இளம் தனன்ஜயவின் அதிரடி மாற்றத்திற்கான காரணங்கள்

2037

இலங்கை அணிக்காக பந்துவீச்சு மற்றும் துப்பாட்டாம் இரண்டிலும் சோபித்த அகில தனன்ஜய, தனக்கு தெரிந்த வகையில் பந்துவீசியதாகவும், தற்போது துடுப்பாட்டத்திலும் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை பெற்ற அகில தனன்ஜய, பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அவர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்பதோடு டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவரது இரண்டாவது சிறந்த பந்துவீச்சாகவும் இருந்தது.

பந்துவீச்சு, துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் அசத்திய இலங்கை

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும்…

‘எனக்கு தெரிந்த வகையில் இலக்கிற்கு பல மாற்றங்களை செய்து பந்து வீசினேன். திலான் (சமரவீர) அண்ணனுடன் துடுப்பாட்டத்தில் அதிக பயிற்சி பெற்றேன். அவர் அதிக உதவிகளை செய்தார். ரங்கன (ஹேரத்) அண்ணனும் மெல்ல மெல்ல ஓட்டங்களை குவித்து இணைப்பாட்டம் ஒன்றை எடுப்போம் என்று கூறிக்கொண்டிருந்தார். அது எனக்கு பலமாக இருந்தது. இப்போது வலையில் துடுப்பெடுத்தாடுவது அதிகரித்திருக்கிறது’ என்று நேற்று (21) இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தனன்ஜய குறிப்பிட்டார்.

இலங்கை அணிக்காக முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்ட வரிசையில் 9ஆவது இடத்தில் ஆட வந்த அகில  தனன்ஜய மிக நிதானமாகவும் நேர்த்தியாகவும் பந்துகளுக்கு முகம்கொடுத்து ஓட்டங்களைக் குவித்தார்.  

இதன்போது அவர் 10ஆவது விக்கெட்டுக்கு ரங்கன ஹேரத்துடன் இணைந்து 74 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். இதன்மூலம் இலங்கை அணிக்காக 10ஆவது விக்கெட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்களை பெற்ற சாதனையை இந்த ஜோடி 6 ஓட்டங்களால் தவறவிட்டது. 2004ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் கடைசி விக்கெட்டுக்கு பெற்ற 79 ஓட்டங்களுமே சாதனை இணைப்பாட்டமாக உள்ளது.  

காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்படுவது குறித்து முன்னாள் வீரர்கள் கவலை

வரலாற்று சிறப்புமிக்க காலி…

குறிப்பாக, இலங்கையின் முன்னணி சுழல் வீரர்களான ரங்கன ஹேரத் மற்றும் தில்ருவன் பெரேராவுடன் இணைந்தே தனன்ஜய முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இந்த இருவரையும் விஞ்சி தனன்ஜயவால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.  

‘ரங்கனவின் இடைவெளியை இலகுவாக நிரப்ப முடியும் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில் அவ்வாறான ஒரு வீரர் உருவாகுவது மிகக் குறைவு.

ரங்கன, தில்ருவன் இருவரும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரிடம் இருந்தும் நான் கற்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அந்த விடயங்களை கற்று பொறுமையுடன் முன்னோக்கிச் செல்வேன்.

அந்த இருவரோடும் இணைந்து போட்டி ஒன்றில் ஆடுவது எனக்கு மிகவும் இலகுவானது. எப்போதும் அந்த இருவரும் பேசிக்கொள்வார்கள். நான் எப்போது அந்த இருவருடனும் இருப்பேன், அவர்களோடுதான் பேசிக்கொள்வேன, கேலி செய்வேன். அந்த இருவரோடும் தான் பல விடயங்களையும் பகிர்ந்து கொள்வேன்’ என்று தனன்ஜய இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர்களையே உள்ள பினைப்பை கூறினார்.

‘எமது சுழற்பந்து வீச்சாளர்கள் இருவரும் உண்மையிலேயே மிகச் சிறந்தவர்கள். ரங்கன, தில்ருவன் இருவருக்கும் அப்பால் சுழற்பந்து வீச்சு பற்றி பேசுவதில் பயனில்லை’ என்றும் அவர் கூறினார்.        

40 வயதுடைய ரங்கன ஹேரத் மற்றும் 36 வயதுடைய தில்ருவன் பெரேராவுக்கு அடுத்து இலங்கை அணியின் சுழல் எதிர்பார்ப்பாக 24 வயதான அகில தனன்ஜய மாறி வருகிறார். தனன்ஜய ஆடும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இதுவென்பதோடு இதுவரை அவர் 5 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அவர் இரண்டு தடவைகள் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘பியல் (விஜேதுங்க) சேருடன் இணைந்து நான் அதிகமாக பயிற்சி பெறுகிறேன். ஓப் ஸ்பின் மாத்திரமல்ல, ஒரு நாளைய பயிற்சி முடியும்போது நான், கூக்லி, லெக் ஸ்பின் எல்லாவற்றையும் பூர்த்தி செய்வேன்.

நாம் பழைய பந்தில் மாத்திரமல்ல புதிய பந்திலும் எப்போதும் பயிற்சி பெறுகிறோம். (சுழற்பந்து பயிற்சியாளர்) பியல் சேர் எப்போதும் இது பற்றி கவனம் செலுத்துவார். ஒரு பந்தில் மாத்திரமல்ல, புதிய பந்திலும் நாம் எப்போதும் பயிற்சியில் ஈடுபடுவோம். அது எமக்கு மிகவும் பயன் தருவதாக இருக்கும்’ என்றும் தனன்ஜய குறிப்பிட்டார்.