இலங்கை அணிக்கு எதிராக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சற்று முன்னர் நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், குயின்டன் டி கொக் மற்றும் பாப் டு ப்ளெசிஸ் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன், தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி நிர்ணயித்திருந்த 245 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 42.5 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
குசலின் தனிப் போராட்டம் வீண்; இலங்கைக்கு முதல் போட்டியில் தோல்வி
பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி உபாதைக்குள்ளாகியுள்ள லஹிரு குமாரவுக்கு பதிலாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜிதவையும், லக்ஷான் சந்தகனுக்கு பதிலாக அறிமுக சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரியவையும் களமிறக்கியது. எவ்வாறாயினும், முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் தென்னாபிரிக்க அணி, அதே பதினொருவருடன் இன்றைய போட்டியில் களமிறங்கியிருந்தது.
முதல் போட்டியில் வேகப் பந்துவீச்சின் மூலமாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்த தென்னாபிரிக்க அணி, இன்றைய போட்டியிலும் அதே பாணியை கையாண்டது. தென்னாபிரிக்க அணி சார்பில் முதல் பந்து ஓவரை ககிஸோ ரபாடா ஆரம்பிக்க, இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் எச்சரிக்கையுடன் கூடிய துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஓவரில் 4 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி இரண்டாவது ஓவரில் சரிவை சந்தித்தது. இம்முறை ரபாடாவின் பந்து வீச்சை தற்காப்புடன் கையாண்ட இலங்கை அணிக்கு, லுங்கி என்கிடி கடுமையான சவாலை முன்வைத்தார்.
இரண்டாவது ஓவரின் இரண்டாவது மற்றும் நான்காவது பந்துகளுக்கு இரண்டு பௌண்டரிகளை விளாசிய உபுல் தரங்க, லுங்கி என்கிடியின் அதே பந்து ஓவரின் ஐந்தாவது பந்தில் விக்கெட் காப்பாளர் குயிண்டன் டி கொக்கிடம் பிடிகொடுத்து 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் வந்த வேகத்தில் ஓட்டமெதுவும் பெறாமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து, அணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
முதல் போட்டியைப் போன்று இந்த போட்டியிலும், இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிக்கப்படுமா? என்ற கேள்விகள் எழ, குசல் பெரேரா மற்றும் நிரோஷன் திக்வெல்ல மூன்றாவது விக்கெட்டுக்காக 43 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று, அணிக்கு ஆறுதல் அளித்தனர். எனினும் முதல் போட்டியில் அரைச்சதம் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்திருந்த குசல் பெரேரா 12 ஓட்டங்களுடன், பெஹலுக்வாயவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர், அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்சுடன் இணைந்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நிரோஷன் திக்வெல்ல தனது ஆறாவது ஒருநாள் அரைச்சதத்தை பூர்த்திசெய்தார். இந்த அரைச்சதமானது சுமார் 16 இன்னிங்சுகளுக்கு பின்னர் திக்வெல்ல பெற்ற அரைச்சதமாக பதிவாகியது. தொடர்ந்தும் இருவரும் நிதானமாக ஆட இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை கடந்தது. குறித்த இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 67 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, திக்வெல்ல, பெஹலுக்வாயோ வீசிய 26 ஆவது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். பெஹலுக்வாயோ வீசிய பந்து துடுப்பாட்ட மட்டையில் பட்டு, நேரடியாக விக்கெட்டை தாக்க, திக்வெல்ல 69 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.
திக்வெல்லவின் இடத்தை நிரப்புவதற்காக இடதுகை துடுப்பாட்ட வீரர் ஷெஹான் ஜயசூரிய களமிறங்கிய நிலையில், மறுபக்கம் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் நிதானமாக ஆடி, 36 ஆவது அரைச்சதத்தை கடந்தார். எனினும் அவருடன் இணைந்து துடுப்பெடுத்தாடிய ஷெஹான் ஜயசூரிய 18 ஓட்டங்களுடன் வியான் முல்டரின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய திசர பெரேரா 20 பந்துகளுக்கு 19 ஓட்டங்களை பெற்று, லுங்கி என்கிடியின் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்த உலகக்கிண்ணத்தின் துருப்புச்சீட்டு மெத்திவ்ஸ் – சங்கா
தொடர்ந்து களமிறங்கிய அகில தனஞ்சய 9 ஓட்டங்களுடனும், சுராங்க லக்மால் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, இறுதிவரை போராடிய அஞ்செலோ மெதிவ்ஸ் ஆட்டமிழக்காமல் 111 பந்துகளை எதிர்கொண்டு 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. மெதிவ்சுடன் இறுதி விக்கெட்டுக்காக இணைந்த அறிமுக வீரர் பிரபாத் ஜயசூரிய 11 பந்துகளுக்கு 11 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்திருந்தார். தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சை பொருத்தவரையில், பெஹலுக்வாயோ 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லுங்கி என்கிடி 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர், தம்புள்ளை மைதானத்தை பொருத்தவரையில் சற்று சவால் மிக்கதான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்த முற்பட்ட போதும், இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பின் காரணமாக பிடியெடுப்புகள் தவறவிடப்பட்டதுடன், எதிரணிக்கு மேலதிக ஓட்டங்களும் வாரி வழங்கப்பட்டது.
இதன்படி ஓட்டங்கள் குவிக்கப்பட, தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குயின்டன் டி கொக் அரைச்சதம் கடக்க, இலங்கை தொடரில் மோசமாக துடுப்பெடுத்தாடி வந்த ஹஷிம் அம்லாவும் குயின்டன் டி கொக்கிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினார். எனினும் தொடர்ந்து தனது துடுப்பாட்டத்தை நகர்த்த முடியாத, அம்லா 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய தனஞ்சய புதிதாக களமிறங்கிய எய்டன் மர்க்ரமையும் 3 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். இதனால் தென்னாபிரிக்க அணி 109 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
எவ்வாறாயினும் மர்க்ரமின் இடத்தை நிரப்புவதற்காக களமிறங்கிய அணியின் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் அதிரடியாக ஓட்டங்களை குவிக்க, மறுனையில் குயின்டன் டி கொக்கும் வேகமாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார். இருவரும் 53 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, தென்னாபிரிக்க அணி வேகமாக வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. இதில் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த குயின்டன் டி கொக், கசுன் ராஜிதவின் பந்தை எல்லைக்கோட்டுக்கு செலுத்த முற்பட்ட வேளை, லக்மாலிடம் பிடிகொடுத்து 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இந்த விக்கெட்டானது கசுன் ராஜிதவின் முதலாவது ஒருநாள் விக்கெட்டாகவும் பதிவானது.
விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும், சிறந்த ஓட்டவேகத்துடன் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி வெற்றி இலக்கை நெருங்கியது. இதில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பாப் டு ப்ளெசிஸ், 41 பந்துகளுக்கு 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அடுத்துவந்த டேவிட் மில்லர் 3 ஓட்டங்களுடன் வெளியேறி ஏமாற்றினார். இதற்கிடையில் துடுப்பெடுத்தாடிய ஜே.பி.டுமினி 29 பந்துகளுக்கு 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை வழங்கினார்.
இறுதியாக களம் நுழைந்த வியாம் முல்டர் 19 ஓட்டங்களையும், பெஹலுக்வாயோ 7 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து, ஒருநாள் தொடரின் தங்களது இரண்டாவது வெற்றியை உறுதிசெய்தனர். இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுராங்க லக்மால், திசர பெரேரா மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் பகிர்ந்தனர்.
சுமதிபாலவின் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டை அர்ஜுன, அரவிந்த நிராகரிப்பு
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என தென்னாபிரிக்க அணி முன்னேறியுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
// var socket=io('http://localhost:8080'); var socket=io('http://202.124.184.250:8080');
jQuery( document ).ready(function() { console.log( "ready" ); var prev_bat_team = 0;
socket.on('message',function (message) { message = JSON.parse(message); console.log(message); if( message.data.cric.commentary){ jQuery('#cmt_wrap').prepend('
'+message.data.cric.commentary.event+'
'+message.data.cric.commentary.comment+'
'); } if(message.data.cric.match){ console.log(message.data.cric.match.teams_1_inn2_r[0]); function ove(balls) { var overs = 0; if(balls %6 == 0){ overs = balls/6; }else{ overs = parseInt(balls/6)+"."+(+balls - +parseInt(balls/6)*6); } console.log(overs); return overs; }
if(!message.data.cric.match.teams_1_inn2_r[0]){
jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['balls'])+" overs)"); } if(!message.data.cric.match.teams_2_inn2_r[0]){
jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['balls'])+" overs)"); }
if(message.data.cric.match.teams_1_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_r[0]['extras']!=null){ jQuery('#extras_2_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_1_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_2_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras'])); }
//extras_1_r_2_ // if(prev_bat_team != message.data.cric.team_id){ jQuery('#widget_wrapper').load(document.URL + ' #widget_wrapper'); // } // prev_bat_team = message.data.cric.team_id // }
}); });
Full Scorecard
Sri Lanka
244/8
(50 overs)
Result
South Africa
246/6
(42.5 overs)
SA won by 4 wickets
Sri Lanka’s Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
U Tharanga | c Quinton de Kock b Lungi Ngidi | 9 | 8 | |||
N Dickwella | b Andile Phehlukwayo | 69 | 78 | |||
K Mendis | lbw by Lungi Ngidi | 0 | 1 | |||
K Janith | c Lungi Ngidi b Andile Phehlukwayo | 12 | 24 | |||
A Mathews | not out | 79 | 111 | |||
S Jayasuriya | c Quinton de Kock b Willem Mulder | 18 | 27 | |||
NLTC Perera | c Quinton de Kock b Lungi Ngidi | 19 | 20 | |||
A Dananjaya | c David MIller b Kagiso Rabada | 9 | 12 | |||
S Lakmal | b Andile Phehlukwayo | 7 | 8 | |||
P Jayasuriya | not out | 10 | 11 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
K Rabada | 9 | 1 | 48 | 1 | 5.33 |
L Ngidi | 8 | 1 | 50 | 3 | 6.25 |
W Mulder | 7 | 0 | 26 | 1 | 3.71 |
A Phehlukwayo | 9 | 0 | 44 | 3 | 4.89 |
JP Duminy | 7 | 0 | 30 | 0 | 4.29 |
T Shamsi | 10 | 0 | 43 | 0 | 4.30 |
South Africa’s Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
Quinton de Kock | c Suranga Lakmal b Kasun Rajitha | 87 | 78 | |||
H Amla | c & b Akila Dhananjaya | 43 | 43 | |||
A Markram | c Kusal Janith b Akila Dhananjaya | 3 | 11 | |||
Du Plessis | c & b Akila Dhananjaya | 49 | 41 | |||
JP Duminy | c Kusal Mendis b Thisara Perera | 32 | 29 | |||
D Miller | c Kusal Mendis b Suranga Lakmal | 3 | 5 | |||
W Mulder | not out | 19 | 31 | |||
A Phehlukwayo | not out | 7 | 19 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
S Lakmal | 7 | 0 | 39 | 1 | 5.57 |
K Rajitha | 5.5 | 0 | 44 | 1 | 8.00 |
A Dhananjaya | 10 | 0 | 60 | 3 | 6.00 |
T Perera | 7 | 0 | 34 | 1 | 4.86 |
P Jayasuriya | 10 | 0 | 53 | 0 | 5.30 |
S Jayasuriya | 3 | 0 | 16 | 0 | 5.33 |