சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு வாக்களித்தவாறு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் நடத்துவதற்கு முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சுமதிபாலவின் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டை அர்ஜுன, அரவிந்த நிராகரிப்பு
எமது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆட்ட நிர்ணயத்தில் ஒருபோதும்..
விளையாட்டுத்துறை திருத்தச் சட்டம் தொடர்பில் இந்நாட்டிலுள்ள சகல விளையாட்டு சங்கங்களிடமும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கோட்போர்கூடத்தில் நேற்றுமுன்தினம் (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
”கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். எதிர்வரும் 6 மாதங்களில் தேர்தலை நடத்துவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு பொறுப்புடன் கூறியுள்ளோம். அந்தத் தேர்தலை சுயாதீனமாக நடத்துவதற்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் நான் தயாராகவுள்ளேன். முன்னாள் வீரர்களும் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்களும் வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளனர். வீரர்கள் மட்டுமே இறுதியில் எமக்கு முக்கியமானவர்கள். நிர்வாகம் என்பதும் விளையாட்டு என்பதும் வேறு வேறு. கிரிக்கெட்டை மேம்படுத்தி விளையாடுவதற்கு வீரர்களுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இதேநேரம், இனிவரும் காலங்களில் விளையாட்டு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகளை உள்ளடக்கிய சுயாதீன தேர்தல் குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அனைத்து சங்கங்களினதும் ஆலோசனைகள் இந்த சந்திப்பின் போது பெற்றுக்கொள்ளப்பட்டன.
தந்தையருக்கான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் கொழும்பில் ஆரம்பம்
பாரம்பரிய கிரிக்கெட்டிலிருந்து நவீன கிரிக்கெட்…
இதுதொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, ”ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் தமது விருப்பத்துக்கு அமைய தேர்தல் குழுக்களை நியமிப்பதனை நான் முற்றாக எதிர்க்கிறேன். எனவே, எதிர்வரும் காலங்களில் நடைபெறுகின்ற அனைத்து தேர்தலுக்காகவும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்படுகின்ற சுயாதீன குழுவே தேர்தல் குறித்த சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்” எனத் தெரிவித்தார்.
எனினும், சுயாதீன தேர்தல் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமிப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால கடுமையான எதிர்ப்பினை இதன்போது வெளியிட்டிருந்தார். தற்போதுள்ள விளையாட்டு சங்கங்களின் ஊடாக சுயாதீன தேர்தல் குழுவொன்றை நியமிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சர் தேர்தல் குழுவை நியமிக்கும் போது அரசியல் தலையீடுகள் அதிகளவில் இருக்கும் என சுட்டிக்காட்டிய திலங்க சுமதிபால, இதுதொடர்பிலான இறுதித் தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் நிறைவடைந்த பிறகு முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, குறித்த கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த ஏனைய விளையாட்டு சங்கங்களிடம், சுயாதீன தேர்தல் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமிப்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? அல்லது எதிர்க்கின்றீர்களா? என வினவினார்.
பிரதமரினால் முதல்முறை 50 மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டு நிதியம்
இலங்கையின் விளையாட்டுத்துறை…
இதற்கு பெரும்பான்மையான விளையாட்டு சங்கங்கள் தமது சம்மதத்தினை தெரிவித்திருந்தனர். அதன்பிறகு, பெரும்பான்மையானோரின் விருப்பத்திற்கமைய இனிவரும் காலங்களில் தேர்தலை நடத்துவதற்கு சுயாதீன குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்கான சட்டக் கோவையை எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து சங்கங்களினதும் கைகளுக்கு கிடைக்கும்படி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட சுயாதீன தேர்தல் குழுவினால் நடத்தப்படவுள்ள முதல் தேர்தலாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் அமையும். அத்துடன், அந்த தேர்தல் எதிர்வரும் டிசம்பர் அல்லது 2019 ஜனவரியில் இடம்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல் தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இடம்பெற்று வருவதுடன், அதன் அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே, அன்றைய தினம் நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற தீர்ப்புக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் நடைபெறும் தினம் மாறுபடலாம் என விளையாட்டுத்துறை அமைச்சின் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.