தேசிய விளையாட்டு விழா கபடி போட்டியில் கிழக்கு மாகாணத்திற்கு இரண்டாமிடம்

284

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கடற்கரை கபடி போட்டிகளின் ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை ஊவா மாகாணமும், பெண்கள் பிரிவில் வட மத்திய மாகாணமும் சம்பியன்களாகத் தெரிவாகயிருந்துடன், கிழக்கு மாகாணம் இவ்விரண்டு பிரிவுகளிலும் 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டன.

இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் கடற்கரை கபடி போட்டிகள் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (01) ஆரம்பமாகியது.

இதில் இலங்கையின் 9 மாகாணங்களையும் சேர்ந்த கபடி வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

இதன்படி, இப்போட்டியின் இறுதிப் போட்டிகள் நேற்று (5) நடைபெற்றதுடன், இதன் ஆண்கள் பிரிவில் கிழக்கு மாகாண அணியை வீழ்த்திய ஊவா மாகாணம் சம்பியனாகத் தெரிவாகியது.

அதேநேரம் பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் வட மத்திய மாகாணமும், கிழக்கு மாகாணமும் போட்டியிட்டிருந்ததுடன், வட மத்திய மாகாணம் சம்பியனாகத் தெரிவாகியது.

இந்நிலையில், பெண்களுக்கான மூன்றாம் இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் விதிகள் மீறப்பட்டதாக ஓர் அணியினால் மேன்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகள் முடியும் வரை மூன்றாம் இடத்துக்கான வெற்றி வழங்கப்படாது எனவும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இம்முறை போட்டித் தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஊவா மாகாணத்தைச் சேர்ந்த எம்.சி.ஆர் சமரகோன் பெற்றுக்கொள்ள, சிறந்த வீராங்கனைக்கான விருதை வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஆர்.டீ.என் மல்காந்தியும் பெற்றுக்கொண்டனர்.

  • ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்கள்

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<