இந்திய டெஸ்ட் குழாமில் முதன்முறையாக இடம்பிடித்தார் ரிஷப் பாண்ட்

571

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் மூன்று போட்டிகளுக்கான அணிக் குழாத்தின் விபரத்தினை இந்திய கிரிக்கெட் சபை இன்று (18) அறிவித்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நேற்று (17) நிறைவுக்கு வந்தது. தீர்மானமிக்க இறுதி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இதனால், விராட் கோஹ்லியின் தலைமையில் முதல் ஒரு நாள் தொடரினையும் இந்தியாவிற்கு இழக்க நேரிட்டது.

ஜோ ரூட்டின் சதத்துடன் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து

இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையில் லீட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

இந்தநிலையில், ஒரு நாள் தொடரின் தோல்வியை ஈடுகட்ட வேண்டும் என்ற முனைப்புடன் காத்திருக்கும் இந்திய அணி, டெஸ்ட் தொடரின் வெற்றியின் மீது கவனம் செலுத்தியுள்ளது. இதன் அமைவாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள அணிக் குழாத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அணியின் தலைவராக விராட் கோஹ்லி செயற்பட்டு வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தலைவராக செயற்பட்ட அஜின்கியா ரஹானே உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித் சர்மா அணிக் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், விரிதிமன் சஹா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் உபாதை காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட்டுடன் மீண்டும் இணையும் ஏபி டி வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் தலைவர் மற்றும்….

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக புவனேஷ்வர் குமார் டெஸ்ட் குழாத்தில் இடம்பிடிக்கவில்லை என கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எனினும், தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அவர், மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்படலாம் என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே வெளியாகியிருந்த அறிவிப்பின் படி, உபாதைக்குள்ளாகியுள்ள விக்கெட் காப்பாளர் விரிதிமன் சஹாவின் இடம் தினேஷ் கார்த்திக்குக்கு வழங்கப்பட்டுள்ளது. இவருடன் ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய விக்கெட் காப்பாளர், துடுப்பாட்ட வீரர் ரிஷப் பாண்ட், மேலதிக விக்கெட் காப்பாளராக முதன்முறையாக டெஸ்ட் அணிக்குள் இணைந்துள்ளார். அத்துடன் இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் T-20 குழாத்தில் புதிதாக இடம்பிடித்த சர்துல் தாகூர் டெஸ்ட் குழாத்திலும் இடம்பிடித்துள்ளார்.

இவர்களுடன் துடுப்பாட்ட வீரர் கருண் நாயர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், இந்திய அணியின் உடற்தகுதி பரிசோதனையில் (Yo Yo Test) தோல்வியடைந்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வாய்ப்பை இழந்த மொஹமட் சமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய அணியில் விரிதிமன் சஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்?

இங்கிலாந்து அணிக்கெதிராக அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் ஐந்து போட்டிகள்…

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணிக் குழாத்தில் 5 முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஹர்திக் பாண்டியாவுடன் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் குழாத்தில் இடம்பிடித்துள்ளனர். மொஹமட் சமி, ஜஸ்பிரிட் பும்ரா, சர்துல் தாகூர், இசான் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை பலப்படுத்தும் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன், இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் சிறந்த பந்து வீச்சு பிரதியினை பதிவுசெய்த குல்டீப் யாதவ் டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணியின் விபரம்

விராட் கோஹ்லி (தலைவர்), சிக்கர் தவான், கே.எல்.ராஹுல், முரளி விஜய், செட்டேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக் (விக்கட் காப்பாளர்), ரிஷப் பாண்ட் (விக்கெட் காப்பாளர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்டீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, இசான் சர்மா, மொஹமட் சமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, சர்துல் தாகூர்