FA கிண்ண 64 அணிகள் சுற்றின் போட்டி விபரம்

1371

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த பருவகாலத்திற்கான FA கிண்ண கால்பந்து தொடரின் முதல்கட்டப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 64 அணிகள் மோதும் சுற்றின் (Round of 64) போட்டி விபரம் இன்று வெளியிடப்பட்டது.     

குறித்த தொடரில் 64 அணிகள் பங்கு கொள்ளும் சுற்றுக்கான போட்டிகளைத் தெரிவு செய்வதற்கான குலுக்கல் நிகழ்வு (Draw) இன்று (15) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

SWAFF நிறைவேற்று சபை உறுப்பினராக அநுர டி சில்வா தெரிவு

தென் மேற்கு ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (SWAFF) நிறைவேற்றுச் சபை உறுப்பினராக…

இலங்கையில் உள்ள 65 கால்பந்து லீக்களில் அங்கம் வகிக்கும் 716 கால்பந்து அணிகளுக்காக நொக் அவுட் முறையில் இடம்பெறும் இந்த பருவத்திற்கான FA கிண்ண கால்பந்து தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. லீக் மட்டத்தில் இடம்பெற்ற ஆரம்ப சுற்றுப் போட்டிகள் தற்பொழுது நிறைவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த கட்டமான மாவட்ட மட்டத்திலான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

மாவட்ட மட்ட மோதல்களின் நிறைவில் மாவட்ட சம்பியன்களாக தெரிவாகும் 32 அணிகள், ஏற்கனவே கடந்த முறை இடம்பெற்ற FA கிண்ண தெடரில் இறுதி 32 அணிகள் சுற்று (Round of 32) வரை முன்னேறிய அணிகளில் ஒன்றுடன் மோத வேண்டும். இதன்படி, மொத்தமாக 64 அணிகள் மோதும் தேசிய மட்டத்திலான சுற்றில் விளையாடுவதற்காகவே இன்றைய குலுக்கல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா, பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர், போட்டித் தொடர்களுக்கான பொறுப்பாளர் மொஹமட் ஆசிப் உட்பட கால்பந்து சம்மேளனத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பலரும் கலந்துகொண்டனர்.

இன்றைய குலுக்கலின்போது, மாவட்ட சம்பியன்களான / மாவட்ட சம்பியன்களாகவிருக்கின்ற 32 அணிகளும் A நிரலிலும், கடந்த வருடம் இறுதி 32 அணிகள் சுற்றுவரை முன்னேறிய அணிகள் B நிரலிலும் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.

பூட்டானிடமும் தோல்வியை சந்தித்த இலங்கை அணி

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) ஏற்பாட்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்று…

பின்னர், ஒரு போட்டிக்காக A நிரலில் இருந்து ஒரு அணியும் B நிரலில் இருந்து ஒரு அணியும் என எடுக்கப்பட்டன. அவ்வாறே, குறித்த சுற்றில் இடம்பெறவுள்ள 32 போட்டிகளுக்குமான அணிகள் தெரிவு செய்யப்பட்டன.

மேலும், இந்த சுற்றுப் போட்டிகளைப் பொறுத்தவரை மாவட்ட சம்பியன்களாக தெரிவாகும் அணிகளது மைதானமே சொந்த மைதானமாக (Home Ground) இருக்கும். எனினும், அவர்களுக்கான போட்டி இடம்பெறும் மைதானத்தை இலங்கை கால்பந்து சம்மேளனமே தெரிவு செய்யும்.

போட்டிகளின்போதான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தல் மற்றும் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற தரத்திலான மைதானத்தை தெரிவு செய்ய வேண்டிய தேவை என்பவற்றை கருத்தில் கொண்டே மைதானத்தை தெரிவு செய்யும் உரிமையை இலங்கை கால்பந்து சம்மேளனம் தம்வசம் கொண்டுள்ளதாக இன்றைய நிகழ்வின்போது குறிப்பிடப்பட்டது.

இந்த சுற்றுப் போட்டிகளின் நிறைவில், அடுத்த சுற்றுக்காக மீண்டும் திறந்த முறையிலான ஒரு குலுக்கல் (Open Draw) இடம்பெறும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

  காணொளிகளைப் பார்வையிட

அதேபோன்று, இந்த சுற்றில் (Round of 64) சொந்த மைதானத்தலின்றி எதிரணியின் மைதானத்தில் விளையாடிய அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் பட்சத்தில் அடுத்த சுற்றுப் போட்டி குறித்த அணியின் மைதானத்தில் இடம்பெறும். மாறாக, அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் இரு அணிகளும் முன்னைய சுற்றில் தமது சொந்த மைதானத்தில் அல்லது எதிரணியின் மைதானத்தில் விளையாடி இருந்தால் அந்தப் போட்டிக்கான மைதானம் நாணய சுழற்சி மூலம் தெரிவு செய்யப்படும்.

64 அணிகள் பங்கு கொள்ளும் சுற்றுக்கு முன்னைய சுற்றுப் போட்டிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத காரணத்தினால் குறித்த சுற்றுப் போட்டிகள் இடம்பெறும் திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இன்றைய குலுக்கலுக்கு அமைய 64 அணிகள் சுற்றின் போட்டி விபரம் 

போட்டி இல. மாவட்ட சம்பியன் இறுதி 32 அணியாக தெரிவாகிய அணிகள்
553 சன் ரைஸ் வி.க – களுதுறை / தர்கா நகர் வி.க – பேருவலை நீர்கொழும்பு யூத் கா.க
554 ஜூப்பிடர்ஸ் வி.க – நீர்கொழும்பு / வத்தளை கால்பந்து லீக் சம்பியன் அணி செரண்டிப் கா.க – மாவனல்லை
555 யங் மேட்ஸ் வி.க – ஹட்டன் / யங் யுனைனட் வி.க – நுவரெலியா விம்பில்டன் வி.க – புத்தளம்
556  கிரேட் ஸ்டார் வி.க – பேருவலை பெலிகன்ஸ் வி.க – குருனாகலை
557 திஹாரிய யூத் வி.க – கம்பஹா சிவில் பாதுகாப்பு வி.க
558 பொது சேவைகள் வி.க – மன்னார்  / புனித ஜோசப் வி.க – மடு கிறிஸ்டல் பெலஸ் கா.க – கம்பளை
559  மொரினிங் ப்ரென்ட்ஸ் வி.க – மாத்தறை இலங்கை கடற்படை வி.க
560 சென் ஜூட் வி.க – முல்லைதீவு / லக்கி ஸ்டார் வி.க – கிளிநொச்சி கோல்டன் ரைஸ் வி.க – பேருவலை
561 அல் அக்ஸா வி.க ஓட்டமாவடி  / ஹமீடியா வி.க – திருகோணமலை நியு யங்ஸ் கா.க – வென்னப்புவ
562 லக்கி ஸ்டார் வி.க – மூதூர் / பைனியர் வி.க – கிண்ணியா இலங்கை இராணுவப்படை வி.க
563 லக்கி ஸ்டார் வி.க – காத்தாங்குடி ரினௌன் வி.க – கொழும்பு
564 யங் அனுருத்தியன்ஸ் வி.க நாவலபிடிய  / ரெட் சன் வி. க – கம்பளை பிறில்லியன்ட் வி.க – அம்பாறை
565 சரிகமுல்ல வி.க – தெஹிவளை கிருலபனை யுனைடட் வி.க – கொழும்பு
566 ரெட் ரொபின் வி.க – காலி மாத்தறை சிடி கா.க
567 சொலிட் வி.க – அநுராதபுரம்   / வவுனியா லீக் சம்பியன் சுபர் சன் வி.க – பேருவலை
568 யங் வொன்டர்ஸ் வி.க – கண்டி சௌண்டர்ஸ் வி.க – கொழும்பு
569 ஜோசபியன் வி.க – பண்டாரவலை / ரினௌன் வி.க – ஹட்டன் சென் மேரிஸ் வி.க – யாழ்ப்பாணம்
570 யுனைடட் வி.க – மாவனல்லை / ஹொன்டன் வி.க – சீதாவக பாடும் மீன் வி.க – யாழ்ப்பாணம்
571 பரடைஸ் வி.க – பொலன்னறுவை / சிறைச்சாலை வி.க ரெட் ஸ்டார் கா.க – தெஹிவலை
572 இரத்தினபுரி மாநகரசபை வி.க / யூத் வி.க – பலாங்கொடை யங் போய்ஸ் வி.க – நுவரெலியா
573 எவரெடி வி.க – கொழும்பு அப் கன்ட்ரி லயன்ஸ் வி.க – நாவலபிடிய
574 லக்கி ஸ்டார் கா.க – அம்பாறை புனித. நிக்கிலஸ் வி.க – யாழ்ப்பாணம்
575 சனி மௌண்ட் வி.க – அம்பாறை இலங்கை விமானப்படை வி.க
576 உருத்திரபுரம் வி.க – கிளிநொச்சி / புனித அந்தோனியார் வி.க – மன்னார் ஈஸ்வரன் வி.க – வவுனியா
577 SLTB  வி.க / சன் ஷைன் வி.க – திவுலபிடிய மாஓ லியோ வி.க – குருனாகலை
578 ரட்னம் வி.க – கொழும்பு இலங்கை பொலிஸ் வி.க
579 யுனைடட் வி.க – வலிகாமம் / ஞானமுருகன் வி.க – யாழ்ப்பாணம் கொழும்பு கா.க
580 அல் ஹிலால் வி.க – வென்னப்புவ / லிவர்பூல் வி.க – புத்தளம் கொம்ரட்ஸ் வி.க – பதுள்ளை
581 ஆதிசக்தி வி.க – பருத்தித்துறை / ரேன்ஜர்ஸ் வி.க – வடமராட்சி ஜெட் லைனர்ஸ் வி.க – கம்பஹா
582 யங் ஸ்ப்ரிட் வி.க – குருனாகலை புளு ஸ்டார் – களுத்துறை
583 நாவட்குழி அண்ணை வி.க – யாழ்ப்பாணம் ஜாவா லேன் வி.க
584 யெலோவ் ஸ்டார் வி.க – கல்குடா / கடல்மீன்கள் வி.க – மட்டக்களப்பு நியு ஸ்டார் – கொழும்பு

 

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க