ஆசிய பாடசாலை 18 வயதின்கீழ் கால்பந்து தொடருக்கான வீரர்கள் தெரிவு நாளை

485

ஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதுக்குட்பட்டோர் கால்பந்தாட்ட தொடருக்கான, இலங்கை பாடசாலை வீரர்கள் தெரிவு இம்மாதம் 16ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

48ஆவது ஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதுக்குட்பட்டோர் கால்பந்தாட்ட தொடர் அடுத்த மாதம்  (செப்டம்பர்) 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை இந்தியாவின் அக்ரா நகரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Road to Barcelona சம்பியன் கிண்ணம் அல்-அக்ஸா கல்லூரிக்கு

நெஸ்லே லங்காவின் மைலோ நிறுவனத்தின் ஏற்பாட்டில்…

இதற்கான இலங்கை பாடசாலை வீரர்கள் தெரிவு, இம்மாதம் 16ஆம் திகதி கொழும்பு 2 சிட்டி லீக் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த தெரிவில் பங்கேற்கவுள்ள வீரர்கள் கட்டாயமாக 2000 அல்லது 2001ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதுடன், ஒரு பாடசாலையிலிருந்து மூன்று வீரர்கள் மாத்திரமே தெரிவுகளுக்கு பெயரிடப்பட முடியும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை பாடசாலை அணியானது கடந்த 1976ஆம் ஆண்டிலிருந்து ஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதுக்குட்பட்டோர் கால்பந்தாட்ட தொடரில் பங்கேற்று வருகின்றது. இம்முறையும் நாட்டின் மிகச்சிறந்த பாடசாலை வீரர்கள் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போட்டித் தொடரில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<