சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (ஐ.சி.சி.) கிரிக்கெட் விளையாட்டின் நேர்மை தன்மையை பேணுவதற்கும், கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவத்தை காப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
குளோபல் டி-20 தொடரிலிருந்து திசர, தசுன் மற்றும் இசுரு உதான விலகல்
ஐ.சி.சி இன் இணை அங்கத்துவ நாடான கனடா கிரிக்கெட் சபையினால் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் முதல் தடவையாக……
இந்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக ஐ.சி.சி. ஆனது கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்க கோவைகள் மற்றும் ஊக்கமருந்து பாவனை தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய செயலி (App) ஒன்றினை வெளியிட்டுள்ளது.
“ICC Integrity” என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளிலும், டப்களிலும் (Tab) பயன்படுத்த முடியுமாக இருக்கின்ற இதே தருணத்தில் கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்க கோவைகள், ஊக்கமருந்து பாவனை போன்றவை தொடர்பான தகவல்களை அனைவருக்கும் விரல் நுனியில் வழங்குவது செயலி உருவாக்கப்பட்டதன் நோக்கமாகும்.
இந்த புதிய செயலி கிரிக்கெட் வீரர்களுக்கும், கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த உத்தியோகத்தர்களுக்கும் கிரிக்கெட்டின் ஒழுங்குமுறையினைப் பேணுவதற்கு என்னென்ன விடயங்கள் தேவையாக இருக்கின்றதோ? அவை அனைத்தையும் உள்ளடக்கிய விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த செயலியில் உள்ள விடயங்களை அறிவதன் மூலம் எதிர்காலத்தில் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் சார்ந்த உத்தியோகத்தர்களும் விளையாட்டின் மகத்துவத்தை சரியான முறையில் பேண சந்தர்ப்பம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.
ஆறு மாதங்களில் இலங்கை சிறந்த அணியாக உருவெடுக்கும் – ஹத்துருசிங்க
எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இலங்கை அணி சிறந்த நிலைக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ள இலங்கை அணியின்…….
மேலும், இந்த செயலியில் கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவத்தை குறைக்கும் சம்பவங்களோ அல்லது ஊக்கமருந்து பாவனை தொடர்பான சம்பவங்களோ இடம்பெறுவதை அவதானித்தால் அவ்வாறான சம்பவங்களை முறைப்பாடு செய்வதற்கான வசதியும் காணப்படுகின்றது.
இந்த செயலியின் உருவாக்கம் பற்றி பேசிய ஐ.சி.சி. இன் நிறைவேற்று அதிகாரியான டேவ் ரிச்சட்சன் “ ஐ.சி.சி. விளையாட்டின் மகத்துவத்தை பாதுகாக்க பெரும் முனைப்பினைக் கொண்டிருக்கின்றது. எனவே, இந்த செயலி எங்களது இலக்கினை அடைய மிகப் பெரியதொரு பாத்திரத்தினை எடுத்துக் கொள்ளும் . “ எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஐ.சி.சி. இன் புதிய செயலியானது தற்போதைய, முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களிடையேயும், கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பினை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.