இங்கிலாந்திடம் பலத்தை நிரூபித்த பெல்ஜியம்: டியூனீசியாவுக்கு ஆறுதல் வெற்றி

243

அத்னன் ஜெனுசாஜ்ஜின் அபார கோல் மூலம் G குழுவில் பலம் கொண்ட அணியை தீர்மானிக்கும் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அந்த குழுவில் முதல் இடத்தை பிடித்தது. எனினும் இந்த இரு அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 

இதனிடையே இந்த குழுவில் ஏற்கனவே ஆரம்ப சுற்றுடன் வெளியேறிய பனாமா மற்றும் டியூனீசியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆபிரிக்க மண்டலத்தின் டியூனிசியா 2-1 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றியை பெற்றது.

நியாயமான ஆட்ட விதிகளின் கீழ் கொலம்பியாவுடன் ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் லீக் ஆட்டங்களின் கடைசி நாளான …

ரஷ்ய நேரப்படி வியாழக்கிழமை (28) நடைபெற்ற இந்த இரு போட்டிகளுடன் இம்முறை உலகக் கிண்ண கால்பந்து தொடரின் 15 நாட்கள் நடைபெற்ற ஆரம்ப சுற்று போட்கள் 48உம் முடிவுற்றன. இதன்படி நொக் அவுட் சுற்றுக்கான 16 அணிகளும் தேர்வாகியுள்ளன.

இங்கிலாந்து எதிர் பெல்ஜியம்

கலின்கிரேட்டில் நடைபெற்ற பனாமா அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியில் இருந்து எட்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததோடு பெல்ஜியம் அணியில் ஒன்பது மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் இரு அணிகளும் வெற்றிக்கு அதிக முன்னுரிமை வழங்காதது போலவே போட்டியை ஆரம்பித்தது.

குறிப்பாக இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிக கோல் பெற்றிருக்கும் (05) இங்காலந்தின் கோல் இயந்திரமான அணித்தலைவர் ஹரி கேன் ஆசனத்தில் அமரவைக்கப்பட்டதோடு பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் லுகாகுவும் காயம் காரணமாக ஆசனத்தில் அமரவைக்கப்பட்டிருந்தார்.

எனினும் போட்டியின் முதல் பாதி ஆட்டம் இரு அணிகளுக்கும் கோல் இன்றியே முடிவுற்றது. இரு அணிகளும் ஆரம்பத்தில் கோல் பெற கடுமையாக போராடின.

முதல் பாதி: இங்கிலாந்து 0 – 0 பெல்ஜியம்

பின்னர், 51 ஆவது நிமிடத்தில் யூரி டிலமன்ஸ் பரிமாற்றிய பந்தை பெனால்டி எல்லையின் மேல் இடது மூலையில் வலது புரமாக இருந்து அத்னன் ஜெனுசாஜ் வளைவாகச் செல்லும் வகையில் உதைத்ததில் அது கோலாக மாறியது. இதன்மூலம் பெல்ஜியம் அணி முதல் கோலை பெற்றதோடு இங்கிலாந்து கடைசிவரை பதில் கோல் திருப்பாத நிலையில் அது வெற்றி கோலாகவும் மாறியது.

பெல்ஜியம் அணிக்காக இதுவரை ஒன்பது போட்டிகளில் ஆடி இருக்கும் ஜெனுசாஜ் அந்த அணிக்காக போட்ட முதல் கோல் இதுவாகும்.

குறிப்பாக மன்செஸ்டர் யுனைடெட் முன்கள வீரர் மர்கஸ் ரஷ்போர்ட்டுக்கு பதில் கோல் புகுத்த சிறந்த வாய்ப்பொன்று கிட்டியபோதும் அவர் கோலை நோக்கி உதைத்த பந்தை பெல்ஜியம் கோல் காப்பாளர் திபவுட் கோர்டொய்ஸ் தடுத்தார்.

உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியன் பேர் கிரிக்கெட்டுக்கு ஆதரவு

பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் விறுவிறுப்புக்கு …

எனினும் இந்த வெற்றியின் மூலம் 82 ஆண்டுகளுக்கு பின்னர் பெல்ஜியத்தால் இங்கிலாந்தை வெல்ல முடிந்துள்ளது. பெல்ஜியம் அணி கடைசியாக 1936 மே 9ஆம் திகதி பிரசல்சில் நடந்த நட்புறவுப் போட்டியிலேயே இங்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்நிலையில் இந்த வெற்றியை அடுத்து G குழுவின் மூன்று போட்டிகளிலும் வென்று மொத்தம் 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்ற பெல்ஜியம் அணி நொக் அவுட் சுற்றில் வரும் ஜூலை 2 ஆம் திகதி ரொஸ்டொவ-ஓன்-டோனில் ஜப்பான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மறுபுறம் இங்கிலாந்து அணி தனது காலிறுதிக்கு முந்திய சுற்றில் H குழுவில் முதலிடத்தை பெற்ற கொலம்பியாவை எதிர்கொள்ளும். இந்தப் போட்டி ஜூலை 3ஆம் திகதி மொஸ்கோவில் நடைபெறவுள்ளது.

முழு நேரம்: இங்கிலாந்து 0 – 1 பெல்ஜியம் 

கோல் பெற்றவர்கள்

பெல்ஜியம் அத்னன் ஜெனுசாஜ் 51′

பனாமா எதிர் டியூனீசியா

மொர்டோவியா அரங்கில் நடைபெற்ற போட்டியில் டியூனீசியா மற்றும் பனாமா இரு அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறாத நிலையில் உலகக் கிண்ணத்தில் தனது முதல் வெற்றியை எதிர்பார்த்தே களமிறங்கின.

எனினும் 31 ஆவது நிமிடத்தில் வைத்து பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து பனாமா வீரர் ஜோஸ் லுயிஸ் ரொட்ரிகஸ் கோலை நோக்கி உதைத்த பந்து எதிரே இருந்த யாசிஸ் மெரியாஹ்வின் மீது பட்டு கோல்காப்பாளருக்கு தடுக்க முடியாமல் ஓன் கோலாக மாறியது. இது உலகக் கிண்ண வரலாற்றில் பெறப்படும்; 50ஆவது ஓன் கோலாக இருந்தது.

முதல் பாதி: பனாமா 1 – 0 டியூனீசியா

இரண்டாவது பாதி ஆட்டம் டியூனீசியாவுக்கே சாதகமாக இருந்தது. 51ஆவது நிமிடத்தில் பக்ரத்தீன் பென் யூசப் எதிரணி கோல் கம்பத்திற்கு நெருங்கிய தூரத்தில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தி டியூனீசிய அணிக்கு பதில் கோல் போட்டார். இதன்மூலம் அவர் பிஃபா உலகக் கிண்ண வரலாற்றில் 2,500ஆவது கோலை பெற்றவராக வரலாற்றில் இடம்பெற்றார்.

தொடர்ந்து 64 ஆவது நிமிடத்தில் அவுசாமா ஹத்தாதி பரிமாற்றிய பந்தை எதிரணி கோல் கம்பத்திற்கு அருகில் வைத்து பெற்ற வஹ்பி கஸ்ரி அதனை வலைக்குள் தட்டிவிட்டு டியூனீசிய அணிக்கு வெற்றி போலை பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியானது டியூனீசிய அணி உலகக் கிண்ணத்தில் 40 ஆண்டுகளின் பின் பெற்ற முதல் வெற்றி என்பதோடு அந்த அணி உலகக் கிண்ண வரலாற்றில் பெறும் இரண்டாவது வெற்றியாகும். கடைசியாக 1978இல் தனது முதல் உலகக் கிண்ண தொடரில் பங்கேற்றபோது டியூனீசிய அணி மெக்சிகோவை 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முழு நேரம்: பனாமா 1 – 2 டியூனீசியா

கோல் பெற்றவர்கள்

பனாமா யாசிஸ் மெரியாஹ் 33′ (ஓன் கோல்)

டியூனீசியா பென் யூசப் 52′, வஹ்பி கஸ்ரி 66′