SAFF தொடரில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை இளம் அணிக்கு மோசமான தோல்வி

1628
AIFF Media

பூட்டானில் ஆரம்பமான 15 வயதுக்கு உட்பட்ட SAFF மகளிர் கால்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் இலங்கையின் இளம் மகளிர் அணி 12-0 என மோசமான தோல்வி ஒன்றை சந்தித்தது.

பூட்டான் தலைநகர் திம்புவில் உள்ள சங்லிமாதங் அரங்கில் நடைபெற்ற போட்டியில் முதல் நிமிடத்திலேயே இந்தியா கோல் பெற்றது. ஷில்கி தேவி வலையை நோக்கி உதைத்த முதல் பந்தே கோலாக மாறியது.

இலங்கை 15 வயதின் கீழ் தேசிய கால்பந்து அணியில் 6 யாழ். மாணவிகள்

பூட்டான் தலைநகர் திம்புவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள …

கடந்த ஆண்டு தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி பந்தை மின்னல் வேகத்தில் பரிமாற்றி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தது.

இந்திய அணியின் முன்னிலையை அதிகரித்த லிண்டா கொம் மற்றொரு இலகு கோலைப் பெற்றார். எட்டு நிமிடங்கள் கழித்து அவிகா சிங் இன்னுமொரு கோலை பெற்றார். போட்டியின் முதல் 20 நிமிடங்களிலேயே இலங்கை மகளிரை விட்டு விலகி ஆட்டம் வெகு தூரம் சென்றது.  

முதல் பாதியின் நடுப்பகுதி ஆட்டத்தின்போது இலங்கை அணியின் கோல்காப்பாளரான யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி வீராங்கனை ஜெகனாதன் ஜெதுன்சிகா எதிரணியின் கோல் முயற்சிகள் சிலதை சிறப்பாக தடுத்தார். இதனால் முதல் பாதியில் இந்திய அணியின் கோல்கள் மேலும் அதிகரிப்பதை யாழ் மங்கையால் தடுக்க முடிந்தது.

என்றாலும், இந்திய 15 வயதுக்கு உட்பட்ட அணி பந்தை இலகுவாக பரிமாற்ற, தொடர்ந்து கோல்களைப் புகுத்தியது. சுனிதா முண்டா கோல் ஒன்றை பேற்றதோடு முதல் பாதிக்குள் ஷில்கி தேவி தனது ஹட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.  

முதல் பாதி: இந்தியா 6 – 0 இலங்கை

இரண்டாவது பாதியிலும் ஆட்டத்தில் எந்த திருப்பமும் இருக்கவில்லை. இடைவேளைக்கு பின்னர் போட்டி ஆரம்பமான வேகத்திலேயே கிரிதினா தேவியின் மூலம் இந்தியா 7 ஆவது கோலை புகுத்தியது.  

தெருவில் வாழ்ந்து உலகக் கிண்ண வீரராக வந்தவரின் கதை

நான்கு ஆண்டுகளுக்கு முன் 2014 உலகக் கிண்ணத்தில் …

இலங்கை மகளிர்களால் இந்திய அணியின் தாக்குதல் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இருந்தது. இந்திய அணியினர் பந்தை பரிமாற்றிச் செல்வதை இலங்கை தரப்பினரால் தடுக்க முடியாத நிலையில் அந்த அணி 8 ஆவது கோலையும் புகுத்தியது. அவிகா சிங் அந்த கோலை போட்டார்.   

இதன்போது இலங்கை கோல்காப்பாளர் ஜெதுன்சிகா நீண்ட தூரத்தில் இருந்து வந்த பந்தை தட்டிவிட்டு இந்திய அணியின் கோல் வாய்ப்பொன்றை அபாரமாக தடுத்தபோதும் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அவிகா சிங்க அடித்த ஸ்பொட் கிக், கோல் கம்பத்தில் பட்டு திரும்பி வந்தபோது ஜெகான்தன் ஜெதுன்சிகா அதனையும் சிறப்பாகத் தடுத்தார்.

இலங்கை அணி வீராங்கனைகள் இந்தியாவின் ஒருசில பந்துப் பரிமாற்றத்தை தடுத்தபோதும் அனைத்து வல்லமையும் பெற்ற அணியாக போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய மகளிர் அணியினர் எந்த ஒரு நேரத்திலும் பந்தை கோலாக்கும் திறனை பெற்றிருந்தனர். கடைசி 20 நிமிடங்களும் முழுமையாக இந்திய வசம் ஆட்டம் இருந்ததோடு இலங்கை மகளிர்களால் பந்து தமது கோலை நோக்கி செல்வதை தடுக்க முடியாமல் இருந்தது.

லிதுவேனியாவுடனான மோதலை சமநிலையில் முடித்த இலங்கை

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இன்று (08) …

இலங்கை அணித் தலைவி கவிந்தி ஜயகொடி போட்டியில் குறிப்பிட்டு விளங்கியதோடு களைப்பின்றி தற்காப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்த முயற்சித்தார். எதிரணி தொடர்ந்து கோல்களை பெற்றபோதும் நிமேஷா சதருவன், டஷானி ஜயகொடி, மதுஷானி குமாரி, எஸ். தவப்ரியா, ரகுதாஸ் கிருஷாந்தினி, அமானி சனதீர மற்றும் இதுனி நிம்சரா ஆகியோரும் இலங்கை அணிக்காக கடுமையாக போராடினர்.

எனினும், ஆட்டத்தின் நிறைவில் கடந்த முறை தொடரில் இரண்டாவது இடத்தைப் பெற்ற இந்திய 15 வயதின்கீழ் மகளிர் அணி இலங்கையுடனான தமது முதல் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்றது.  

முழு நேரம் இந்தியா 12 – 0 இலங்கை

கோல் பெற்றவர்கள்

இந்தியா – ஷில்கி தேவி 1’, 20’ & 44’, லிண்டா கொம் 6’, அவிகா சிங் 13’ & 58’, சுனிதா முன்டா 42’, கிறிடினா தேவி 47’, கிரன் 72’, சுனிதா முண்டா 79’, அன்ஜு 87’ & 90’  

மஞ்சள் அட்டை

இந்தியாகிரான் 74′

அதேபோன்று இந்த தொடரின் மற்றொரு ஆட்டத்தில் நடப்புச் சம்பியன் பங்களாதேஷ் அணியினர் பாகிஸ்தான் இளம் அணியினரை 14-0 என இலகுவாக வீழ்த்தினர்.   

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…