கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டு விழா அமர்க்களமாக ஆரம்பம்

249

உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (செலமாட் டாட்டூங்) என்ற அழகிய வாசகத்துடன், 18ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள கலேரா பங் கர்னோ விளையாட்டரங்கில் மிகவும் கோலமாக நேற்று (18) இரவு ஆரம்பமாகியது.

இந்தோனேஷியாவின் பளிச்சிடும் தாள வாத்தியங்கள், அதன் அலைக்கற்றை கலாச்சாரம் என்பவற்றுடன் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தொடக்க விழா நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் விழாக்கோலம் கண்டன.

ஆசிய விளையாட்டு விழா இன்று ஜகார்த்தாவில் கோலாகலமாக ஆரம்பம்

ஆசிய கண்டத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான உலகின் மினி ஒலிம்பிக் என அழைக்கப்படுகின்ற

தொடர் பூமியதிர்ச்சிகள் ஒருபுறமிருக்க, தலைநகர் ஜகார்த்தாவை அண்மையில் அச்சுறுத்திய தீவிரவாத தாக்குதல் போன்றவற்றால் மீண்டு வருகின்ற இந்தோனேஷியாவுக்கு உலகின் இரண்டாவது ஒலிம்பிக் விழாவாக வர்ணிக்கப்படும் ஆசிய விளையாட்டு விழாவை எந்தவொரு தடைகளுமின்றி நடத்தமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியது.

ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கொண்டாடப்படுவது ஆசிய விளையாட்டு போட்டியாகும். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய விளையாட்டு விழாவானது இரண்டாவது தடவையாக இந்தோனேஷியாவில் நடைபெறுகிள்றமை சிறப்பம்சமாகும்.

”ஆசியாவின் பலம்” என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமாத்தராவின் தலைநகர் பாலெம்பேங்கிலும் நடைபெறவுள்ள இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை, இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரம் வீர வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

மெய்வல்லுனர், வில்வித்தை, டென்னிஸ், பெட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, கால்பந்து, ஹொக்கி, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உட்பட 40 வகையான போட்டிகள் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் நடைபெறவுள்ளன.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ சாதாரண மனிதராக மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு இந்தோனேஷியாவின் தலைநகரை வலம்வந்து மைதானத்தை வந்தடைந்தது எல்லோரையும் கவர்ந்தது. இது அங்கு நிலவுகின்ற போக்குவரத்து சிக்கலை எடுத்துக்காட்டும் வகையில் இருந்தது.

செல்சி, டொட்டன்ஹாமுக்கு அடுத்தடுத்து வெற்றி

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது வார போட்டிகள் சனிக்கிழமை ஆரம்பமாகின. இதில் இரண்டு முக்கிய போட்டிகளின் முடிவுகள் வருமாறு,

அதனையடுத்து, இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தோனேஷிய சிறுமிகள் அழகிய கஸீதா பாடலுக்கு தமது அபிநய நடனத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தனர்.

அதன்பிறகு 45 நாடுகளைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் அகரவரிசைப்படி அணிவகுத்து சென்றனர். இதில் முதல் நாடாக ஆப்கானிஸ்தான் அணி, தமது கலாசாத்தைப் பிரதிபலிக்கும் ஆடையில் வருகை தந்து அனைவரது கவனத்தையும் பெற்றுக்கெண்டனர்.

அரச தலையீட்டினால் சுமார் 2 வருடங்களாக போட்டித் தடைக்குள்ளாகியிருந்த குவைட் அணி, முதற்தடவையாக தமது நாட்டு கொடியின் கீழ் அணிவகுத்துச் சென்றனர்.

நீண்ட கால பிரிவினைகளுக்குப் பின்னர் தற்போது ஒன்றிணைந்துள்ள வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில ஒரே கொடியின் கீழ் இணைந்து வந்தனர். தென்கொரியாவின் கூடைப்பந்து வீராங்கனை லிம் யங்கம், வடகொரியாவின் கால்பந்து வீரர் ஜு யோங் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் தங்களது கைகளை பிடித்துக் கொண்டே மைதானத்துக்கு வந்தனர்.

இதேபோல, பார்வையார்கள் அரங்கில் இருந்த தென்கொரிய பிரதமர் லீ நாக்யோன் மற்றம் தென்கொரிய துணைப் பிரதமர் ரி ரியொங் ஆகியோர் தமது கைகளை இணைத்து உயர்த்தியது ரசிகர்களை மட்டுமல்ல, முழு உலகிற்கும் நல்லதொரு முன்னுதாரணமாக இருந்தது.

இலங்கை அணிக்கு பளுதூக்கல் வீராங்கனை தினூஷா கோமஸ் தேசிய கொடி ஏந்தி தலைமை தாங்கிச்சென்றார். இதில் போட்டியை நடாத்தும் இந்தோனேஷியா இறுதி நாடாக வந்தது.

இதைத்தொடர்ந்து, இந்தோனேஷியாவின் தேசிய கொடி இராணுவ வீரர்களால் ஏற்றப்பட்டு அந்நாட்டு தேசிய கீதம் பாடகர் டுலுஸ் உள்ளிட்ட குழுவினரால் பாடப்பட்டது. அதன்பிறகு பிரபல பாடகி வியா வல்லேன் ஆசிய விளையாட்டு விழாவுக்கான பாடலைப் பாடி அசத்தினார்.

ஆசிய விளையாட்டு விழாவுக்குச் சென்று இந்தோனேஷியாவில் உயர்தரப் பரீட்சை எழுதிய அகலங்க

நீர்நிலைப் போட்டிகளில் இளம் வயதில் தேசிய சாதனை படைத்தவரும், இலங்கை

இதைத்தொடர்ந்து இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடாடோ அதிகாரபூர்வமாக போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். இதன்போது, ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஷேக் அஹ்மத் அல்பஹாத் அல்சபாஹ் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

சுமார் 4 மணித்தியாலங்கள் நீடித்த தொடக்க விழாவில் இந்தோனேஷியாவின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள், லேசர் ஒளி வெள்ளத்தில் வியப்பூட்டும் சாகசங்கள், வானவேடிக்கை உள்ளிட்டவை இடம்பெற்றன.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் தொடக்க விழாவில் ரசிகர்களை பரவசப்படுத்தினர். மைதானத்தில் 120 மீற்றர் நீளத்தில் அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான மலைகள், அருவிகள் சூழ்ந்த இயற்கை பின்னணியில் கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்தியிந்தனர்.

உள்ளூரில் புகழ் பெற்ற இசை கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் நாட்டின் பாரம்பரிய இசையை மீட்டி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தனர்.

இறுதியில் இந்தோனேஷிய முன்னாள் பெட்மிண்டன் வீராங்கனை சுசி சுசாந்தி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்ததோடு, வானவேடிக்கை விண்ணைத் தொட போட்டிகள் ஆரம்பமாகியது.

எனவே சுமார் 56 வருடங்களுக்குப் பிறகு தமது நாட்டில் நடைபெறுகின்ற ஆசிய விளையாட்டு விழாவைக் காண அந்த நாட்டு மக்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் பார்த்துக்கெண்டிருக்கின்ற அதேவேளை, விளையாட்டு உலகில் ஆசியாவின் அடுத்த ஜாம்பவான்கள் யார் என்பதை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி முழு உலக மக்களாலும் அறிந்துகொள்ள முடியும்.

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க