இலங்கையின் நீர்நிலை போட்டிகளில் அதிகளவான வீரர்களை உருவாக்கிய பெருமையைக் கொண்ட கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரிக்கும் இடையிலான அங்குரார்ப்பண நீர்நிலை சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் கொழும்பு றோயல் கல்லூரி சம்பியனாகத் தெரிவாகியது.
கொழும்பு றோயல் கல்லூரியின் வட அமெரிக்க பழைய மாணவர் சங்கத்தினால் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டித் தொடர் கடந்த வாரம் கொழும்பு சுகததாஸ நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.
SABA சம்பியன்ஷிப் வெற்றியாளர் மகுடத்துடன் நாடு திரும்பிய இலங்கை அணி
டாக்காவில் இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய..
9 முதல் 19 வயது வரையிலான பிரிவுகளுக்காக நடைபெற்ற இப்போட்டித் தொடரில் சாதாரண மற்றும் கலப்பு நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் சாவிந்த திஸாநாயக்க தலைமையிலான கொழும்பு றோயல் கல்லூரி அணி, இத்தொடர் முழுவதும் தமது ஆதிகத்தை செலுத்தியிருந்ததுடன் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகளுக்கான கொமாண்டர் ஏ.சி திஸாநாயக்க கிண்ணத்தையும், கிரியென் கொரியா கிண்ணத்தையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இம்முறைப் போட்டித் தொடரின் 8 பிரிவுகளுக்காக நடைபெற்ற போட்டிகளில் 7 இல் றோயல் கல்லூரி அணி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், புனித தோமியர் கல்லூரி அணி, 19 வயதுக்குட்பட்ட 4X100 தொடர் நீச்சல் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இதில் கொழும்பு றோயல் கல்லூரி அணி, 9 வயதுக்குட்பட்ட 4X50 கலவை மற்றும் சாதாரண நீச்சல், 11 வயதுக்குட்பட்ட 4X50 கலவை நீச்சல், 13 வயதுக்குட்பட்ட 4X50 கலவை நீச்சல், 15 வயதுக்குட்பட்ட 4X100 சாதாரண நீச்சல் மற்றும் 17 வயதுக்குட்பட்ட 4X100 சாதாரண நீச்சல் போட்டிகளில் தமது ஆதிக்கத்தினை செலுத்தியிருந்தது.
Photos: Royal -Thomian Aquatic Championship for the Dr. Jey Gunasegaram Trophy
Photos of Royal-Thomian Aquatic Championship for the…
இதேநேரம், புள்ளிகள் பட்டியலில் றோயல் கல்லூரியின் கனிஷ்ட பிரிவு 204 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டதுடன், புனித தோமியர் கல்லூரிக்கு 138 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. இதன்படி, கொமாண்டர் ஏ.சி திஸாநாயக்க கிண்ணத்தை அந்த அணி பெற்றுக்கொண்டது.
அத்துடன், சிரேஷ்ட பிரிவில் 183 புள்ளிகளைப் பெற்று றோயல் கல்லூரி முதலிடத்தையும், 159 புள்ளிகளைப் பெற்ற தோமியர் கல்லூரி இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொள்ள, கிரியென் கொரியா கிண்ணமும் றோயல் கல்லூரி வசமானது.
இறுதியாக றோயல் கல்லூரி ஏ அணிக்கும், தோமியர் கல்லூரி பழைய மாணவர் அணிக்கும் இடையிலான கண்காட்சி சாதாரண கலவை நீச்சல் போட்டியில் றோயல் கல்லூரி ஏ அணி வெற்றியைப் பதிவு செய்தது.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<