அலிசன் லிவர்பூல் அணிக்கு சாதனை தொகைக்கு ஒப்பந்தம்

422
Image Courtesy - Getty image

ரோமா கோல் காப்பாளர் அலிசன் பெக்கரை 66.8 மில்லியன் யூரோவுக்கு (சுமார் 12 பில்லியன் ரூபாய்) வாங்க இங்கிலாந்தின் முன்னணி கால்பந்துக் கழகமான லிவர்பூர் இணங்கியுள்ளது.  இதன்படி பிரேசில் அணியின் கோல் காப்பாளரான அலிசனுடன் பிரீமியர் லீக்கில் முக்கிய வீரராக மாற்றம் பெறுகின்றார்.

ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன் இணைந்தார் ரொனால்டோ

ரியெல் மெட்ரிட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்…

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோமா அணிக்காக ஆடிவரும் 25 வயதுடைய அலிசன், பிரேசில் தேசிய அணிக்காக முதல் முறை ஆடிய நிலையில் கடந்த பருவத்தில் 37 சீரி A போட்டிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் மூலம் அலிசன் வரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார். 2001 ஆம் ஆண்டு கியான்லிகி பப்போன் பார்மா கழகத்தில் இருந்து 53 மில்லியன் யூரோவுக்கு ஜுவான்டஸுக்கு ஒப்பந்தமானதே இதுவரையில் சாதனையாக உள்ளது.  

எனினும், பிரீமியர் லீக்கில் அதிக விலைக்கு ஒப்பந்தமான கோல் காப்பாளராக பிரேசிலின் எடர்சன் உள்ளார். அவர் 2017 ஜுன் மாதம் பென்பிகாவில் இருந்து 40 மில்லியன் யூரோவுக்கு மன்செஸ்டர் சிட்டிக்கு ஒப்பந்தமானார்.  

டிரான்மியர் கழகத்திற்கு எதிரான நட்புறவு போட்டியில் மற்றொரு தவறை இழைத்த லிவர்பூல் கோல் காப்பாளர் லொரிஸ் கரியஸை அந்த அணியின் முகாமையாளர் ஜுர்கன் க்ளொப் கடந்த வாரம் பாதுகாத்து கருத்து வெளியிட்டிருந்தார்.

ஜெர்மனியின் 25 வயது வீரரான கரியஸ், ப்ரீ கிக் ஒன்றில் பந்தை கையிலிருந்து நழுவவிட்டதால் பிரென்டனில் நடந்த போட்டியில் டிரான்பியர் அணியினால் கோல் ஒன்றை பெற முடிந்தது. எனினும், கடந்த ஜூலை 10ஆம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில் லிவர்பூல் அணியால் 3-2 என வெற்றி பெற முடிந்தது.

ரியெல் மெட்ரிட்டிடம் 1-3 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்ற  சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியிலும் லொரிஸ் கரியஸ் செய்த தவறுகளால் எதிரணிக்கு இரண்டு கோல்களை பெற வாய்ப்பு கிடைத்தது.  

மறுபக்கம், உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் ஆடிய ஐந்து போட்டிகளிலும் அந்த அணிக்கு கோல் காப்பாளராக செயற்பட்ட அலிசன் மூன்று போட்டிகளில் எதிரணிக்கு கோல் விட்டுக்கொடுக்காமல் பாதுகாத்தார். எனினும், பிரேசில் உலகக் கிண்ணத்தில் காலிறுதிவரை முன்னேறி பெல்ஜியத்திடம் தோல்வியை சந்தித்து வெளியேறியது.     

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<