பொலன்னறுவை மாவட்ட FA கிண்ண சம்பியன்களாக முடிசூடிய பரடைஸ்

315

இலங்கை கால்பந்து சம்மேளனம் நடாத்தும் FA கிண்ண சுற்றுத் தொடரின் பொலன்னறுவை மாவட்ட அணிகளுக்கு இடையிலான மோதலின் இறுதிப் போட்டியில், நியு பேர்ட்ஸ் (New Birds) விளையாட்டுக் கழக அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்ட பரடைஸ் விளையாட்டுக் கழக அணி மாவட்ட சம்பியனாக தெரிவாகியுள்ளது.

வெற்றிவாகை சூடிய ரெட்சன் விளையாட்டுக் கழகம்

FA கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரின் கம்பளை கால்பந்து லீக்கிற்கான இறுதிப் போட்டியில் கெலிஓயா விளையாட்டுக் …

இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்ற இந்தத் தொடருக்கான போட்டிகளில், பொலன்னறுவை மாவட்ட கால்பந்து அணிகளுக்கிடையிலான போட்டிகள் கடந்த 2 மாதங்களாக பொலன்னறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தன.

பொலன்னறுவை மாவட்டத்தின் பதிவு செய்யப்பட்ட பல முன்னணி விளையாட்டுக் கழகங்கள் பலப்பரீட்சை நடாத்திய இத்தொடரில் தமது அனைத்துப் போட்டிகளிலும் அபாரமாக ஆடிய கதுருவெல, முஸ்லிம் கொலனியை பிரதிநிதித்துவப்படுத்திய பொலன்னறுவை மாவட்டத்தின் பழம்பெரும் விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான பரடைஸ் மற்றும் நியு பேர்ட்ஸ் அணிகள் தமது முன்னைய போட்டிகளில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காது, இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

கடந்த ஜூன் மாதம் தனது முதல் போட்டியில் தம்பாளை அல் ஹிலால் விளையாட்டுக் கழகத்தினை எதிர் கொண்ட பரடைஸ் விளையாட்டுக் கழகம், அவ்வணியை 4-0 எனும் கோல்களின் அடிப்படையில் வீழ்த்தியது. பின்னர் ஜூலை மாதம் ஆரம்பத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பொலன்னறுவை மாவட்டத்தின் பலம்பொருந்திய அணிகளில் ஒன்றான நந்திமித்ர அணியை 1-0  என்ற கோல் வித்தியாசத்தில்  வீழ்த்தி பரடைஸ் இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

மறுபுறம், தமது முதல் போட்டியில் கிரிதல விளையாட்டுக் கழகத்தினை எதிர்கொண்ட நியு பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் 5-0 எனும் கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று, இரண்டாவது போட்டியில் பெந்திவேவ லக்கி விளையாட்டுக் கழகத்தினை 2-1 எனும் கோல்களின் அடிப்படையில் வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் பொலன்னறுவை விளையாட்டுக் கழகம் பங்குபெறாமையினால் வெற்றி நியு பேர்ட்ஸ் அணிக்கு வழங்கப்பட அவ்வணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கால்பந்தில் ஆபாச பார்வையை காண்பிக்க முயற்சிக்குள் கெமராக்கள்

நேரடி கால்பந்து ஒளிபரப்புகளின்போது அழகான பெண்களை காண்பிப்பது கவலையானது என்று எந்த கால்பந்து …

இறுதிப் போட்டியில் பரடைஸ் விளையாட்டுக் கழக அணி, தமது முன்கள வீரர் அசாமின் அபாரமான கோலின் உதவியுடன் முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது. எனினும், நியு பேர்ட்ஸ் அணியின் பல கோல் வாய்ப்புக்கள் பரடைஸ் அணியின் கோல் காப்பாளர் அகியினால் சிறப்பாகத் தடுக்கப்பட்டன.

தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் பரடைஸ் வீரர்கள் தமக்கான இரண்டாவது கோலைப் பெற கடுமையாக முயற்சிக்க, மறுமுனையில் நியு பேர்ட்ஸ்  அணியினரும் தமது முதல் கோலுக்கான முயற்சியில் தீவிரமாக ஆடினர். எனினும், இரு அணியினதும் சிறந்த தடுப்பாட்டம் காரணமாக இரண்டாவது பாதியில் எந்தவித கோல்களும் பெறப்படவில்லை.    

இதனால், அசாமின் ஒரே கோலினால் மாவட்ட சம்பியன்களாக முடிசூடிக்கொண்ட பரடைஸ் விளையாட்டுக் கழகம் FA கிண்ண சுற்றுத் தொடரின் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.  

கடினப்பந்து கிரிக்கெட் அணி, மென்பந்து கிரிக்கெட் அணி, கால்பந்து அணி மற்றும் கரப்பந்து அணி என பல்வேறுபட்ட அணிகளைக் கொண்டுள்ள 30 வருட வரலாற்றைக் கொண்ட பரடைஸ் விளையாட்டுக் கழகம் FA கிண்ணத் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகளுக்கு தெரிவாகியமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.  

  >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<