ஆரம்பப் போட்டியில் ஆக்ரோசம் காண்பித்த ஸாஹிரா வீரர்கள்

420

ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பிரிவு ஒன்று பாடசாலைகள் கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் புதிதாக தகுதி உயர்வு பெற்ற கந்தானை, டி மெசனொட் கல்லூரிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய ஸாஹிரா கல்லூரி 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.    

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே டி மெசனொட் கல்லூரி முதல் நிலை பிரிவுக்கு திரும்பியுள்ளது. 2016 ஆம் ஆண்டு தரம் குறைக்கப்பட்ட அந்த கல்லூரி, 2017 இல் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவு இரண்டு சம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடத்தை பிடித்து தகுதி உயர்வு பெற்றதோடு ஸாஹிரா கல்லூரி கடந்த பருவத்தில் 4 ஆவது இடத்தையே பெற்றது.

>> ரியெல் மெட்ரிட்டுக்கு வெற்றிகள் தேடிக்கொடுத்த சிடான் திடீர் ராஜினாமா

போட்டி ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களில் இரு அணிகளும் தனது முதல் உதையை தொடங்குவதற்கு தடுமாற்றம் கண்ட நிலையில் டி மெசனொட் கோலை நோக்கிய முதல் உதையை பெற்றது. எனினும், துரதிஷ்டவசமாக டி மெசனொட் கோல்காப்பாளர் பவன் நிம்சர 5ஆவது நிமிடத்தில் செய்த தவறின் மூலம் ஸாஹிரா அணிக்கு முதல் கோல் கிடைத்தது. நீண்ட தூரத்தில் இருந்து ஹசன் ராசா உதைத்த பந்தை பிடிக்க கோல்காப்பளர் தவறியதால் அது அவருக்கு இலகுவான கோலாக மாறியது.

இரு அணிகளும் எதிரணியை தடுப்பதில் தீவிரம் காட்டியபோது வீரர்கள் முட்டி மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். இதில் மெசனொட் வீரர் ஒருவரின் உக்கிரமான தடுக்கும் முயற்சி சிவப்பு அட்டை பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியபோதும் அதிர்ஷ்டவசமாக நடுவர் மஞ்சள் அட்டையையே காண்பித்தார்.

பானுக்க ஜயகொடி பந்தை தலையால் முட்டி கோலாக்க முயன்றபோதும் அது நேராக கோல்காப்பாளரின் கைகளுக்கு சென்றது. அது தொடக்கம் டி மெசனொட் கல்லூரி சமநிலை கோலை பெறுவதற்கு வாய்ப்புக்கு மேல் வாய்ப்புகளை பெற்றது.

இதன்போது ஸாஹிரா கல்லூரி கோல்காப்பாளர் தனது நேரம் தவறி பந்தை பெற அவசரம் காட்டியபோது பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. டி மெசனொட் முன்கள வீரர் அந்த சந்தர்ப்பம் கிட்டிய உற்சாகத்தில் பந்தை உதைக்க அது சரியாக படமால் கோல் எல்லையில் எதிரணி பின்கள வீரரிடம் பட்டுவர மீண்டும் அந்த பந்தை உதைத்தபோதும் அது கோல்காப்பாளரின் கைகளுக்கு நேராக சென்றது.

வாய்ப்புகளை தவற விட்ட டி மெசனொட் கல்லூரி அணிக்கு ஸாஹிரா கடும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் அந்த அணி இரண்டாவது கோலையும் போட்டது. மெசனொட் கல்லூரி கோல் காப்பாளர் மீண்டும் ஒருமுறை தவறாக தனது எல்லையில் இருந்து வெளியேறி பந்தை பெறுவதற்கு வந்தபோது அது அப்துல் ரஸ்ஸாக்கிற்கு இலகுவாக வலைக்குள் பந்தை செலுத்த வழி ஏற்படுத்தியது.

>> மெஸ்ஸியின் ஹெட்ரிக் கோல் மூலம் நம்பிக்கையோடு உலகக் கிண்ணம் செல்லும் ஆர்ஜன்டீனா

கடைசியாக, 36 ஆவது நிமிடத்தில் டி மெசனொட் கல்லூரி தனது வாய்ப்பை பெற்று பெனால்டி எல்லைக்குள் இருந்து பிரோமோத் டில்ஷான் வேகமாக உதைக்க அது எதிரணி கோல் காப்பாளரை மீறி வலைக்குள் சென்றது.

ஸாஹிரா கல்லூரி கோல்காப்பளர் பந்தை நழுவவிட்டபோது டி மெசனொட் கல்லூரிக்கு மற்றொரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. அப்போது டி மெசனொட் வீரர் பந்தை வேகமாக கோலை நோக்கி உதைத்தபோதும் ஸாஹிரா கல்லூரி பின்கள வீரர் அபாரமான முறையில் தலையால் முட்டி பந்தை கோல் எல்லைக்கு வெளியால் பறக்கச் செய்தார். இதன் மூலம் கந்தானை அணி போட்டியை சமநிலைக்கு கொண்டுவரும் முயற்சி தோல்வி அடைந்தது.

முதல் பாதி, மேலதிக நேரத்தின் சில நிமிடங்களில் ஸாஹிரா கால் தனது கோல் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துக் கொண்டது. கோனர் திசையில் இருந்து உதைத்த பந்தை ராசா வேகமாக உதைத்து கோலாக மாற்றியதன் மூலம் ஸாஹிரா கல்லூரி 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது.

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 3 – 1 டி மெசனொட் கல்லூரி

இரண்டாவது பாதியில் முன்கூட்டியே இரு அணிகளும் எதிரணி கோல் கம்பத்தை ஆக்கரமிக்க முயன்றபோதும் இரு அணிகளினதும் தற்காப்பு வலுவாக இருந்தது. இதன் போது ஸாஹிரா கல்லூரி வீரர் ஒருவர் நீண்ட தூரத்தில் இருந்து வேகமாக உதைத்த பந்து எதிரணி கோல்காப்பாளரை தாண்டி சென்றபோதும் அது கம்பத்தில் பட்டு மீண்டும் திரும்பி வந்தது. இதனால் ஸாஹிரா கல்லூரியின் கோல் பெறும் வாய்ப்பு வீணானது.

>> நடுவர் பணியில் இருந்து விலகும் பிரஷான்த் ராஜ்கிறிஷ்னா

இரு அணிகளும் கோல்பெறும் கடும் முயற்சிகளுடன் நீடித்த இரண்டாவது பாதி ஆட்டத்தில் கடைசியில் ஸாஹிரா கல்லூரி அணியால் மற்றொரு கோலைப் பெற முடிந்தது. மொஹம்மட் சாஜித் ஆக்கிரமிப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தி வந்த நிலையில் 15 யார் எல்லை விளிம்பில் இருந்து வேகமாக உதைக்க அது கோலாக மாறியது.

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 4 – 1 டி மெசனொட் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

ஸாஹிரா கல்லூரி – ஹசன் ராசா 5′ & 45’+2’, அப்துல் ரஸ்ஸாக் 34′, மொஹம்மட் சாஜித் 75′

டி மெசனொட் கல்லூரி – பிரோமோத் டில்ஷான் 36′

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

டி மெசனொட் கல்லூரி – அவிஷ்க ஜீவன்த 23′

ஸாஹிரா கல்லூரி – என். நபீல் 58′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<