இம்முறை 15 இலட்ச பரிசுத் தொகைக்காக இடம்பெறும் வர்த்தக கரப்பந்து தொடர்

264

இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை பிரபலப்படுத்தவும், வீரர்களிடையில் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் இலங்கை வர்த்தக கரப்பந்தாட்ட சங்கத்தினால் (Mercantile Volleyball Association of Sri Lanka) ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட தொடர் ஏழாவது தடவையாக, எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

கரப்பந்தாட்ட விளையாட்டில் ஆசியாவை வென்ற இலங்கைக்கு ஏழாமிடம்

மியன்மாரின் தை – பெய் – தோ நகரில் நிறைவுக்கு வந்த ஆடவருக்கான ஆசிய …

சுமார் 5 வருட இடைவேளைக்கு பின்னர் 2012ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பமான வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான இந்த கரப்பந்தாட்ட தொடர், தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இவ்வருடம் நடைபெறவுள்ள தொடரின் மொத்த பரிசுத் தொகை 15 இலட்சம் என இலங்கை வர்த்தக கரப்பந்தாட்ட சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் போட்டித் தொடரில் 100 அணிகள் பங்கேற்றிருந்த காரணத்தால் இம்முறை தொடரை மிகவும் பிரமாண்டமாக நடத்த வர்த்தக கரப்பந்தாட்ட சங்கம் முடிவெடுத்துள்ளது. தேசிய கரப்பந்தாட்டத்தின் சட்ட திட்டத்துக்கு உட்படுத்தப்பட்டு நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலாருக்குமான போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டித் தொடரின் ஆரம்ப சுற்றுகள் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் நடைபெறவுள்ளன. அத்துடன், இறுதிப் போட்டிகள் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. போட்டிகள் அனைத்தும் மஹரகம இளைஞர் சேவைகள் உள்ளக அரங்கில் நடைபெறும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்முறை நடைபெறவுள்ள போட்டித் தொடருக்கு இலங்கையின் உயர் நாமங்களை கொண்ட நிறுவனங்கள் அனுசரணைகளை வழங்குகின்றன. தொடரின் முதற்தர “Platinum” அனுசரணையாளராக மாஸ் (MAS)  ஹோல்டிங் நிறுவனம் செயற்படவுள்ளதுடன், சன்குயிக், லங்கா டைல்ஸ், பிரேண்டிக்ஸ், எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்க்ஸ் பிஎல்சி, ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி, மற்றும் டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் “Gold“ அனுசரணையளார்களாகவும்,  தம்ரோ மற்றும் ஒமேகா லைன் ஆகிய நிறுவனங்கள் “Silver” அனுசரணையாளர்களாகவும் கைக்கோர்த்துள்ளனர்.

போட்டித் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் குறைந்தது 3 மாதங்களுக்கு மேல் பணிபுரிந்திருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊழியர் சேமலாப நிதிக்கு உள்வாங்கப்பட்டவராக (EPF/ETF) இருத்தல் அவசியமாகும். அத்துடன் இம்முறை புதிய கழகங்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 20ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக கரப்பந்தாட்ட தொடர் சுப்பர் லீக், சம்பியன்ஷிப் மற்றும் டிவிசன் A என்ற மூன்று பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவினருக்கும் நடத்தப்படுகின்றன. இதில் ஒவ்வொரு பிரிவின் வெற்றியாளர்களுக்கும் பெரும் தொகை பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. அத்துடன், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சிறந்த வீரராக தெரிவு செய்யப்படுவர்களுக்கு முறையே மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டி என்பன பரிசாக வழங்கப்படவுள்ளது.

தேசிய விளையாட்டு விழா கூடைப்பந்தாட்டத்தில் மேல் மாகாணம் சம்பியன்

மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்த 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்டப் …

அத்துடன் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கும், சிறந்த வீர, வீராங்கனைகளுக்கும் கிண்ணங்கள் வழங்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு பிரிவுகளுக்கும் ஏனைய தனிப்பட்ட விருதுகளும் பரிசளிக்கப்படவுள்ளன.

போட்டித் தொடருக்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஆகஸ்ட் 20 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி மூலமாக 071 068 2682 (சந்தன) அல்லது 077 648 5456 (புத்தி) அல்லது இணையத்தளம் ஊடாக www.mva.lk என்ற முகவரியினூடாகவும் மின்னஞ்சல் ஊடாக [email protected] என்ற முகவரியினூடாகவும் தொடர்பு கொள்ள முடியும்.

விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி – The Mercantile Volleyball Association, No 33, Torrington Place, Colombo 7  (உறையின் (envelope) இடது மூலையில் ‘Mercantile Volleyball 2018’ என எழுதுதல் அவசியம் )

பரிசு விபரங்கள்

சுப்பர் லீக் (ஆண்கள்)

முதல் பரிசு – 150, 000, கிண்ணம்

இரண்டாவது பரிசு – 100,000, கிண்ணம்

மூன்றாவது பரிசு – 50,000 கிண்ணம்

ஆசிய இளையோர் கரப்பந்தாட்ட தொடரில் இலங்கைக்கு 10ஆவது இடம்

பஹ்ரைனின் மனாமா நகரில் நடைபெற்று வருகின்ற 20 வயதுக்குட்பட்ட …

சுப்பர் லீக் (பெண்கள்)

முதல் பரிசு – 100, 000, கிண்ணம்

இரண்டாவது பரிசு – 50,000, கிண்ணம்

மூன்றாவது பரிசு – 25,000 கிண்ணம்

சம்பியன்ஷிப் (ஆண்கள்)

முதல் பரிசு – 100, 000, கிண்ணம்

இரண்டாவது பரிசு – 50,000, கிண்ணம்

மூன்றாவது பரிசு – 25,000 கிண்ணம்

சம்பியன்ஷிப் (பெண்கள்)

முதல் பரிசு – 80, 000, கிண்ணம்

இரண்டாவது பரிசு – 40,000, கிண்ணம்

மூன்றாவது பரிசு – 20,000 கிண்ணம்

டிவிசன் A (ஆண்கள்)

முதல் பரிசு – 30, 000, கிண்ணம்

இரண்டாவது பரிசு – 20,000, கிண்ணம்

மூன்றாவது பரிசு – 10,000 கிண்ணம்

டிவிசன் A (பெண்கள்)

முதல் பரிசு – 30, 000, கிண்ணம்

இரண்டாவது பரிசு – 20,000, கிண்ணம்

மூன்றாவது பரிசு – 10,000 கிண்ணம்