ஆசியாவின் அதிவேக மனிதர்களாக முடிசூடிய பிங்டியான், ஒடியாங்

229

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற ஆசிய விளையாட்டு விழாவின் 18ஆவது அத்தியாயத்தின் அதிவேக வீரராக சீனாவின் சூ பிங்டியானும், அதிவேக வீராங்கனையாக பஹ்ரெய்னின் எடிடியாங் ஒடியாங்கும் முடிசூடிக் கொண்டனர். ள

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வரும் 18ஆவது ஆசிய விளையாட்டு விழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. போட்டியின் 8ஆவது நாளான நேற்று இரவு ஆசியாவின் அதிவேக மனிதர் யார் என்பதை தீர்மானிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

ஆசிய விளையாட்டில் இலங்கை பளுதூக்கல் வீரர்களுக்கு ஏமாற்றம்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பேர்க்கில் நடைபெற்று வருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு…

ஆசியாவின் மின்னல் வீரர் யார் என்பதை நிர்ணயிக்கும் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சீனாவின் நட்சத்திர குறுந்தூர வீரர் சூ பிங்டியான் 9.92 செக்கன்களில் போட்டித் தூரத்தை ஓடி முடித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதேநேரம், 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆசிய சாதனைக்கு சொந்தக்காரராகிய நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கட்டார் வீரர் பெம்மி ஒகுனோட்டின் (9.91 செக்.) சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை 0.01 செக்கன்களினால் பிங்டியான் தவறவிட்டார்.

எனினும், குறித்த போட்டியில் பிங்டியானுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த, பெம்மி ஒகுனோட்டின் இளைய சகோதரரான டசின் ஒகுனோட், 10.00 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும், ஜப்பான் வீரர் ரியோடா யமகட்டாவும் அதே 10.00 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

உலக மெய்வல்லுனர் அரங்கில் ஆசியாவைச் சேர்ந்த ஒரேயொரு வீரராக ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுவருகின்ற 28 வயதான சூ பிங்டியான், கடந்த ஜுன் மாதம் பாரிஸில் நடைபெற்ற டயமண்ட் லீக் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றார். அத்துடன், குறித்த போட்டியை 9.91 செக்கன்களில் நிறைவுசெய்து ஆசிய சாதனையையும் சமப்படுத்தியிருந்தார்.

ஆசிய விளையாட்டு விழாவில் முதலாவது பதக்கத்தை பெறும் வாய்ப்பை இழந்த இலங்கை

ஜகார்த்தாவின் கலேரா பங் கர்னோ விளையாட்டரங்கில் இன்று (26) இரவு நடைபெற்ற…

அத்துடன், இவ்வருடம் நடைபெற்ற உலக உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது இடத்தையும் பிங்டியான் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த வருடம் லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் முதற்தடவையாக கலந்துகொண்ட சூ பிங்டியான், அதன் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய முதல் ஆசிய குறுந்தூர வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார். எனினும், உலகின் மின்னல் வேக வீரர் உசைன் போல்ட்டின் பிரியாவிடைப் போட்டியாக அமைந்த 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பிங்டியானுக்கு கடைசி இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆசிய கண்டத்தின் அதிவேக பெண்மணி யார்? என்பதை தீர்மானிக்கும் 100 மீற்றர் ஓட்டப் போட்டியும் நேற்று இரவு ஜகார்த்தாவின் ஙிலோரா பங் கர்னோ விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதில் ஆசியாவைச் சேர்ந்த 8 முன்னணி வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். 21 வயதான பஹ்ரைன் வீராங்கனையான எடிடியாங் ஒடியாங் 11.30 செக்கன்களில் முதலாவதாக வந்து தங்க மங்கையாக உருவெடுத்தார்.

மயிரிழை வித்தியாசத்தில் பின்தங்கிய இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் 11.32 செக்கன்களில் 2ஆவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதேநேரம், பெண்களுக்கான 100 மீற்றரில் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொண்ட வீராங்கனைகளுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த சீன நாட்டு வீராங்கனையான வே யோங்லி 11.33 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

நிரல்படுத்தல் போட்டியில் மாலைத்தீவுகளை வீழ்த்திய இலங்கை கரப்பந்து அணி

ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்று விளையாடி வரும் இலங்கை கரப்பந்தாட்ட அணி,சீன…

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 100 மீற்றரில் இலங்கையின் அதிவேக வீராங்கனையான ருமேஷிகா ரத்னாயக்கவிடம் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்த 22 வயதான டுட்டீ சந்த், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். பாலின சர்ச்சைகள், இடையூறுகளை கடந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக பங்குபற்றி பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார். அதுமாத்திரமின்றி, ஆசிய விளையாட்டில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

சீனா முன்னிலை

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்ற மெய்வல்லுனர் போட்டிகளின் முடிவில் சீனா அணி 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 4 தங்கங்களுடன் பஹ்ரெய்ன் அணி 2ஆவது இடத்திலும், 2 தங்கங்களுடன் ஜப்பான் அணி 3ஆவது இடத்திலும் உள்ளது.

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க