தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பம்

733

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு கிரிக்கெட் சபை விதித்துள்ள இடைக்கால தடைக்கான நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இடம்பெற்ற பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என AFP தகவல் வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து குணதிலக்க இடைநிறுத்தம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் தனுஷ்க …

நோர்வேயைச் சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக தனுஷ்க குணதிலகவின் நண்பர் என அறியப்படும் ஒருவரை பொலிஸார் நேற்று முன்தினம் கைதுசெய்திருந்தனர். 26 வயதான குறித்த நபர் தனுஷ்க குணதிலகவுடன் நெருங்கி பழகுபவர் என செய்திகள் வெளிவந்துள்ளதுடன், அவர் பிரித்தானிய கடவுச்சீட்டுடன் இலங்கையில் இருப்பதாக பொலிஸார் AFP செய்திச்சேவைக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரித்தானிய பிரஜையை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் குறித்த சம்பவத்துக்கும் தனுஷ்க குணதிலகவுக்கு எவ்வித தொடர்புகளும் இருப்பதாக தெரியவில்லை என அறிவித்துள்ளனர். எனினும், இலங்கை கிரிக்கெட் சபையின் நடத்தை விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக, தனிப்பட்ட ரீதியில் தனுஷ்க குணதிலக்கவிடம் கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கிரிக்கெட் சபையின் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக, தனுஷ்க குணதிலகவை அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்தம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. எவ்வாறாயினும் இடைநிறுத்தம் செய்ததற்கான காரணங்களை இதுவரையில் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

உபாதைகளின் பின்னர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவுள்ள அசேல குணரத்ன

இலங்கையுடனான டெஸ்ட் தொடரை 2-0 என …

கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்த அறிக்கையில், குறித்த வீரர் இலங்கை கிரிக்கெட் சபையின் விதிமுறைகளை மீறியுள்ளதாக, அணி நிர்வாகம் முறைப்பாடு செய்தமையை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், வீரருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு இடைக்காலத் தடை விதிப்பட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

தனுஷ்க குணதிலகவின் மீது பல்வேறு நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்து வந்திருந்த நிலையில், இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இவருக்கு 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.  குறித்த காலப்பகுதியில் இந்திய தொடருக்கான பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இரவு விடுதியொன்றுக்கு சென்ற குணதிலக, அடுத்தநாள் பயிற்சியை புறக்கணித்த குற்றச்சாட்டுக்காக இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த 6 போட்டிகள் கொண்ட தடை பின்னர் மூன்று போட்டிகளாக குறைக்கப்பட்டிருந்து.

இதேவேளை, இவ்வருடம் ஜனவரி மாதம் பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியின் போது, ஐசிசி யின் ஒன்றாம் நிலை சட்ட விதியினை மீறிய குற்றச்சாட்டுக்காக, அவரது நடத்தை புள்ளி ஒன்று குறைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…