பாகிஸ்தான் வீரர் நசீர் ஜம்ஷீடுக்கு 10 ஆண்டுகள் தடை

617

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நசீர் ஜம்ஷீட், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 10 ஆண்டுகள் போட்டித் தடை விதித்துள்ளது.

தேசிய அணி வீரர்களின் தலைமையில் இம்மாத இறுதியில் SLC டி-20 தொடர் ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் …

கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரின், 2016/17 பருவகாலத்தின் போது, நசீர் ஜம்ஷீட் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த தண்டனையை பாகிஸ்தான் கிரிக்கெட்  சபையின், ஊழல் எதிர்ப்பு பிரிவு வழங்கியுள்ளது.

இதுதொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழல் தடுப்பு பிரிவு, நசீர் ஜம்ஷீட் மீது சுமத்தப்பட்ட ஏழு வகையான குற்றச்சாட்டுகளில் 5 வகையான குற்றங்களுடன் அவர் தொடர்ப்பட்டுள்ளார் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது. அத்துடன் இவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை காலப்பகுதியில் எவ்விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது. அதுமாத்திரமின்றி பாக். கிரிக்கெட் சட்டத்திட்டத்தின்படி தண்டனைக்காலம் முடிந்தாலும், வாழ்நாள் முழுவதும் பாக். கிரிக்கெட் சபை சார்ந்த எந்தவித பதவிகளையும் வகிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நசீர் ஜம்ஷீட், கிரிக்கெட் சூதாட்ட தரகர்களிடம் நேரடி தொடர்புகளை கொண்டிருந்ததுடன், வீரர்களை ஆட்ட நிர்ணயத்தில் இணைப்பதற்கான திட்டத்தையும் தீட்டியுள்ளார். குறித்த சூதாட்ட சம்பவத்துக்கான முக்கிய சூத்திரதாரியும் இவர்தான் என்பதையும் ஊழல் தடுப்பு பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை நசீர் ஜம்ஷீட்டின் குற்றம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கிரிக்கெட் சபையின் வழக்கறிஞர் டபஷுல் ரிஷ்வி,

கவுண்டி கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக விளையாடும் அசார் அலி

“நசீர் ஜம்ஷீட்டின் தடைக்காலம் முடிவடைந்தாலும், கிரிக்கெட் சபையின் சட்டத்தின்படி, வாழ்நாள் முழுவதும் அவரால் கிரிக்கெட் சபையின் எந்தவொரு பதவியையும் வகிக்க முடியாது. இவரது பெயர் சூதாட்டத்தில் ஏற்கனவே ஈடுபட்டவர்களின் பெயர்களுடன் இணைக்கப்படுவதுடன், வீரர்களும் இவருடன் தொடர்பு கொள்ளவது தவிர்க்கப்படும்.

இவ்வாறான சில சம்பவங்களால், நாம் வெற்றிபெறும் போதும் மகிழ்ச்சி உண்டாகாது. ஆட்ட நிர்ணயத்தால் வீரர்கள் தங்களது வாழ்க்கையை இழக்கின்றனர்” என குறிப்பிட்டார்.

சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்ட நசீர் ஜம்ஷீட், பிணையில் வெளியில் வந்து தற்போது ஐக்கிய இராச்சியத்தில் தங்கியுள்ளார். இவரின் தடைக்காலம் நிறைவடைந்த பின்னர், இவருக்கான மறுவாழ்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

நசீர் ஜம்ஷீட் பாகிஸ்தான் அணிக்காக 48 ஒருநாள், 18 T-20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒருநாள் போட்டிகளில் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 31.51 என்ற சராசரியில் 1418 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.