இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்காக பந்துவீச்சில் அசத்திய புஷ்பகுமார

377

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி இன்று கட்டுநாயக்க மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியுடன் இரண்டு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் ஆகியவை கொண்ட தொடர்களில் ஆடுகின்றது.

தனுஷ்க குணதிலக்க குற்றம் இழைக்கவில்லை – பொலிஸார் அறிவிப்பு

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெறுகின்றது. இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியே இன்று (26) ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற விருந்தினர் அணியின் தலைவர் டொனி டி சோர்ஸி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தார்.

தென்னாபிரிக்காவின் சிரேஷ்ட கிரிக்கெட் அணி இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில், சுழல் வீரர்கள் காரணமாக 2-0 என வைட் வொஷ் செய்யப்பட்டிருந்ததால் கெளஷால் சில்வா தலைமையிலான இலங்கையின் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவின் வளர்ந்து வரும் அணியை கட்டுப்படுத்த தமது தரப்பில் நான்கு சுழல் வீரர்களை இணைத்திருந்தது.

எனினும், முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கு அதன் தலைவர் டொனி டி சொர்ஸி தொடக்க வீரராக வந்து அட்டகாசமான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தார். அந்தவகையில் 12 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என்பவற்றை விளாசிய சொர்ஸி மொத்தமாக 77 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில், சொர்ஸியுடன் மற்றைய  ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த ரயன் ரிகெல்டன் அரைச்சதம் ஒன்றை விளாசினார். இதனால், தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் முதல் விக்கெட்டுக்காக 131 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டிருந்தன.

இதேவேளை, இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியின் இடதுகை சுழல் வீரரான மலிந்த புஷ்பகுமார எதிரணி தலைவர் சொர்ஸியின் விக்கெட்டினை கைப்பற்றி எதிரணிக்கு சிறிது அழுத்தத்தை தந்தார்.

எனினும், மத்திய வரிசையில் துடுப்பாடிய மெத்திவ் ப்ரிட்ஸ்கே அரைச்சதம் ஒன்றுடன் தனது தரப்பை மீட்டார். 19 வயதேயான ப்ரிட்ஸ்கே 73 ஓட்டங்களை குவித்ததுடன் ஆறாம் இலக்கத்தில் துடுப்பாடிய செபங் டிதோலே பெறுமதிக்க 43 ஓட்டங்களைக் குவித்தார். இவர்களது பங்களிப்புடன் தென்னாபிரிக்கா சார்பிலான அணி முதல் இன்னிங்சில் மொத்த ஓட்டங்கள் 300 இணை எட்டியது.

பின்னர், மலிந்த புஷ்பகுமாரவின் சுழலுக்கு தடுமாறத் தொடங்கிய தென்னாபிரிக்காவின் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி ஆட்டத்தின் முதல் நாள் நிறைவில், 90 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 318 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. ஈத்தன் போஸ்ச் 15 ஓட்டங்களுடனும் ஜூனைட் தாவூத் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

டி-10 கிரிக்கெட் தொடரில் விளையாட தசுன் சானக்க ஒப்பந்தம்

இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்காக பந்துவீச்சில் சிறப்பித்த மலிந்த புஷ்பகுமார 91 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி திறமையை வெளிக்காட்டியிருந்தார்.

ஸ்கோர் விபரம்









Title





Full Scorecard

South Africa Board XI

394/9 & 109/10

(45.5 overs)

Result

Sri Lanka Emerging

194/10 & 310/6

(84.2 overs)

SL Emerging won by 4 wickets

South Africa Board XI’s 1st Innings

Batting R B
Ryan Rickelton c m.Sarathchandra b C.Karunaratne 63 113
Tony de Zorzi c K.Mendis b M.Pushpakumara 77 124
Kagiso Rapulana c M.Warnapura b M.Pushpakumara 38 93
Raynard van Tonder (runout) S.Ashan 0 11
Matthew Breetzke b M.Pushpakumara 73 113
Tshepang Dithole lbw by M.Pushpakumara 43 63
Eathan Bosch b M Pushpakumara 55 62
Onke Nyaku c & b M.Pushpakumara 0 2
Junaid Dawood not out 31 71
Nandre Burger c L Gamage b C Asalanka 6 13
Extras
8 (lb 1, nb 6, w 1)
Total
394/9 (109.5 overs)
Fall of Wickets:
1-131 (T de Zorzi, 34.5 ov), 2-162 (RD Rickelton, 45.4 ov), 3-171 (R van Tonder, 49.6 ov), 4-215 (K Rapulana, 66.2 ov), 5-300 (TA Dithole, 84.5 ov), 6-301 (MP Breetzke, 86.1 ov), 7-301 (O Nyaku, 86.3 ov), 8-379 (E Bosch, 106.3 ov), 9-394 (N Burger, 109.5)
Bowling O M R W E
Lahiru Gamage 17 2 60 0 3.53
Dilesh Gunaratne 13 1 67 0 5.15
Charith Asalanka 10.5 0 46 1 4.38
Chamika Karunaratne 17 1 58 1 3.41
Malinda Pushpakumara 42 9 125 6 2.98
Kamindu Mendis 7 1 17 0 2.43
Sammu Ashan 3 0 20 0 6.67

Sri Lanka Emerging ‘s 1st Innings

Batting R B
M Warnapura lbw by N Burger 0 3
Kaushal Silva c R Rickleton b L Sipamlar 5 20
P Nissanka c R Rickleton b E Bosch 16 39
C Asalanka c V Tonder b J Dawood 18 38
Kamindu Mendis c R Rickleton b E Bosch 0 2
S Ashan c D Sorzi b O Nyaku 51 83
M Sarathchandra c E Bosch b J Dawood 11 9
C Karunarathne lbw by O Nyaku 61 96
M. Pushpakumara b L Sipamlar 17 19
L Gamage c E Bosch b N Burger 1 7
D Gunarathne not out 0 0
Extras
10
Total
194/10 (53.4 overs)
Fall of Wickets:
1-5 (M Warnapura, 0.2 ov), 2-19 (K Silva, 5.4 ov), 3-48 (P Nissanka, 15.4 ov), 4-48 (C Asalanka, 17 ov), 5-49 (K Mendis, 17.5 ov), 6-66 (M Sarathchandra, 22.3 ov), 7-150 (S Ashan, 43.4 ov), 8-181 (C Karunarathne, 50 ov), 9-194 (L Gamage, 53 ov), 10-194 (M Pushpakumara, 53.4 ov)
Bowling O M R W E
N Burger 12 2 42 2 3.50
L Sipamlar 13.4 1 28 2 2.09
E Bosch 9 1 28 2 3.11
J Dawood 6 2 23 2 3.83
O Nyaku 9 0 41 2 4.56
K Rapulana 3 0 23 0 7.67

South Africa Board XI’s 2nd Innings

Batting R B
R Rickleton lbw by M Pushpakumara 0 2
De Sorzi (runout) C Asalanka 16 36
K Rapulana c S Ashan b M Pushpakumara 11 38
R Tonder b M Pushpakumara 20 51
M Breezke lbw by M Pushpakumara 0 2
T Dithole lbw by K Mendis 34 68
E Bosch lbw by M Pushpakumara 1 3
O Nayaku c M Sarathchandra b M Pushpakumara 16 53
J Dawood c M Pushpakumara b K Mendis 2 12
N Burger lbw by K Mendis 2 11
L Sipamlar not out 0 2
Extras
8
Total
109/10 (45.5 overs)
Fall of Wickets:
1-0 (R Rickleton, 0.2 ov), 2-31 (De Sorzi, 12 ov), 3-31 (K Rapulana, 12.3), 4-31 (M Breezke, 12.5 ov), 5-70 (R Tonder, 27 ov), 6-72 (E Bosch, 28.2 ov), 7-100 (T Dithole, 39.1 ov), 8-106 (O Nayaku, 42.4 ov), 9-108 (J Dawood, 44 ov), 10-109 (N Burger, 45.5 ov)
Bowling O M R W E
M Pushpakumara 23 4 45 6 1.96
K Mendis 18.5 3 46 3 2.49
S Ashan 4 0 10 0 2.50

Sri Lanka Emerging ‘s 2nd Innings

Batting R B
M Warnapura c R Rickleton b L Sipamlar 12 31
Kaushal Silva lbw by N Burger 91 166
P Nissanka c R Rickleton b J Dawood 9 25
C Asalanka c T Dithole b K Rapulana 20 31
Sammu Ashan c E Bosch b L Sipamlar 49 94
Kamindu Mendis not out 67 94
M Sarathchandra c & b M Breezke 16 24
C Karunarathne not out 32 43
Extras
14
Total
310/6 (84.2 overs)
Fall of Wickets:
1-22 (M Warnapura, 9 ov), 2-68 (P Nissanka, 19.4 ov), 3-113 (C Asalanka, 31.5 ov), 4-170 (K Silva, 53.4 ov), 5-200 (S Ashan, 60.4 ov), 6-243 (M Sarathchandra, 70 ov)
Bowling O M R W E
L Sipamlar 12 3 38 2 3.17
N Burger 18 5 47 1 2.61
E Bosch 17 5 38 0 2.24
J Dawood 19.2 1 99 1 5.16
O Nyaku 5 0 18 0 3.60
K Rapulana 8 1 33 1 4.13
M Breezke 5 0 25 1 5.00







போட்டியின் இரண்டாம் நாள்  ஆட்டம் நாளை தொடரும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<