தடுமாற்றம் கண்ட புனித பேதுரு கல்லூரியை வென்றது கிண்ணியா அல் அக்ஸா

1007

கொழும்பு, புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பிரிவு ஒன்று பாடசாலைகள் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் முதல் வாரத்தின் போட்டியில் பலம் கொண்ட புனித பேதுரு கல்லூரிக்கு எதிராக கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி 4-3 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆரம்பப் போட்டியில் ஆக்ரோசம் காண்பித்த ஸாஹிரா வீரர்கள்

ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பிரிவு ஒன்று பாடசாலைகள் ..

புனித பேதுரு கல்லூரி தேசிய குழாமில் இருக்கும் ஷபீர் ரசூனியா தலைமையில் பல அனுபவ வீரர்களுடன் தனது சொந்த மைதானத்தில் தனக்கு சாதகமாகவே இந்த போட்டியில் களமிறங்கியது. மறுபுறம் 2017 இல் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவு இரண்டு சம்பியன் பட்டத்தை வென்ற அல் அக்ஸா கல்லூரி முதல் நிலை பிரிவில் தனது கன்னி போட்டியிலேயே ஆடியது.

போட்டியின் 3ஆவது நிமிடத்தில் அல் அக்ஸா அணிக்கு 35 மீற்றர் தூரத்தில் ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்ட அல் அக்ஸா அணித் தலைவர் மொஹமட் ரொஹான் பந்தை வலைக்குள் செலுத்தினார். புனித பேதுரு கல்லூரி கோல்காப்பாளர் மொஹமட் அஹ்னாப் பந்தை தவறாக கணிக்க அந்த பந்து அவரது தலைக்கு மேலால் சென்று கோலாக மாறியது.

இந்த அதிர்ச்சி கோலை அடுத்து அணி திரண்ட புனித பேதுரு வீரர்கள் எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமிக்கவாயினர். இதன்போது பல கோல் வாய்ப்புகளையும் அந்த அணி தவறவிட்டன.

இந்நிலையில் புனித பேதுரு கல்லூரியின் பின்கள வீரர்களின் தவறை பயன்படுத்தி அல் அக்ஸா மற்றொரு கோலை புகுத்தியது. பின்கள வீரர் டி. ரோனி சக வீரர் எளிதாக பரிமாற்றிய பந்தை உதைக்க அது அல் அக்ஸா வீரர் மொஹமட் நிமிரிடம் சென்றது. இதன்போது கோல்காப்பாளர் கோல் எல்லையில் இருந்து விலக பந்தை வலைக்குள் புகுத்த அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.        

இதன்மூலம் போட்டியின் ஆரம்பத்திலேயே அல் அக்ஸா அணி 2-0 என முன்னிலை பெற்ற நிலையில் புனித பேதுரு கல்லூரி தனக்கான வாய்ப்பை தேடி போராடியது.

Photos: St.Peter’s College v Al Aqsa College, Kinniya | U18 Division I (2018)

ThePapare.com | Hiran Weerakkody | 06/06/2018 Editing and re-using images without …

இந்நிலையில் 35 ஆவது நிமிடத்தில் அல் அக்ஸா பின்கள வீரர்களின் தடுமாற்றத்தை பயன்படுத்தி கொழும்பு வீரர் எல்.. அதுல்கோரல பரிமாற்றி பந்தை மொஹமட் இஹ்சான் கோலாக மாற்றினார். இரண்டு நிமிடங்களில் அல் அக்ஸா அணியின் பெனால்டி எல்லைக்குள் மொஹமட் பர்சாத்தின் கையில் பந்துபட புனித பேதுரு கல்லூரிக்கு பெனால்டி உதை ஒன்று கிடைத்தது. அதனைக் கொண்டு இஹ்சான் மற்றொரு கோலை பெற்றார்.    

முதல்பாதி ஆட்டம் முடியும் தருவாயில் மொஹமட் அகீல் கோல் ஒன்றை பெற புனித பேதுரு கல்லூரி இறுதிக் கட்ட அபாரத்தினால் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது.  

முதல் பாதி : புனித பேதுரு கல்லூரி 3 – 2 அல் அக்ஸா கல்லூரி

இரண்டாவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் புனித பேதுரு வீரர்கள் சிறப்பாக பந்துகளை பரிமாற்றி எதிரணிக்கு சவால் கொடுத்தனர். எனினும் இரு அணிகளும் வேகத்தை அதிகரித்தபோது பல வீரர்களும் களைப்புற்றிருப்பதை காணமுடிந்தது.

எனினும், 70 ஆவது நிமிடத்தில் மொஹமட் ரொஹான் போட்ட மற்றொரு கோலால் அல் அக்ஸா கல்லூரி போட்டியை 3-3 என சமநிலைக்கு கொண்டுவந்தது.

2018 பிஃபா உலகக் கிண்ண வாய்ப்பை இழந்த பிரபலங்கள்

இம்மாதம் 14 ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ள பிஃபா உலகக் கிண்ண …

போட்டியின் கடைசி 10 நிமிடங்களில் கோல் பெறுவதற்கு புனித பேதுரு அணியினர் கடுமையாக போராடியபோதும் அல் அக்ஸா பின்கள வீரர்கள் வலுவான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் 85ஆவது நிமிடத்தில் புனித பேதுரு கல்லூரியின் தற்காப்பு வீரர்கள் மற்றொரு தவறை இழைக்க பந்து நேராக மொஹமட் பஹாத்தின் காலுக்கு சென்றது. அதனை சரியாக பன்படுத்திக் கொண்ட அவர் அல் அக்ஸா கல்லூரிக்காக வெற்றி கோலை புகுத்தினார்.

முழு நேரம் : புனித பேதுரு கல்லூரி 3 – 4 அல் அக்ஸா கல்லூரி  

கோல் பெற்றவர்கள்

புனித பேதுரு கல்லூரிமொஹமட் இஹ்சான் 35′ & 37′, மொஹமட் அகீல் 43′

அல் அக்ஸா கல்லூரிமொஹமட் ரொஹான் 03′ & 70′, மொஹமட் நிம்ரி 29′, மொஹமட் பஹத் 85′   

மஞ்சள் அட்டை  

அல் அக்ஸா கல்லூரிமொஹமட் ரொஹான் 75′

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…