மாஸ்டர்ஸ் ஹொக்கி உலகக் கிண்ணத்தில் முதல் முறை பங்கேற்கும் இலங்கை

184

முன்னாள் சிரேஷ்ட ஹொக்கி வீரர்களுக்கான (ஆடவர்களுக்கான) மாஸ்டர்ஸ் ஹொக்கி உலகக் கிண்ணம் ஜூலை மாதம் 27ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெறவிருக்கின்றது. இந்த உலகக் கிண்ணத் தொடரில் முதற்தடவையாக இலங்கை மாஸ்டர்ஸ்  ஹொக்கி அணியும் பங்கெடுக்கின்றது.

உலகக் கிண்ண ஹொக்கி தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி

ஸ்பெய்னின் பார்சிலோனாவில் எதிர்வரும் ஜூலை மாதம் 27..

இதன் மூலம் ஹொக்கி விளையாட்டில் பல சாதனைகளை புரிந்த இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட ஹொக்கி வீரர்களுக்கு தமது தாய் நாட்டை பெருமைப்படுத்த இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

“ எக்ஸின் மாஸ்டர்ஸ் ஹொக்கி உலகக் கிண்ணம்” என அழைக்கப்படும், சர்வதேச சிரேஷ்ட ஹொக்கி வீரர்களுக்கான இந்த ஹொக்கி தொடர், சர்வதேச மாஸ்டர்ஸ் ஹொக்கி சங்கத்தினால் 2012ஆம் ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டு சர்வதேச ஹொக்கி சம்மேளத்தின் அங்கீகாரத்துடன் இன்று உலகம் பூராகவும் வியாபித்த ஒரு தொடராக காணப்படுகின்றது.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் முதற்தடவையாக பங்கேற்கும் 18 பேர் அடங்கிய இலங்கையின் ஆடவர் மாஸ்டர்ஸ் ஹொக்கி குழாத்தினை றோயல் கல்லூரியின் பழைய மாணவரும், CH & FC கழகத்தின் முன்னாள் வீரருமான அஷோக் பீரிஸ் தலைமை தாங்குகின்றார்.

அஷோக் பீரிஸ் இலங்கையின் தேசிய ஹொக்கி அணிக்காக 1987 ஆம் ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக இலங்கை ஹொக்கி அணியின் தடுப்பு (Defence) வீரராக விளையாடிய அனுபவத்தினைக் கொண்டிருக்கும் ஆனந்த டி சில்வா இலங்கை மாஸ்டர்ஸ் ஹொக்கி அணியின் உபதலைவராக செயலாற்றவிருக்கின்றார்.

2019 தெற்காசிய விளையாட்டு விழாவில் மீண்டும் கிரிக்கெட் இணைப்பு

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2..

பல்வேறு வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறும் இந்த மாஸ்டர்ஸ் உலகக் கிண்ணத்தில் சிரேஷ்ட வீரர்களை அடக்கிய இலங்கை மாஸ்டர்ஸ் ஹொக்கி அணி, 40 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட வீரர்களுக்கான பிரிவில் போட்டியிடுகின்றது. இலங்கையின் பிரிவில் மொத்தமாக 15 நாடுகளின் முன்னாள் சிரேஷ்ட வீரர்களை அடக்கிய ஹொக்கி அணிகள் போட்டியிடவுள்ள நிலையில் தொடரை நடாத்தும் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் ஹொக்கி அணியுடன் முதல் சுற்றுப் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் ஹொக்கி அணி பலப்பரீட்சை நடாத்துகின்றது.

இலங்கை மாஸ்டர்ஸ் ஹொக்கி அணியின் பிரிவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகியவற்றின் சிரேஷ்ட ஹொக்கி அணிகள் இருப்பதால் இலங்கையின் மாஸ்டர்ஸ் ஹொக்கி குழாத்திற்கு இத்தொடர் சவால்மிகுந்த ஒன்றாகவே அமையும்.

இலங்கை மாஸ்டர்ஸ் ஹொக்கி அணியின் தலைவர் அஷோக் பீரிஸ் ThePapare.com உடன் பேசியிருந்த வேளையில், இலங்கையின் ஹொக்கி விளையாட்டு உலக அணிகளுடன் ஒப்பிடும் போது எந்த தரத்தில் இருக்கின்றது எனப் பார்க்கவும், இலங்கையின் அடுத்த சந்ததிகளுக்கு இந்த விளையாட்டின் மீது ஒரு ஆர்வத்தினை உருவாக்கவும் இந்த உலகக் கிண்ணத் தொடர் சந்தர்ப்பத்தினை உருவாக்கியுள்ளது என்ற விதத்தில் அமைந்த கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<