நிலையில் இம்முறை ஆசிய கிண்ணத்தில் விராட் கோஹ்லியின் விக்கெட்டை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஹசன் அலி இருந்துள்ளார். எனினும், ஆசிய கிண்ணத்தில் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்திய அணித் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஹசன் அலி ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஹசன் அலி,
“விராட் கோஹ்லி மிகச் சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் வீரர். அவர் இல்லாவிட்டாலும் இந்திய அணி பலமாகவே உள்ளது. எனினும், அழுத்தத்தை கையாளுவது என்ற ரீதியில் பார்க்கும் போது விராட் கோஹ்லிக்கு நிகரான வீரர்கள் இல்லை. அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் இருந்தாலும், அவரை போல அழுத்தத்தை கையாள முடியாது.
இளம் வீரர்களாக இருக்கும் ஒவ்வொரு பந்து வீச்சாளர்களுக்கும் விராட் கோஹ்லியின் விக்கெட்டை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், துரதிஷ்டவசமாக ஆசிய கிண்ண குழாத்தில் அவர் இணைக்கப்படவில்லை. ஆனால் அடுத்த முறை போட்டியிடும் போது கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு முயற்சிப்பேன்”
ஆசிய கிண்ண பாகிஸ்தான் குழாமில் புதிய அப்ரிடி
ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி….
அத்துடன் ஆசிய கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணி தேர்வின் போது, யோ யோ டெஸ்ட் (YO YO Test) எனப்படும் உடற்தகுதி பரிசோதனையில் ஹசன் அலி 19.8 புள்ளிகளை பெற்று, விராட் கோஹ்லியின் உடற்தகுதியையும் மிஞ்சிவிட்டார் என்ற கருத்துகள் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து தெரிவித்த ஹசன் அலி,
“கிரிக்கெட்டின் மூன்று வகை போட்டிகளிலும் விளையாட வேண்டுமென்றால் உடற்தகுதி அவசியம். உடல் ஒத்துழைக்குமானால் நமது திறமைகள் அதிகமாக வெளிப்படும். இளம் வீரர் என்பதால் எனது உடற்தகுதிக்கு முக்கியத்துவம் வழங்குகிறேன்.
நான் எனது உடற்தகுதிக்காக பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். அதனால் விராட் கோஹ்லியின் உடற்தகுதியுடன் என்னை ஒப்பிடுவது சரியாக இருக்காது. விராட் கோஹ்லி என்னைவிட பெரியவர். அவர் கிரிக்கெட் ஜாம்பவான். அவர், அவருக்கான உடற்தகுதியுடன் உள்ளார். நான் எனது உடற்தகுதியை தொடர்ந்தும் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்”
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இம்முறை ஆசிய கிண்ணத்தில் குறைந்தது இரண்டு தடவைகள் போட்டியிட வாய்ப்புள்ளது. இறுதிப் போட்டி வரை சென்றால் மூன்று தடவைகள். இந்நிலையில் இந்திய அணியை பாகிஸ்தான் எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற தனது நிலைப்பாட்டையும் ஹசன் அலி கூறியுள்ளார்.
ஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள்…
“இறுதியாக எம்மிடம் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால் (சம்பியன்ஸ் கிண்ணம்) அந்த அணிக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். அத்துடன் ஐக்கிய அரபு இராச்சிய மைதானங்கள் எமக்கு அதிக சாதகமாக இருக்கும். அதனை நாம் பயன்படுத்திக்கொள்வோம்.
அத்துடன் இந்திய அணி ஒரு சிறந்த அணி. ஆனால் நான் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவதையும் விட 10 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறேன். எனது பாணியில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும். எனக்கும் அழுத்தங்கள் இருக்கின்றன. எனினும், அணி வெற்றிபெறுவதற்கு என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன்” என்றார்.
ஆசிய கிண்ணம் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 19ம் திகதி குழுநிலை போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<