ஜி.பி.எல் 2018 தொடரின் சம்பியனாக நாமம் சூடிய டீப் டைவர்ஸ்

665

யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பர்ஸ் விளையாட்டுக் கழகம், தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரினை நினைவுகூறும் விதமாக நடாத்திவரும், கிறாஸ்ஹொப்பர்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது பருவகாலத்திற்கான சம்பியன்களாக டீப் டைவர்ஸ் அணி தெரிவாகியுள்ளது.

Photos: Grasshoppers Premier League 2018 – Opening Ceremony & First Round

ThePapare.com | Yalini Iynkaran | 29/07/2018 | Editing and re-using images…..

ஜி.பி.எல் (GPL) என்ற பெயரில் சுருக்கமாக குறிப்பிடப்படும் கிறாஸ்ஹொப்பர்ஸ் பிரீமியர் லீக் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டிகள் யாவும் ஞாயிற்றுக்கிழமை (29) தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றிருந்தன.

இதேநேரம் வழமையாக அணிக்கு ஆறு பேர் கொண்டதாகவும் ஐந்து ஓவர்கள் கொண்டதாகவும் நடைபெறும் இந்த கிரிக்கெட் தொடர் இம்முறை அணிக்கு ஏழு பேர் கொண்டதாக இடம்பெற்றிருந்தது.

இங்கிலாந்து நிறுவனமான ஜூரா தயாரிப்பின் (Jura Production) அனுசரணையில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான தொடரில், ஆறு அணிகள் பங்கு பற்றியிருந்ததோடு அந்த ஆறு அணிகளும் A, B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டியிட்டிருந்தன. இத்தொடருக்கான வீரர்களை தெரிவு செய்யும் ஏலமும், ஆரம்ப நிகழ்வும் கடந்த மாதம் நடைபெற்றிருந்தது.

இதன்படி, குழு A சார்பில் பொயின்ட் பெட்ரோ சுபர் கிங்ஸ், டீப் டைவர்ஸ் மற்றும் ஜப்னா பென்தர்ஸ் ஆகிய அணிகளும், குழு B இல் நோர்த் ட்ராகன்ஸ், எக்ரஸிவ் போய்ஸ் மற்றும் ரில்கோ ரைடர்ஸ் ஆகிய அணிகளும் களம் கண்டிருந்தன.

மூன்றாவது முறை விமர்சையாக நடைபெறவுள்ள கிறாஸ்ஹொப்பர்ஸ் பிரீமியர் லீக்

யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பர்ஸ் விளையாட்டுக் கழகமானது தமது …

குழு நிலைப் போட்டிகளின் முடிவுகள்

குழு – A

டீப் டைவர்ஸ் எதிர் பொயின்ட் பெட்ரோ சுபர் கிங்ஸ்

டீப் டைவர்ஸ்  – 76/2 (05) சுஜாந்தன் 32, செல்டன் 30*, ரஜீவன் 4/1 (1)

பொயின்ட் பெட்ரோ சுபர் கிங்ஸ் – 68/4 (05) ரஜீவன் 29*, சுஜாந்தன் 09/1 (1)

முடிவு – டீப் டைவர்ஸ் அணி  08 ஓட்டங்களால் வெற்றி

ஆட்ட நாயகன் – சுஜாந்தன் (டீப் டைவர்ஸ்)


ஜப்னா பென்தர்ஸ் எதிர் டீப் டைவர்ஸ்

ஜப்னா பென்தர்ஸ் – 82/1 (05) விதுன் 30,சிவராஜ் 29, லினோர்த்தன் 05/1 (1)

டீப் டைவர்ஸ் – 78/4 (05) செல்டன் 44, விதுன் 13/1 (01)

முடிவு – ஜப்னா பென்தர்ஸ் அணி  04 ஓட்டங்களால் வெற்றி

ஆட்ட நாயகன் – சிவராஜ் (ஜப்னா பென்தர்ஸ்)


ஜப்னா பென்தர்ஸ் எதிர் பொயின்ட் பெட்ரோ சுபர் கிங்ஸ்

ஜப்னா பென்தர்ஸ் – 77/2 (5) விதுன் 68*, பிரதீப் 05/1(1)

பொயின்ட் பெட்ரோ சுபர் கிங்ஸ் – 77/4 (5) சாகித்தியன் 34, சிவராஜ்  11/1(01)

முடிவு – போட்டி சமநிலையில் முடிந்தது.

ஆட்ட நாயகன் – விதுன் (ஜப்னா பென்தர்ஸ்)

Photos: Grasshoppers Premier League 2018 – Semifinals

ThePapare.com | Jeyendra Logendran | 29/07/2018 | Editing and re-using images….


குழு – B

ரில்கோ ரைடர்ஸ் எதிர் எக்ரஸிவ் போய்ஸ்

எக்ரஸிவ் போய்ஸ் – 88/3 (05) ஆதித்தன் 29*, ராகுலன் 26, தயாளன் 09/2 (1)

ரில்கோ ரைடர்ஸ் – 60/1 (05) மதுசன் 38, ஜனுதாஸ் 15*

முடிவு – எக்ரஸிவ் போய்ஸ் அணி  28 ஓட்டங்களால் வெற்றி

ஆட்ட நாயகன் – ஆதித்தன் (ரில்கோ ரைடர்ஸ்)


ரில்கோ ரைடர்ஸ் எதிர் நோர்த் ட்ராகன்ஸ்

நோர்த் ட்ராகன்ஸ் – 66/2 (05) நிரோஷன் 11/1(1)

ரில்கோ ரைடர்ஸ் – 53/2 (05) பிரிந்தன் 11/1(01)

முடிவு – நோர்த் ட்ராகன்ஸ் 13 ஓட்டங்களால் வெற்றி

ஆட்ட நாயகன் – கதியோன் (நோர்த் ட்ராகன்ஸ்)


எக்ரஸிவ் போய்ஸ் எதிர் நோர்த் ட்ராகன்ஸ்

எக்ரஸிவ் போய்ஸ் – 88/3 (05) ஆதித்தன் 30, அஜித் 17/1(1)

நோர்த் ட்ராகன்ஸ் – 46/5 (05)

முடிவு – எக்ரஸிவ் போய்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றி

ஆட்ட நாயகன் – அதித்தன் (எக்ரஸிவ் போய்ஸ்)

குழு நிலைப் போட்டிகளின் அடிப்படையில் ஒரு வெற்றி, ஒரு சமநிலை முடிவு என்பவற்றுடன் குழு A இன் வெற்றியாளரான ஜப்னா பென்தர்ஸ் அணிக்கும் குழு B இல் இரண்டாம் இடத்தினைப் பெற்ற நோர்த் ட்ராகன்ஸ் அணிக்கும் இடையில் முதலாவது அரையிறுதிப் போட்டி இடம்பெற்றது.

இரண்டு வெற்றிகளுடன் குழு B இன் வெற்றியாளரான எக்ரஸிவ் போய்ஸ் அணிக்கும் குழு A இல் இரண்டாம் இடத்தினைப் பெற்ற டீப் டைவர்ஸ் அணிக்கும் இடையில் இரண்டாவது அரையிறுதி போட்டியும் இடம்பெற்றது.

Photos: Grasshoppers Premier League 2018 – Final & Prize giving Ceremony

ThePapare.com | Saravanan Murugaiah | 29/07/2018 | Editing and re-using images….

முதல் அரையிறுதி – நோர்த் ட்ராகன்ஸ் எதிர் ஜப்னா பென்தர்ஸ்

ஜி.பி.எல் தொடரின்  முதலாவது அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நோர்த் ட்ராகன்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஜப்னா பென்தர்ஸ் அணிக்கு வழங்கியது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய ஜப்னா பென்தர்ஸ் அணியினர் 4 விக்கெட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களையே நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஓவர்களில் பெற்றனர். ஜப்னா பென்தர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை (30) கதியோன் பெற்றதோடு, அருண் ராஜ் வெறும் 4 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து நோர்த் ட்ராகன்ஸ் அணிக்காக ஒரு விக்கெட்டினை சுருட்டியிருந்தார்.

பின்னர் சவால்குறைந்த 59 ஓட்டங்களினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நோர்த் ட்ராகன்ஸ் அணி 4.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்ததுடன், ஜி.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் முதலாவது அணியாகவும் மாறியது.

நோர்த் ட்ராகன்ஸ் அணியின் வெற்றிக்காக பங்களிப்புச் செய்த முக்கிய வீரரான அவ்வணியின் தலைவர் ஸ்ரீகுகன் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

ஜப்னா பென்தர்ஸ் – 58/4 (05) கதியோன் 30, அருண் ராஜ் 04/1(1)

நோர்த் ட்ராகன்ஸ் – 59/2 (4.5) ஸ்ரீகுகன் 31*

முடிவு – நோர்த் ட்ராகன்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

இலங்கை அணியின் தோல்வி குறித்து மனந்திறந்த திலான் சமரவீர

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில்….

இரண்டாவது அரையிறுதி – டீப் டைவர்ஸ் எதிர் எக்ரஸிவ் போய்ஸ்

இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற எக்ரஸிவ் போய்ஸ் அணியினர் முதலில் துடுப்பாடி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களை குவித்தனர். எக்ரஸிவ் போய்ஸ் அணிக்காக மத்திய வரிசையில் களம் வந்த ஆதித்தன் ஆட்டமிழக்காது அதிகபட்சமாக 32 ஓட்டங்களினை குவித்தார். இதேநேரம் சுஜாந்த்தன் டீப் டைவர்ஸ் அணிக்காக ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்தார்.

பின்னர் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட ஓட்டங்களினை ஐந்து ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய டீப் டைவர்ஸ் அணி, மிகவும் அதிரடியான முறையில் துடுப்பாடி 3.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி வெற்றி இலக்கினை 74 ஓட்டங்களுடன் அடைந்தது. டீப் டைவர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் வினோத் 35 ஓட்டங்களினையும், செல்டன் 31 ஓட்டங்களினையும் குவித்திருந்தனர்.

இப்போட்டியின் வெற்றியோடு டீப் டைவர்ஸ் ஜி.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் இரண்டாவது அணியாக மாறியது. போட்டியின் ஆட்ட நாயகன் விருது சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டிய டீப் டைவர்ஸ் அணியின் வினோத்திற்கு வழங்கப்பட்டது.

ஸ்கோர் விபரம்

எக்ரஸிவ் போய்ஸ் – 69/2 (05) ஆதித்தன் 32*, சுஜாந்த்தன்  08/1(1)

டீப் டைவர்ஸ் – 74/0 (3.2) வினோத் 35*, செல்டன் 31*

முடிவு – டீப் டைவர்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

அரையிறுதிப் போட்டிகளின் அடிப்படையில் தத்தமது குழுக்களில் முதலிடங்களைப் பெற்றுக் கொண்ட ஜப்னா பென்தர்ஸ் அணியும், எக்ரஸிவ் போய்ஸ் அணியினரும் தொடரிலிருந்து வெளியேறியிருந்தன.

இறுதிப் போட்டி

சென்ற ஆண்டு இடம்பெற்ற ஜி.பி.எல். தொடரில் கத்துக்குட்டிகளாக நுழைந்து சம்பியன் பட்டம் வென்ற நோர்த் ட்ராகன்ஸ் அணியே இம்முறைக்கான இறுதிப் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இலங்கை இளையோர் ஒருநாள் குழாம் அறிவிப்பு

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ….

தீர்மானமிக்க இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற டீப் டைவர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாட வேண்டிய நிலைக்கு ஆளாகியிருந்த நோர்த் ட்ராகன்ஸ் அணி ஆரம்ப வீரர்களான அருண் ராஜ், சண்சஜன் ஆகியோருடன் களம் வந்தது.

ஐந்து பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு அவற்றில், 4 பெளண்டரிகளை விளாசிய சண்சஜன் 17 ஓட்டங்களினைப் பெற்றிருந்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஆரோனின் விக்கெட்டும் 18 ஓட்டங்களுடன் வீழ்ந்தது.

தொடர்ந்து அதிரடி காட்டிய நோர்த் ட்ராகன்ஸ் அணியின் தலைவர் ஸ்ரீகுகன் 2 சிக்ஸர்கள், 2 பெளண்டரிகள் அடங்கலாக 5 பந்துகளுக்கு 21 ஓட்டங்களினை குவிக்க, நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து நோர்த் ட்ராகன்ஸ் அணி 62 ஓட்டங்களை குவித்தது. சுஜாந்த் ஒரு விக்கெட்டினை டீப் டைவர்ஸ் அணிக்காக சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 63 ஓட்டங்களினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய டீப் டைவர்ஸ் அணி மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்தினை காண்பித்தது. எனினும் பின்னர் செல்டன், ஜெயரூபன் ஆகியோரின் அதிரடியோடு 4.2 ஓவர்களில் 67 ஓட்டங்களை பெற்று, இந்தப் பருவகாலத்திற்கான ஜி.பி.எல். தொடரின் புதிய சம்பியனாக டீப் டைவர்ஸ் அணி நாமம் சூடியது.

>>காணொளிகளைப் பார்வையிட<<

டீப் டைவர்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்ட செல்டன் 31 ஓட்டங்களினை 3 சிக்ஸர்கள் அடங்கலாக பெற்றதோடு, ஜெயரூபன் வெறும் 5 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் ஒரு பெளண்டரி என மொத்தமாக 23 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது டீப் டைவர்ஸ் அணியின் செல்டனுக்கு வழங்கப்பட்டது.

ஸ்கோர் சுருக்கம்

நோர்த் ட்ராகன்ஸ் – 62/3 (5) ஸ்ரீ குகன் 21*, சுஜாந்த்தன் 09/1(1)

டீப் டைவர்ஸ் – 67/3 (4.2) செல்டன் 31*, ஜெயரூபன் 23*, பிருந்தாபன் 13/01 (1)

முடிவு – டீப் டைவர்ஸ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி

விருதுகள்

சிறந்த துடுப்பாட்ட வீரர் – விதுன் (ஜப்னா பென்தர்ஸ்)

சிறந்த பந்துவீச்சாளர் – தயாளன் (ரில்கோ ரைடர்ஸ்)

சிறந்த களத்தடுப்பாளர் – உத்தமகுமாரன் (எக்ரஸிவ் போய்ஸ்)

தொடரில் நேர்மையான ஆட்டத்தினை வெளிப்படுத்திய அணி (Fair Play) – பொயின்ட் பெட்ரோ சுபர் கிங்ஸ்

சிறந்த அணித்தலைவர் – ஸ்ரீகுகன் (நோர்த் ட்ராகன்ஸ்)

அதிக சிக்ஸர்கள் (15) பெற்ற வீரர் – செல்டன் (டீப் டைவர்ஸ்)

தொடர் நாயகன் – செல்டன் (டீப் டைவர்ஸ்)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<