மேற்கிந்திய தீவுகளுக்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கச் சென்றிருக்கும் இலங்கை அணி, தற்போது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியுடன் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடிவருகின்றது.
இந்த பயிற்சி ஆட்டத்தின் இரண்டாம் நாள் நிறைவில் இலங்கை அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டு போட்டியின் ஆதிக்கத்தினை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.
கடந்த புதன்கிழமை (30) ஆரம்பமான இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த இலங்கை, அணித்தலைவர் தினேஷ் சந்திமாலின் அபார சதத்தோடு முதல் இன்னிங்சுக்காக 89.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 318 ஓட்டங்களை குவித்து வலுவான நிலை ஒன்றினை அடைந்திருந்த வேளையில், ஆட்டத்தின் முதல் நாள் நிறைவுக்கு வந்தது. களத்தில் நிரோஷன் திக்வெல்ல 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்றிருந்தார்.
இதனை அடுத்து இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (31) தொடர்ந்தது. இரண்டாம் நாளுக்கான ஆட்டத்தில் நிரோஷன் திக்வெல்ல அரைச்சதம் கடந்தார். திக்வெல்லவுக்கு துடுப்பாட்ட ஜோடியாக இருந்த அகில தனன்ஞயவும் பெறுமதியான 30 ஓட்டங்களினை அணிக்காக சேர்த்திருந்தார். அதோடு இந்த இரண்டு வீரர்களினாலும் ஏழாம் விக்கெட்டுக்காக 72 ஓட்டங்களும் இணைப்பாட்டமாக பெறப்பட்டிருந்தது.
தொடர்ந்து, 119.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி சவால்தரக் கூடிய 428 ஓட்டங்களினை முதல் இன்னிங்சுக்காக குவித்துக் கொண்டது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் தாண்டிய நிரோஷன் திக்வெல்ல 8 பெளண்டரிகள் அடங்கலாக 117 பந்துகளுக்கு 74 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். இதேவேளை, பின்வரிசையில் அதிரடி காட்டிய லஹிரு கமகே மூன்று சிக்ஸர்களை விளாசி மொத்தமாக 22 ஓட்டங்களினை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி சார்பாக பந்துவீச்சில் இடதுகை சுழல் வீரரான ஜொமேல் வொர்ரிக்கன் 81 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ரஹ்கீம் கொன்வால் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இலங்கை அணியின் முதல் இன்னிங்சுக்கு பின்னர், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் தரப்பு, அதன் அணித்தலைவர் கெய்ரோன் பொவல் மற்றும் ஜோன் கெம்பல் ஆகியோருடன் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்தது. இந்த வீரரர்களில் ஜோன் கெம்பல் துரித கதியிலான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி வேகமான அரைச்சதம் ஒன்றினை விளாசியிருந்தார். இவரது துடுப்பாட்டத்தின் துணையோடு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் பதினொருவர் அணித்தரப்பு 14 ஓவர்களுக்குள்ளேயே நூறு ஓட்டங்களினை அண்மித்திருந்தது. பின்னர், இலங்கை அணிக்கு நெருக்கடி தந்த கெம்பலின் விக்கெட் தில்ருவான் பெரேராவினால் கைப்பற்றப்பட்டிருந்தது. ஆட்டமிழக்கும் போது ஜோன் கெம்பல் 52 பந்துகளுக்கு 11 பெளண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களினை குவித்திருந்தார்.
கெம்பல் ஆட்டமிழந்த போதிலும் மறுமுனையில் மேற்கிந்திய தீவுகளுக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட இடதுகை வீரரான கெய்ரோன் பொவல் அரைச்சதம் ஒன்றுடன் தனது தரப்புக்கு வலுச்சேர்த்தார். எனினும், பொவலின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் சிறிது நேரத்தில் அஞ்சலோ மெதிவ்சின் சிறந்த களத்தடுப்பினால் ரன் அவுட் ஒன்றுடன் 60 ஓட்டங்களோடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரினையும் தவிர தொடர்ந்து துடுப்பாட வந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் பதினொருவர் அணியின் வீரர்கள் இலங்கையின் பந்துவீச்சுக்கு தடுமாறத் தொடங்கினர். இதன் காரணமாக மிகக்குறுகிய இடைவெளிகளில் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் சபையினை பிரதிநிதித்துவம் செய்த வீரர்கள் குறைவான ஓட்டங்களினை பெற்றவாறு தமது விக்கெட்டுக்களைப் பறிகொடுத்திருந்தனர்.
துடுப்பாட்டத்தில் சரிவினை காட்டிய மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் பதினொருவர் அணி ஆட்டத்தின் இரண்டாம் இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களுடன் காணப்படுகின்றதுடன், இலங்கையினை விட 205 ஓட்டங்களால் முதல் இன்னிங்சில் பின்தங்கிய நிலையிலும் இருக்கின்றது. களத்தில் ரஹ்கீம் கொன்வால் 23 ஓட்டங்களுடனும், ஜொமேல் வொர்ரிகன் 8 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர்.
ஆரம்பத்தில் சற்று மோசமாக இருந்த போதிலும் பின்னர் சிறப்பாக செயற்பட்ட இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளரான அகில தனன்ஞய 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
// var socket=io('http://localhost:8080'); var socket=io('http://202.124.184.250:8080');
jQuery( document ).ready(function() { console.log( "ready" ); var prev_bat_team = 0;
socket.on('message',function (message) { message = JSON.parse(message); console.log(message); if( message.data.cric.commentary){ jQuery('#cmt_wrap').prepend('
'+message.data.cric.commentary.event+'
'+message.data.cric.commentary.comment+'
'); } if(message.data.cric.match){ console.log(message.data.cric.match.teams_1_inn2_r[0]); function ove(balls) { var overs = 0; if(balls %6 == 0){ overs = balls/6; }else{ overs = parseInt(balls/6)+"."+(+balls - +parseInt(balls/6)*6); } console.log(overs); return overs; }
if(!message.data.cric.match.teams_1_inn2_r[0]){
jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['balls'])+" overs)"); } if(!message.data.cric.match.teams_2_inn2_r[0]){
jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['balls'])+" overs)"); }
if(message.data.cric.match.teams_1_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_r[0]['extras']!=null){ jQuery('#extras_2_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_1_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_2_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras'])); }
//extras_1_r_2_ // if(prev_bat_team != message.data.cric.team_id){ jQuery('#widget_wrapper').load(document.URL + ' #widget_wrapper'); // } // prev_bat_team = message.data.cric.team_id // }
}); });
Full Scorecard
Sri Lanka
428/10 & 135/0
(33 overs)
Result
West Indies President's XI
272/10 & 0/0
(0 overs)
Match drawn
Sri Lanka’s 1st Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
Kusal Mendis | b M.Cummins | 0 | 1 | |||
Kusal Perera | c K.Powell b R.Cornwell | 65 | 93 | |||
Dinesh Chandimal | c S.Brooks b R.Reifer | 108 | 216 | |||
Angelo Mathews | lbw by R.Cornwell | 41 | 110 | |||
Roshen Silva | c R.Cornwell b J.Warrican | 28 | 52 | |||
Niroshan Dickwella | c J.Cambell b J.Warrican | 74 | 117 | |||
Dilruwan Perera | lbw by J.Warrican | 17 | 17 | |||
A.Dananjaya | b R.Cornwell | 30 | 54 | |||
L.Gamage | st J.Hamilton b J.Warrican | 22 | 51 | |||
K.Rajitha | lbw by R.Reifer | 2 | 19 | |||
L.Kumara | not out | 5 | 7 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Miguel Cummins | 20 | 5 | 70 | 1 | 3.50 |
Raymond Reifer | 19 | 1 | 75 | 2 | 3.95 |
Keon Joseph | 16 | 1 | 61 | 0 | 3.81 |
Jomel Warrican | 29.4 | 8 | 81 | 4 | 2.76 |
Rahkeem Cornwell | 35 | 7 | 124 | 3 | 3.54 |
West Indies President's XI ‘s 1st Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
J.Cambell | lbw by D.Perera | 62 | 52 | |||
K.Powell | (runout) A.Mathews | 60 | 81 | |||
S.Brooks | c A.Mathews b A.Dananjaya | 29 | 71 | |||
S.Ambris | b L.Kumara | 14 | 43 | |||
V.Singh | c L.Kumara b A.Dananjaya | 12 | 29 | |||
J.Hamilton | b A.Dananjaya | 4 | 15 | |||
R.Reifer | lbw by L.Kumara | 0 | 14 | |||
R.Cornwell | not out | 54 | 84 | |||
K.Williams | lbw by L.Kumara | 8 | 19 | |||
M.Cummins | lbw by D.Perera | 10 | 52 | |||
K.Joseph | b D.Perera | 0 | 7 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Lahiru Gamage | 13 | 2 | 58 | 0 | 4.46 |
Kasun Rajitha | 9 | 0 | 41 | 0 | 4.56 |
Dilruwan Perera | 19 | 2 | 50 | 3 | 2.63 |
Lahiru Kumara | 12 | 4 | 47 | 3 | 3.92 |
Akila Dananjaya | 20 | 2 | 46 | 3 | 2.30 |
Kusal Mendis | 4 | 0 | 16 | 0 | 4.00 |
Sri Lanka’s 2nd Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
K.Mendis | not out | 60 | 113 | |||
K.Perera | not out | 50 | 54 | |||
R.Silva | not out | 22 | 33 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Miguel Cummins | 5 | 1 | 25 | 0 | 5.00 |
Raymond Reifer | 6 | 0 | 33 | 0 | 5.50 |
Keon Joseph | 5 | 1 | 22 | 0 | 4.40 |
Jomel Warican | 5 | 1 | 17 | 0 | 3.40 |
Rahkeem Cornwell | 4 | 2 | 4 | 0 | 1.00 |
Vishaul Singh | 4 | 0 | 16 | 0 | 4.00 |
John Cambell | 3 | 0 | 12 | 0 | 4.00 |
Keiran Powell | 1 | 0 | 5 | 0 | 5.00 |
West Indies President's XI ‘s 2nd Innings
Batting | R | B |
---|
Bowling | O | M | R | W | E |
---|