பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீராங்கனை உலக சாதனை

287

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் இரட்டை சதம் கடந்து 232 ஓட்டங்களைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்துஅயர்லாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 440 ஒட்டங்களைக் குவித்தது.

மேற்கிந்திய தீவுகளிலிருந்து நாடு திரும்பும் மெதிவ்ஸ், லஹிரு கமகே

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்..

இதில் நியூசிலாந்து அணியின் 17 வயது வீராங்கனை அமெலியா கெர் 232 ஓட்டங்களைக் (145 பந்து, 31 பௌண்டரி, 2 சிக்ஸர்) குவித்திருந்தார். இதன்மூலம் ஒரு நாள் அரங்கில் இரட்டைச் சதம் பெற்ற உலகின் 2ஆவது வீராங்கனை என்ற சிறப்பையும், இளம் வயதிலேயே இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கெண்டார்.

இவற்றுக்கு மேலாக, மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்க் 1997ஆம் ஆண்டு டென்மார்க் அணிக்கு எதிராக 229 ஓட்டங்களை எடுத்ததே மகளிர் கிரிக்கெட்டில் அதிகபட்சமான தனிநபர் ஓட்டமாக இருந்தது. அவரது 21 ஆண்டு கால சாதனைக்கு அமெலியா கெர் முடிவு கட்டினார். Amelia Kerr

இந்நிலையில், கடின இலக்கை நோக்கி பதிலுக்கு துடுபெடுத்தாடிய அயர்லாந்து அணிக்கு ரெய்மெண்ட ஹோய் (42), கவானாங் (29) நம்பிக்கை தந்தனர். மற்ற வீராங்கனைகள் ஏமாற்ற, அயர்லாந்து அணி 44 ஓவர்களில் 135 ஓட்டங்களுக்கு சுருண்டு ஹெட்ரிக் தோல்வியை சந்தித்தது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 490 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்தது. ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளிலேயே பெறப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் இது பதிவானது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 346 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை ‘A’ குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் ‘A’ அணிக்கு எதிராக இம்மாத இறுதியில்…

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 418 ஓட்டங்களைக் குவித்தது. பதிலெடுத்தாடிய அயர்லாந்து அணி 112 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் 306 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அந்த அணி மகளிருக்கான ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த அணியாகவும் சாதனை படைத்தது.

இந்நிலையில், துடுப்பில் உலக சாதனை படைத்த 17 வயதான அமெலியா கெர் பந்துவீச்சிலும் அசத்தி 17 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். ஒரு நாள் அரங்கில் இது அவரது தனிப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.

போட்டியின் ஆட்ட நாயகியாகவும், தொடர் நாயகியாகவும் அமெலியா கெர் தெரிவானார்.

அதேபோன்று, 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<